Wednesday, June 21, 2017

அமெரிக்காவிற்கு எதிரிநாடுகள் அதிகம்




Image may contain: 3 peopleஅமெரிக்காவிற்கு எதிரிநாடுகள் அதிகம், போட்டி நாடுகளும் அதிகம், அமெரிக்கா சுரண்டும் நாடுகளும் அதிகம் அதனால் அங்கெல்லாம் அமெரிக்க உளவாளிகள் இருப்பார்கள்


நமது அருகில் இருக்கலாம், நாம் பதிவினை பார்ப்பவராக இருக்கலாம், பாதிரியாக இருக்கலாம், இந்து சாமியாராக இருக்கலாம், பேராசிரியராக இருக்கலாம், போலி புரட்சியாளராக இருக்கலாம், சில தொழிலதிபராக இருக்கலம், பக்திமானாக இருக்கலாம்


அல்லது சில மிஷினரி எனப்படும் கிறிஸ்தவ‌ ஊழியர்களாக இருக்கலாம், செஞ்சிலுவை சங்க ஊழியராக இருக்கலாம், நிவாரண பணிகளுக்கு வரும் குழுவாக இருக்கலாம், (சுனாமி காலத்தில் அப்படி ஒரு குழு புலிகளை ஊடுருவி பார்த்தபின்புதான் பெரும் போர் தொடங்கியது)





எல்லா இடத்திலும் அவர்களுக்கு உளவாளிகள் உண்டு, எல்லா வேடத்திலும் உண்டு

அவர்களின் தூதரகங்கள் பல நாடுகளில் அந்த வேலையினைத்தான் செய்தன, அதனால்தான் அயதுல்லா கோமோனி அமெரிக்க தூதரகத்தை ஈரானை விட்டே விரட்டினார்

அப்படிபட்ட அமெரிக்காவின் ஒரு மாணவர் வடகொரியாவிற்கு சென்று சிக்கினார், 
அவர் ஏன் வடகொரியா சென்றார் என்பதே பெரும் சர்ச்சை, அமெரிக்காவில் இல்லாத படிப்பா அங்கு இருக்கின்றது? அல்லது பெரும் சுற்றுலா நாடா வடகொரியா?

அவர் வடகொரியாவில் 3 மாதம் முன் கைது செய்யபட்டபொழுது அவர் மீது பதியபட்ட சுமார் வழக்குகள் அடுத்த சர்ச்சை

அமெரிக்காவும் வடகொரியாவும் முன்பு அடிக்கடி உளவாளிகளை கைது செய்யும், நீ அவனை விடு, நான் இவனை விடுகின்றேன் என சொல்லி பரிமாறிகொள்வார்கள்

இப்பொழுது போரின் நுனி வரை சென்றிருக்கின்றார்கள், நிலமை அவ்வளவு சீரியஸ், இதில்தான் கடந்த மார்ச் மாதம் கைது செய்யபட்டு 15 வருடம் சிறைதண்டனை விதிக்கபட்ட அமெரிக்கனை விடுதலை செய்தது வடகொரியா

சிறையில் அவரை கடுமையாக வேலை வாங்கியதால் வெளிவந்த அவர் இறந்துவிட்டார்.

உளவு உலகம் அப்படியானது, சாக துணிந்துதான் உள்ளே செல்ல வேண்டும், மாட்டி கொள்ளாதவரை சிக்கல் இல்லை, மாட்டிவிட்டால் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள்.

ஒரு அமெரிக்க குடிமகன் வடகொரியாவினால் மறைமுகமாக கொல்லபட்டால் டிரம்ப் பொறுப்பாரா? கடுமையாக சீறுகின்றார், வடகொரியாவினை விட போவதில்லை என கடும் மிரட்டல்

போர்வரை சென்ற அமெரிக்கா ஏன் பின்வாங்கியது என்றால் அவர்களின் ஏவுகனை தடுப்பு அமைப்பு இன்னும் முழுமை பெறவில்லை, மேலாக வடகொரியாவிற்கு ரகசியமாக ரஷ்ய சீன ஆதரவு உண்டு என்பதும் தியரி

யுத்தம் நடத்தினால் எளிதில் தீராது, பெரும் விலை கொடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவிற்கு புரிந்துதான், தங்கள் பாதுகாப்பினை ரகசியமாக பலபடுத்துகின்றார்கள்

ஏவுகனை தடுப்பு சாதனத்தில், முழு நம்பிக்கை கிடைத்தபின் யுத்தம் தொடங்கும்

அதுவரை இப்படி டிரம்ப் டிவிட்டரில் திட்டிகொண்டே இருப்பார், வடகொரியா வழக்கம் போல ராக்கெட் விட்டு விளையாடிகொண்டே இருக்கும்













 


 

No comments:

Post a Comment