Tuesday, March 21, 2017

நடிகர் தனுஷ் வழக்கில் திருப்பம்





தனுஷ் வழக்கில் திருப்பம் : அங்க அடையாளங்களை லேசர் மூலம் அழித்திருக்கின்றார் என பரபரப்பு


அதாகபட்டது நடிகர் தனுஷ் எங்கள் மகன் என சிங்கங்கை மாவட்ட தம்பதி ஒன்று வாதிட்டு வருகின்றது, காணாமல் போன தங்கள் மகன் தான் தனுஷ் எனவும், அவரது அங்க அடையாளம் (தழும்பு, மச்சம் இன்னபிற) பள்ளி சான்றிதழ்படி இது எனவும் குறிக்கபட்டிருந்ததை சமர்பித்தது.


நீதிமன்றம் சோதனைக்கு உத்தரவிட்டது





தனுஷை அழைத்தால் நீதிமன்றம் செல்லாமல் இருக்க அவர் என்ன கமிஷனர் ஜார்ஜா? பள்ளி சான்றிதழ்படி தனுஷின் அடையாளங்களை சோதித்த மருத்துவர்கள் அவை லேசர் மூலம் நீக்கபட்ட தகவலை உறுதிபடுத்தியுள்ளனர்

ஆக தனுஷ் ஏதோ தகிடுதித்தோம் வேலை செய்திருப்பது உறுதியாகின்றது

இனி நீதிமன்றம் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொல்லலாம் என தகவல்கள் வருகின்றன?

தனுஷ் என்ன செய்வார்? ஏதும் வெளிநாடு சென்று டி.என்.ஏ வினை மாற்றிவிடுவாரோ? அப்படி எல்லாம் முடியாது

பொதுவாக அங்கிள் சீமான் கட்சியினர்தான் இந்த டி.என்.ஏ டெஸ்ட் எல்லாம் பற்றி பேசுவார்கள், அதனை எடுத்தால் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பரம்பரை வரை கண்டறியலாம் என்பார்கள்

இனி தனுஷூக்கு அந்த சோதனை செய்யபடலாம்

அவர் யார் மகன் என தெரிவதில் அந்த தம்பதி ஆர்வமாக இருக்க, ரஜினி அப்படி ஒன்று நடந்துவிட்டால் நமக்கு இரு சம்பந்தியா? என யோசித்து கொண்டிருக்க...

நாம் தமிழர் கட்சியினரோ அவர் தமிழரா இல்லையா என அறிந்துவிடலாம் என பெரும் எதிர்பார்ப்பில் இருக்கலாம்..




 

 



 

No comments:

Post a Comment