Friday, June 30, 2017

இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது

இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது, முதன் முதலாக அதனை சந்திக்கும் மக்களுக்கு குழப்பம் வரும்


சில பொருட்கள் விலை உயரும், சில பொருட்கள் விலை குறையவும் வாய்ப்பு உண்டு


உணவு பொருட்களுக்கு அவ்வரி பல நாடுகளில் பொருந்தாது , இந்தியாவில் எப்படி என தெரியவில்லை. ஆனால் உணவினை தொழிலாக நடத்தும் உணவகங்களில் கட்டாயம் உண்டு




மருந்துகளுக்கும் , மருத்துவ தொழிலுக்கும் சில நாடுகளில் விதிவிலக்கு உண்டு, இங்கு எப்படி என தெரியவில்லை, குறைந்த சதவீதம் என்றால் நல்லது


முதன் முறையாக இந்த வரிமுறையினை பின்பற்றும் பொழுது வியாபாரிகளுக்கு குழப்பம் வரும், மக்களுக்கும் குழப்பம் வரும், ஒரு குழப்பம் வந்துதான் மெல்ல தெளியும்


இது காலத்தின் கட்டாயம், மோடியின் இம்சை என சொல்வது அறிவுடமை ஆகாது, முன்பு மன்மோகன் சிங் அரசுதான் இதற்கு திட்டமிட்டது, அந்த அரசு தொடர்ந்தாலும் இதுவே நடந்திருக்கும்


நாட்டு நலனுக்கான திட்டம் இது, ஆனால் போதிய முன்னேற்பாடுகளையும், தகுந்த பயிற்சிகளையும் அரசு செய்திருக்கின்றதா என்பதுதான் தெரியவில்லை


இதனை அரசியலாக்கவும், இது மோடி அரசின் வேண்டாத வேலை என்றொரு கும்பல் கிளம்பும், அவர்களை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது,


இது நாட்டிற்கு அவசியம் தேவை, கட்டும் வரி மக்களுக்கும் புரியும், வியாபாரிகளிடமிருந்து துல்லியமாக வசூலிக்கவும் முடியும்


எது எப்படியோ, இந்த ஜிஎஸ்டி என்பதை பெரும் வரிவிதிப்பாக சொல்லி அப்பாவி மக்களிடம் இந்த வணிகபெருமக்கள் ஏமாற்றி சுரண்டாமல் இருக்கட்டும்.


அரசு அதில்மட்டும் மிக கவனமாக இருந்தால் நல்லது..



No comments:

Post a Comment