Friday, June 16, 2017

மீன் பதப்படுத்தும் ஆலை வேண்டும் : ராதாபுரம் எம்.எல்.ஏ





நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் மீன் பதப்படுத்தும் ஆலை வேண்டும் என ராதாபுரம் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தாராம், அது சுவையான மீன்கள் என வேறு குறிப்பிட்டாராம்


உடனே அமைச்சர் ஜெயகுமார் அப்படியானால் எங்கள் எல்லோருக்கும் அந்த மீனை கொடுங்கள் என சொன்னாராம், மசோதா நிறைவேறும் பொழுது நிச்சயம் உண்டு என சொன்னாராம் ராதாபுரம் எம்.எல்.ஏ


அந்த இடிந்தகரையில்தான் கூடங்குளம் அணுவுலை உள்ளது, 5,6ம் அணுவுலை என புட்டீன் சொன்னதும் இந்தியாவில் சலசலப்பு வந்தது, கேரள முதல்வர் கூட கண்டித்தார்





ஆனால் தமிழக சட்டசபையில் அந்த அணுவுலையினை மறந்துவிட்டு, அப்படிஒன்று இருப்பதாகவே எண்ணாமல் மீன் பிடித்து விளையாடுகின்றனர், இவர்கள் அப்படித்தான் விளையாட்டு பிள்ளைகள்

அணுவுலை விரிவாக்கத்தை கண்டித்து தீர்மானம் போடவேண்டிய சட்டசபை அங்கு கிடைக்கும் மீன்களுக்காக நாக்கை சுழற்றி விவாதிக்கின்றது, என்ன கொடுமை?

இடிந்தகரை மீன் சுவையானதுதான், ஆனால் அணுவுலை வந்தபின் அது எல்லாம் பழங்கதையாகிவிட்டது

இப்பொழுது ஏன் இவர் இடிந்த கரை மீன் என்கின்றார், அவர் எல்லோருக்கும் வேண்டும் என்கின்றார்? அவர்கள் வேறு ஒரு மாதிரி கூடி தின்னும் ஜாதி, கூவத்தூரே உதாரணம்

ஒருவேளை இன்னொரு ரிசார்ட் மீட்டிங் இருக்குமோ? மறுபடியும் அடைத்து வைத்து மீனும், பணமும், தங்கமும், கொடுக்க போகின்றார்களோ? கருணாசுக்கு மறுபடியும் வேலையோ?

தெரியவில்லை,

ஆனால் எல்லோருக்கும் இடிந்தகரை மீன் உண்டு என எம்.எல்.ஏ சொல்லியிருப்பதை பார்த்தால் மறுபடியும் எதற்கோ ஒரு கடற்கரை ரிசார்ட்டிற்கு திட்டம் இருந்தாலும் இருக்கலாம் என்பது புரிகின்றது..




 

 



 

No comments:

Post a Comment