Friday, June 16, 2017

ஆதார‌ சிடியுடன் சட்டசபைக்கு வந்த மு.க.ஸ்டாலின்!

பண விவகாரம்: ஆதார‌ சிடியுடன் சட்டசபைக்கு வந்த மு.க.ஸ்டாலின்!


அது என்ன ஆதாரம்? எந்த மீடியாவிடமும் இல்லாத ஆதாரம் இவரிடம் கிடைத்திருந்தால் இவரை பாராட்டலாம், ஆனால் என்ன சங்கதி என தெரியாமல் என்ன சொல்வது?


இவர் கொடுக்கும் ஆதாரத்தை தனபால் என்ன செய்வார்? அவருக்கு தெரியாத ஆதாரங்களா? அவர் காணாத காட்சிகளா?




இப்படி தனபாலுக்கு கொடுப்பதற்கு பதில் ஆளுநர் மாளிகை முன் ஒரு புரொஜக்டரை கட்டி கவர்னருக்கு காட்டலாம், கொஞ்சமாவது பலன் இருக்கும்,


தனபாலிடம் சிடி கொடுப்பதும், கூவத்தில் எறிவதும் ஒன்றுதான்.


கலைஞரும் இப்படி ஆதாரங்களை வீசி அசரவைப்பவர்தான், ஆனால் அதற்கு முன் 10 நிமிடம் உருக்கமான உரையாற்றுவார், அதிலே எதிர்கட்சி ஆடிவிடும்


அந்த உருக்கமான, முழக்கமான பேச்சு இப்பொழுது மிஸ்ஸிங்...



No comments:

Post a Comment