Tuesday, March 21, 2017

டிடிவி தினகரனை சந்தித்தார் வைகுண்டராஜன், இன்னும் பிற....




டிடிவி தினகரனை சந்தித்தார் வைகுண்டராஜன்.


நெல்லையில் கலெக்டரின் நடவடிக்கை இறுகுகின்றது, வைகுண்டராஜனின் அலுவலகத்தை இடிக்க அளந்துகொண்டிருக்கின்றார்கள்


என்ன மர்மமோ தெரியவில்லை, வழக்கமாக எந்த கலெக்டர் அவரை எச்சரித்தாலும் அடுத்த நொடி மாறுதல் கடிதம் வரும் சம்பிரதாயம் கருணாகரனுக்கு வரவே இல்லை





இந்நிலையில் மிக வேகமாக ஓடிசென்று தினகரனை சந்தித்திருக்கின்றார் அண்ணாச்சி

சசிகலா குடும்பம் எதிர்பார்த்தது நிச்சயம் இதனைத்தான்..

இதன் மூலம் சசிகலா கும்பல் உலகிற்கு சொல்வரும் விஷயம் இரண்டு

முதலாவது தமிழகத்தில் உள்ள எல்லா தொழிலதிபர்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, இன்று தமிழகத்தை ஆள்வது நிச்சயம் தினகரன் தான்.

இரண்டாவது விஷயம் ஆனானபட்ட வைகுண்டராஜனே எங்களிடம் கதறும்பொழுது பன்னீருக்கோ, தீபாவிற்கோ எவனாவது பைனான்ஸ் செய்தால் விடமாட்டோம்

இப்படி தமிழகத்திற்கு சொல்லாமல் சொல்கின்றார்கள், இல்லாவிட்டால் தொலைபேசியில் பேசவேண்டிய விஷயம் எல்லாம் இப்படி தமிழக செய்தியாக வெளிவருமா?

ஆக அண்ணாச்சி தினகரனை பார்த்துவிட்டார் அல்லவா?, இனி அவரின் கட்டடம் இடிக்கடுமா? இடிபடாதா என்பதை பொறுத்து இந்த சந்திப்பின் முடிவு பின்னாளில் தெரியவரும்

நெல்லை கலெக்டரின் நடவடிக்கை அவரின் சொந்த நடவடிக்கையா? இல்லை யாருக்காகாவாது களமிறங்கினாரா என்பதும் தெரியவரும்

கலெக்டர் நிலைதான் இப்பொழுது சிக்கல், இனி அவர் பின்வாங்கினால் அவர் பெயர் கெட்டுவிடும், முன்சென்று கட்டத்தை இடித்தால் அரசு சிக்கல் வரலாம்..

ஆக ஒரு அரசியல்வாதியும், ஒரு தொழிலதிபரும் ஒரு கலெக்டருக்கு "சத்திய சோதனை" வைத்திருக்கின்றார்கள்









 சிங்கப்பூர் குடியுரிமை விவகாரம், திமுக சொல்வதை நம்பாதீர் : தினகரன் ஆவேசம்

முன்பு அமலாக்கதுறை வழக்கின்பொழுது நான் சிங்கப்பூர் குடிமகன் என்றது இவர்தான்

இன்று நான் மண்ணின் மைந்தன் என சொல்வதும் இவர்தான்


அதாவது வழக்கு என்றால் சிங்கப்பூர் குடிமகனாகவும், பதவி என்றால் தமிழ்குடிமகனாகவும் அன்னார் மாறிகொள்வார்

இதில் திமுக எங்கிருந்து வந்தது?

முன்பெல்லாம் அதிமுகவினர் பேசி முடிக்கும்பொழுது "அம்மா வாழ்க" என சொல்லி முடிப்பார்கள், இப்பொழுதெல்லாம் என்ன கேட்டாலும் "திமுக ஒழிக" என்று சொல்லியே முடிக்கின்றார்கள்

பாவம் அவர்களே ஒருமாதிரி ஆகிவிட்டார்கள்..

ஒன்றா இரண்டா சிக்கல்?





 


 அதிமுக ஆலோசனை கூட்டத்தில் வளர்மதியும் , நிர்மலா பெரியசாமியும் மோதல்







எம்ஜிஆருக்கு பின் அது முழுக்க பெண்கள் கட்சியாக போய்விட்டது


எம்ஜிஆருக்கு பின்பு அக்கட்சிக்கு பெண்களே சண்டையிடுகின்றார்கள், ஜாணகி, ஜெயா, சசிகலா என அது தொடர்ந்தது




எங்கே சசிகலாவோடு அது முடிந்துவிடுமோ? நமீதா வேறு கட்சியில் காணவில்லையே என்ற அச்சத்தில் மண் அள்ளி போட்டிருக்கின்றார்கள் வளர்மதியும், நிர்மலாவும்


ஒரு பெண்ணின் இடத்திற்கு பெண்கள் போட்டியிடுவது அவர்கள் கட்சி கொள்கைபடி நல்லது


நிர்மலா பெரியசாமி சாமான்யர் அல்ல, கலைஞர் சட்டசபைக்கு வந்தால் வேட்டியினை உருவிவிடுவோமா என கேட்டவர்


இங்கு நாஞ்சில் சம்பத் மோதியிருந்தால் அவர் வேட்டிக்கு ஆபத்து வந்திருக்கும்


ஆனால் வளர்மதியும், சி.ஆர் சரஸ்வதியும் வேட்டி கட்டாமல் சேலை கட்டியிருந்தால் சிக்கல் இல்லை...















ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தார் சீமான்


அங்கிள் சைமனுக்கும் அவ்வப்போது ஒரு ஆடு சிக்கிகொள்கின்றது,


கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளக்கும் ஈசன், அவருக்கும் ஒரு வேட்பாளரை கொடுத்துவிடுகின்றான்.


அரசியல் கணக்கிலும் ஆண்டவன் மிக கரெக்டாக இருப்பார் போல..












 




 


 

No comments:

Post a Comment