Thursday, March 23, 2017

ஆர்கே நகர் :பெயரும் சின்னமும் குழப்பமும் .....



thopp


ஒரு வழியாக தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கபட்டிருக்கின்றதாம்


முதலில் பேட் என்றார்கள், வேண்டாம் அதை கொண்டே கட்சிக்காரர்கள் + திவாகரன் போன்ற குடும்பத்தார் அடிக்க வரலாம் என்பதால் மாற்றிவிட்டார்கள்


பின் ஆட்டோ என்றார்கள், முன்பு ஆட்டோக்களில் ரவுடிகளை அனுப்பிய சொந்த காட்சிகளே கண்ணுக்குள் வந்ததால் விட்டுவிட்டார்கள்





அதுவும் 100 பேர் கொண்ட மன்னார்குடி குடும்பத்திற்கு ஆட்டோ சின்னம் என்றால் அவர்களுக்கே கோபம் வராதா? ஆட்டோவில் 3 பேர்தானே அமரமுடியும்

சசிகலா, தினகரன், திவாகரன் என அமர்ந்து நடராஜன் ஆட்டோவோடுவதை அவர்கள் எப்படி சகிப்பார்கள்? அதனாலேயே ஆட்டோ சின்னம் நிராகரிக்கபட்டது

இல்லையென்றால் இந்நேரம் தினகரன் நான் ஆட்டோக்காரன்..ஆட்டோகாரன் என கிளம்பியிருப்பார், நல்ல வேளையாக தேவாவிற்கு ராயல்டி பிரச்சினை வராமல் போயிற்று

இப்பொழுது தொப்பிக்கு வந்திருக்கின்றார்கள்

என்ன இருந்தாலும் அன்றே எம்ஜிஆரின் வழுக்கை தலையினை காத்தது அந்த தொப்பி, அது மட்டும் இல்லையென்றால் எம்ஜிஆர் அழகில் 90% சரிந்திருக்கும்

அப்படி அவர்களை தொடக்கத்தில் காத்தது தொப்பி, அந்த நன்றியினை மறப்பார்களா?

இனி தினகரன் மட்டும் அல்ல, அவரின் கட்சிக்காரர்கள் எல்லாம் தலையில் தொபியோடும் அதில் அம்மா படத்தோடும் அலைவார்கள்

தொப்பி தலையரின் கட்சி மறுபடியும் தொப்பி கட்சியாகிவிட்டது.

எம்மாதிரி தொப்பி வழங்கபட்டிருக்கின்றது என தெரியவில்லை, எம்ஜிஆர் "அன்பே வா" படத்தில் சரோஜா தேவிக்கு வைத்த தொப்பியின் சாயல் இருக்கலாமோ என்னமோ?

தொப்பி காட்டி வாக்கு வாங்கிவிட்டு மக்கள் தலையில் முக்காடு போட்டதுதான் அவர்கள் வரலாறு,

மறுபடி தொப்பியுடன் வருகின்றார்கள்

முக்காடு போட மக்கள் தயாரா? என்பது இனிதான் தெரியும்..

இனி கார்த்திக், விஜயகுமார், சத்யராஜ் , ஆனந்தராஜ் போன்றவர்களுக்குத்தான் சிக்கல்

இவர்கள் எங்கும் தொப்பியோடுதான் அலைவார்கள், இனி யாராவது இவர்களை தொப்பியோடு கண்டால் நீங்கள் தினகரன் கட்சியா என கேட்பார்கள்...

இவர்களுக்கு வந்திருக்கும் சோதனை இப்படியானது..

அவர்களுக்கு மட்டுமல்ல, காவல்துறையினரை தவிர இனியாரும் தமிழகத்தில் தொப்பி அணியாதபடி செய்தாகிவிட்டது











எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்தபொழுது அவர் தொப்பி வைத்துதான் வாக்கு கேட்டோம், வென்றோம் . அதனை போல இப்பொழுது தொப்பி சின்னத்துடன் வாக்கு கேட்க போகின்றோம்" : நவநீத கிருஷ்ணன்


எம்ஜிஆர் குளித்துகொண்டிருக்கும் பொழுது இவர்கள் எதனை காட்டி வாக்கு கேட்டார்கள்?


எம்ஜிஆர் தூங்கும் பொழுது அவர் கழற்றி வைத்த பல்செட்டினை காட்டி வாக்கு கேட்டார்களா? எனும் அளவிற்கு சிந்தனை செல்கின்றது...





வேண்டாம் நிறுத்திகொள்ளலாம்

மிஸ்டர் நவநீத கிருஷ்ணன் நீங்கள் ஜெயாவின் லிப்ஸ்டிக்கினையும் , முகத்து பவுடர் டப்பாவினையும் எடுத்துவந்து வாக்கு கேட்டால் என்ன?

கொள்கை, திட்டம் என ஒன்றும் கிடையாது, மாறாக எம்ஜிஆரின் தொப்பி, பல்செட், ஜெயாவின் லிப்ஸ்டிக் என கிளம்புகின்றார்கள.

இப்படியும் ஒரு கட்சி...




 






பன்னீர் அணி அம்மா அதிமுக அணி எனவும், சசி கட்சி அதிமுக அம்மா அணி எனவும் போட்டியிடுமாம்


என்ன வித்தியாசம்?


"நாக பதனியா? நாகப் பதனியா?" என வடிவேலுவிடம் வந்த பஞ்சாயத்து நிலைதான்




அந்த எம்ஜிஆர் என்றொருவரை மறந்து தொலைத்தவரை நல்லது


இப்பொழுது அம்மா அதிமுக அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னமாம், அதிமுக அம்மாவிற்கு மட்டை சின்னமாம்


எப்படியோ பன்னீர் அணிக்கு ஒரு அதிர்ஷ்டம்


எம்ஜிஆர், ஜெயாவிற்கு பின் இரு விரல்களை காட்டும் வாய்ப்பு அவருக்கே கிடைத்திருக்கின்றது, இனி இரு விரல்களோடு அலைவார்கள்


ஆனால் தோற்றுவிட்டால் அதே மின்கம்பத்தில் வைத்து பாஷா ரஜினி ஸ்டைலில் கட்டி வைத்து நொறுக்கபடுவார்கள் என்பது அடுத்த விஷயம்...


தீபாவிற்கு என்ன சின்னமோ தெரியவில்லை


அவரின் கனவே நேராக நாற்காலி என்பதுதான், அதனால் அம்மணி நாற்காலி சின்னம் கேட்கலாம், அது கிடைக்காத பட்சத்தில் சிறிய ஸ்டூல், திண்ணை, திண்டு, ஆலமரத்தடி அப்படி ஏதும் கேட்டாலும் கேட்கலாம்






தொப்பி, மட்டை, ஆட்டோ என மூன்று சின்னங்களை மாற்றி மாற்றி சொல்லிகொண்டிருக்கின்றது சசிகலா அணி


அப்பல்லோ செய்திகளை போல மொத்தமாக குழப்புவது இவர்கள் ஸ்டைல் போலிருக்கின்றது....







 

No comments:

Post a Comment