Thursday, June 22, 2017

விஜய் இனி "தளபதி" என அழைக்கபடுவாராம்

விஜய் இனி "தளபதி" என அழைக்கபடுவாராம்


இதுதான் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிப்பது என்பது, படம் சிக்கலில்லாமல் வர விழுந்து கிடப்பது


அரசியல் மீது பெரும் கனவுள்ளவர் சந்திரசேகர், ஒரு காலத்தில் மகனை முதல்வராக அமர்த்தியே தீரவேண்டும் என்ற முடிவு அவருக்கு அன்றே இருந்தது, அந்த தீ அவர் மனதில் என்றும் உண்டு




தன் மகன்/ மகள் முதல்வரானது தெரியாமல் செத்த‌ காஞ்சி நடராஜன், கோபால மேனன், திருக்குவளை முத்துவேலர், மைசூர் ஜெயராம் வரசையில் நாம் சேர கூடாது, நம் கண்முன்னே மகன் முதல்வராக வேண்டும் என்ற அணையாத தீ அவர் நெஞ்சில் உண்டு


முதலில் எல்லாம் விஜய்க்கு பட்டமில்லை, பின் கொஞ்சம் ரசிகர்கள் கூட கூட சத்தமில்லாமல் இளையதளபதி ஆனார், பின் ஆட்டமும் அதிகரித்தது


ஜெயா கொஞ்சம் முறைத்ததும் ஒரு சத்தமும் இல்லை, அடங்கி கிடந்தார்கள், அதுவும் விஜயகாந்த் வீழ்ந்ததும் பெரும் அப்செட்டானார் சந்திரசேகர்


கொஞ்ச காலம் சத்தமே இல்லை


இப்பொழுது கலைஞர் இல்லை, ஜெயா இல்லை ஒரு வெற்றிடம் இருக்கின்றது, இங்கு நுழைய பார்க்கின்றார் சந்திரசேகர்


"தளபதி விஜய்" என அவர் சொல்லலாம், அது அதிமுகவினருக்கு ரசிக்கலாம்


பதிலுக்கு "டெட்பாடி" உதயநிதி, "அடிமை " உதயநிதி என்றா இவர்கள் பட்டம் சூட்டமுடியும்? அது நன்றாயிருக்காது


திமுகவில் அண்ணாவும், ஸ்டாலினும் தளபதிகளாக இருந்தார்கள். அண்ணா முதல்வரானார், ஸ்டாலின் முதல்வராக போகின்றார், முன்னோட்டமாக செயல் தலைவராகிவிட்டார்


இப்பொழுது விஜய் தளபதியாகிவிட்டார் , அடுத்து என்ன கனவோ தெரியவில்லை


இளைய தளபதி என்பது தளபதியாக சுருங்கியிருக்கின்றது, அது இன்னும் சுருங்கி விஜய் ஆனால் நல்லது, ரஜினியே யோசிக்கும் சூழலில் சந்திரசேகருக்கு இது நல்லதல்ல‌


எல்லோரும் பெயரை சுருக்குகின்றார்கள், கேப்டன் உங்கள் "புரட்சி கலைஞர்" பெயரை கலைஞர் என சுருக்குங்கள் என வை.கோ என பெயரை சுருக்கிய கோப்பால் சாமி ஐடியா கொடுத்தாலும் கொடுக்கலாம்


அப்படி "கலைஞர்" விஜயகாந்த் ஆனால் அவர் கருணாநிதியாகிவிடுவாரா? தளபதி என்றவுடன் விஜய் ஸ்டாலினாகிவிடுவாரா?


அலெக்ஸாண்டர் என ஆயிரம்பேர் வந்தாலும், அந்த ஒரு அலெக்ஸாண்டருக்கு ஈடாகுமா? "ண்ண்ணா ண்ணா" என விஜய் அழைத்தாலும் அவர் திராவிட இயக்க தளபதியாக முடியுமா?


ஒரு மகாத்மா, ஒரு பெரியார், ஒரு பெருந்தலைவர், ஒரே தளபதி அண்ணா என்பதுதான் வரலாறு, ஸ்டாலின் தளபதி ஆனதே டூப்ளிகேட் இதில் இவர் வேறு அதனை டூப் செய்கின்றாராம்


கண்ணில்லாதவனுக்கு கண்ணாயிரம் என பெயர் வைக்கும் உலகில் விஜய் தளபதியானதில் ஆச்சரியமில்லை


அங்கே அஜித் ரசிகர்களின் பெரும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுகொண்டிருக்கும், அல்டிமேட் என்பதை அட்டு ஸ்டார் அஜித் என மாற்றலாமா? எனும் அளவிற்கு ஆலோசனை வெறி இருக்கும்


என்ன அட்டகாசம்? ஆளாளுக்கு புரட்சி தமிழன் , புரட்சி கலைஞன், எழுச்சி தமிழன், நெருப்பு தமிழன், தளபதி என ஆயிரம் பட்டங்கள்?


இவர்களுக்கு எல்லாம் பட்டம் இருக்கும் பொழுது குஷ்பூவிற்கு இல்லாவிட்டால் எப்படி?


"தமிழக‌ அரசி" குஷ்பூ என இப்போதைக்கு பட்டம் கொடுக்கலாம், பின்னாளில் "ராஜமாதா" குஷ்பூ என மாற்றிகொள்ளலாம்



No comments:

Post a Comment