Thursday, March 23, 2017

இரட்டை இலை சின்னம் முடக்கம்



sp


தேர்தல் ஆணையம் முன் தினகரனும் பன்னீர் செல்வம் இரட்டை இலையினை இழுத்த இழுப்பில் சின்னத்தை தற்காலிகமாக முடக்கி விட்டது ஆணையம்


இனி இவர்கள் கோர்ட்டுக்கு சென்று மல்லுகட்டி மீட்கமுடியுமா என்பது பின்னாளைய காட்சிகள், ஆனால் ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக எனும் கட்சி பெயரும் இல்லை, இரட்டை இலை எனும் சின்னமும் இல்லை


அதனை அடித்த வால்போஸ்ட்டுகளை அடுப்பிலும், எழுதிய சுவர்களில் சுண்ணாம்பும் தெளித்துவிட வேண்டியதுதான்





இது நிச்சயமாக தினகரனுக்கு பெரும் பின்னடைவு, பன்னீர் கும்பல் வருத்தபட்டாலும், தினகரனை முடக்கியாயிற்று என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம்

ஜெயா சின்னம் இல்லை, ஆனால் ஜெயா சாயலில் நான் இருக்கின்றேன், ஆனால் இரட்டை விரலை மட்டும் காட்ட முடியாதே எனும் சிந்தனையில் தீபா இருக்கின்றார்

பன்னீரும் , தினகரனும் இனி என்ன சின்னம் கேட்பார்கள் என தெரியவில்லை, ஒற்றை இலை கேட்பார்களோ?

அப்படி கேட்டால், ஒரு விரலை காட்டவேண்டும். ஆள்காட்டி விரலை உயர்த்திகாட்டினால் எச்சரிக்கை தொணி நன்றாயிருக்காது, நடுவிரலை மக்களை நோக்கி நீட்டினால் இன்னும் மகா மோசம்

ஆக என்ன சின்னம் பெறுவார்கள், பெற்று நடிகை பத்மினி போல விரலால் அபிநயம் பிடிப்பார்கள் என்பது விரைவில் தெரியும்

ஒரு விஷயம் நோக்கலாம், 27 வருடங்களுக்கு முன்பு ஜாணகி இரட்டை இலையினை கைபற்றவிடாமல் ஜெயா நடராஜன் கும்பல்தான் முடக்கியது, அதன் பின் அரசியல் ஆட்டம் ஆடி கைபற்றியது

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமல்லவா? இதோ அவர்கள் சொல்லிகொடுத்த பாடத்தின் படி பன்னீர் கோஷ்டி செயல்படுகின்றது

தினகரன் இரட்டை இலை சின்னம் இல்லாமல் வெற்றிபெறுவேன் என்கின்றார், ஆனால் விரைவில் சின்னத்தை மீட்பாராம்

இரட்டை இலை இல்லாமல் வெற்றிபெறுவேன் என்றபின், ஏன் தேவையில்லாமல் அந்த‌ சின்னத்தை மீட்க வேண்டும் என யாரும் கேட்கவில்லை, கேட்கவும் மாட்டார்கள்

ஆனால் மிஸ்டர் தினகரனுக்கு நாம் ஒன்று சொல்லிகொள்ளலாம்

அழகாக சமாளித்தீர்கள் தினகரன், ஆனால் கடைசியில் "இது திமுக சதி, திமுக ஒழிக" என சொல்ல மறந்துவிட்டீர்கள்.

சின்னம் குறித்து அடிக்கடி கவலைபட்டவர் அங்கிள் சைமன்..

கடந்த தேர்தலில் அங்கிள் சைமன் இப்படியாக சொல்லிகொண்டிருந்தார்

ஒரு கட்சிக்கு ஒரு தேர்தலில் ஒரு சின்னம்தான் வழங்கவேண்டும், சின்னங்களை மாற்றவேண்டும் , அப்படி மாற்றினால் நாங்கள் வெல்வோம் என தொண்டை சபதம் எடுத்திருந்தார்

அங்கிள் சைமன், இதோ இரட்டை இலை இல்லை, எங்கே? வென்று காட்டுங்கள் பார்க்கலாம்..




 

தேர்தல் ஆணைய ஆவணத்தை பார்வை இட இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment