Thursday, March 23, 2017

போற்றி பாடடி பெண்ணே...அண்ணாச்சி காலடி மண்ணே

தூத்துகுடி கலெக்டர் அலுவலகத்தில் சர்ச்சைகுரிய கடிதத்தில் சிக்கியது விவி மினரல்ஸ், குடோன் சீல் வைப்பு


அதாவது கலெக்டர் ஏற்றுமதிக்கு அனுமதி கடிதம் கொடுத்ததாக கம்பெனி நிர்வாகம் கப்பலில் சரக்கேற்ற கிளம்பியது, ஆனால் கலெக்டர் அப்படி ஒரு கடிதம் எழுதவில்லை என மறுத்ததாக சொன்னதை அடுத்து நடவடிக்கை எடுக்கபடுகின்றது.


ஆழநோக்கினால் கையிலிருக்க்கும் சரக்கினை எப்படியாவது விற்றுவிட வேண்டும், அதன்பின் வருவதை சமாளிக்கலாம் என அண்ணாச்சி தரப்பு துடிப்பது தெரிகின்றது




மெட்ரிக் டன்கள் அளவிற்கு அவர் குடோனில் பதுக்கபட்டிருக்கின்றது என்றால், கொஞ்சநாளாக ஏற்றுமதி சிக்கல் இருந்திருப்பதும் புரிகின்றது..


முதன் முறையாக அவரின் குடோன் சீல் வைக்கபடுகின்றது, அவரின் கட்டத்திற்கு நாள் குறிக்கபடுகின்றது


சுருக்கமாக சொன்னால் கட்டம் கட்டி அண்ணாச்சியினை அடிக்கின்றார்கள், இதுவரை 30 வருடமாக அரசு புகாத இடங்களில் எல்லாம் அரசு அதிகாரிகள் புதிதாக புகுந்து நடவடிக்கை எடுக்கின்றார்கள்...


ஆனால் மிக ஆச்சரியமாக அவருக்கு விசுவாசமான எந்த சங்கமும் வாய்திறக்கவில்லை, சங்கத்து ஆட்கள் சத்தமே இல்லை


இது 50,000 தொழிலாளர் வாழ்க்கை பிரச்சினை என தத்துவம் பேசிய சங்கத்து தலைகள் எல்லாம், சங்கில் கத்தி வைத்தது போல கம்மென்று இருக்கின்றன...


"போற்றி பாடடி பெண்ணே...அண்ணாச்சி காலடி மண்ணே" என பாடிய சங்கத்து நபர்கள் ஒருவரும் முணக கூட இல்லை..


மிக சரியாக 1989ல் தொழிலுக்கு வந்தார் வைகுண்டராஜன், ஜெயா வளர வளர அவரும் வளர்ந்தார், ஜெயா மறைந்தபின் வைகுண்டராஜனும் சரிவினை சந்திக்கின்றார்


இருவருக்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருந்திருக்கலாமோ என்னமோ?



No comments:

Post a Comment