Friday, March 17, 2017

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்....

ஒரு விஷயம் புரிகின்றது, அதுவும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நன்றாக புரிகின்றது


இந்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் யாரையும் வளர்த்துவிட நினைப்பதே இல்லை


எம்ஜிஆர், கலைஞர், ஜெயா என எல்லோரும் அப்படித்தான் அரசியல் செய்தார்கள், இப்பொழுது ஸ்டாலினும் அதனைத்தான் செய்கின்றார்




வைகோ, விஜயகாந்த் கட்சிகளில் யாருமே இல்லை என்பதால் அவர்களுக்கு இந்த சிக்கல் எல்லாம் இல்லை, சீமானுக்கும் அதே நிலை


இப்போதுள்ள கோஷ்டிகள் இருக்கும் வரை காங்கிரசுக்கு நித்திய சமாதி, அது உருப்படாது. கோஷ்டிகளில் தலமை யாருக்கு என்பதிலே அவர்கள் காலம் கழிந்துவிடும்..


பலரை கட்சிக்குள் வளர்த்துவிடுவது தனக்கு ஆபத்து என நினைத்தே இவர்கள் யாரையும் வளரவிடுவதில்லை, அவர்கள் கட்சியின் நிலையும், வேட்பாளர் நியமணமும் அதனைத்தான் சொல்கின்றன‌


இது அவர்களை காக்குமே அன்றி, கட்சியினை ஒரு காலமும் வளர்க்காது, மாறாக அழிக்கும்


கட்சியினை எப்படி வளர்க்கவேண்டும் என்பதனை சொன்னவர்கள், எடுத்துகாட்டாய் திகழ்ந்தவர்கள் இரண்டே பேர்


அன்னாளில் அண்ணா, இந்நாளில் அத்வாணி


சும்மா சொல்ல கூடாது, இருவரும் கட்சியில் பலபேரை வளர்த்துவிட்டிருக்கின்றார்கள், அவன் நம்மை நெருங்கிவிடுவானோ? இவன் அல்லது இவள் நமக்கு போட்டியாக வந்துவிடுவானோ என்ற கவலை எல்லாம் அவர்களுக்கு இல்லை


அதனால்தான் அன்றைய திமுகவும் பின்னாளில் பாஜகவும் வேகமாக வளர்ந்து ஆட்சியினை பிடிக்கமுடிந்தது


திமுக போன்ற கட்சிகள் பின்னாளில் தேங்கி நிற்பதும், அதிமுக திகைத்து நிற்பதும் இப்படி தலமைகள் செய்த, அதாவது யாரையும் வளரவிடாமல் செய்த தவறினாலேயே...


அதே தவறினை மறுபடி மறுபடி செய்கின்றார்கள்


இது கட்சியினை நிச்சயம் அழிக்கும், வளரவிடாது


அவ்வகையில் அண்ணாவும், அத்வாணியும் தலமை பண்பின் நிறைகுடங்கள்


அவர்கள் சுயநலம் பார்த்திருந்தால் அக்கட்சிகள் இவ்வளவு வளர்ந்திருக்காது


அண்ணாவிற்கு அடுத்த தலைவர்கள் அப்படி இருந்திருந்தால் தமிழக அரசியலும் இவ்வளவு சீரழிந்திருக்காது..


அண்ணாவின் அந்த கட்சிக்காரர்களை வளத்துவிடும் கொள்கையினை மறந்துவிட்டுத்தான் அண்ணா.. அண்ணா.. என அவர்கள் சொல்வதுதான் மகா விசித்திரம்..


ஆக திராவிட கட்சிகளை அழிப்பது அவர்களேதான், வேறு யாரும் அல்ல‌






பட்ஜெட்டுக்கு வராமல் 4 அமைச்சர்கள் எங்கே - மு.க.ஸ்டாலின்?


சரி அந்த 4 அமைச்சர்களும் வந்தால் மட்டும் இவரின் கேள்விக்கு பதில் சொல்லிவிட போகின்றார்களா?


அவர்களே பாவம், இரட்டை இலையினை காக்க இமயமலை ஏறிகொண்டிருக்கின்றார்கள், அவர்களையா கலாய்ப்பது?




பதிலுக்கு அவர்கள், திருவாரூர் எம்.எல்.ஏ கூடத்தான் சட்டமன்றம் வரமுடியவில்லை என கேட்டுவிட்டால் என்னாவது?












சிம்லா முத்துசோழனுக்கு வாய்ப்பு மறுப்பு: நாடார் மஹாஜன சங்கம் கண்டனம்!

சங்கமே, அது இடைத்தேர்தலா அல்லது நாடார் சங்க தேர்தலா?

உங்கள் அழிச்சாட்டியத்திற்கு எல்லையே இல்லையா? கடந்தமுறை அந்த சிம்லாவினை ஜெயிக்க வைத்தால் என்ன?


இன்றும் ஏன் இவ்வளவு வருத்தம்? சங்கத்தின் சார்பாக சரத்குமாரினை நிறுத்தினால்தான் என்ன?

அது என்னவோ தெரியவில்லை, ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பதில் இந்த நாடார் சங்கங்களும் தி.கவின் வீரமணியும் ஒன்று

தொழில்பாதுகாப்பு என்றொரு கவலை இருக்கும் அல்லவா?

அதேதான் அந்த கவலைதான் இவர்களை எல்லாம் ஆளுங்கட்சிக்கு சார்பாக பேசவைத்துகொண்டே இருக்கின்றது.









 

விரைவில் சொல்லத்தானே போகின்றீர்கள் தலைவர் என்று, அதனை சொல்லி அழைத்தால்தான் என்ன?


இன்னும் ஏன் "செயல் தலைவர்", "தளபதி" என அழைத்துகொண்டே இருக்கவேண்டும்


அவர் தலைவர் ஆனால்தானே அடுத்த தளபதி உருவாகமுடியும்..





ஒருவேளை அதில்தான் இவர்களுக்கும், அவருக்கும் விருப்பம் இல்லையோ என்னமோ?

தலைவர் என அழைத்தால், கலைஞர் ஓடிவந்தா தடுக்க போகின்றார்?

எதற்கு வீணாக நடிக்கவேண்டும், "தலைவர்" என்றே அழையுங்கள், ஒன்றும் குறைந்துவிடாது..

ஆனால் அடுத்த தளபதி யார்?? என்பது பற்றி நாம் ஒன்றும் கேட்கவில்லை..






 இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் : தினகரன் நம்பிக்கை

தமிழ்நாடே கிடைக்கும் என கனவில் இருப்பவருக்கு, இரட்டை இலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்காதா?

:அத்தனைக்கும் ஆசைபடு" எனும் ஆனந்த அலையில் அன்னார் இருக்கின்றார்..







 


No comments:

Post a Comment