Thursday, March 16, 2017

பட்ஜெட் உரையை ஜெ. நினைவிடத்தில் வைத்து நிதியமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி




Image may contain: 2 people


பட்ஜெட் உரையை ஜெ. நினைவிடத்தில் வைத்து நிதியமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி


ஏனோ பெங்களூர் சிறைக்கு எடுத்து சென்று சரிபார்க்க மறந்துவிட்டார்


இப்படி ஒரு கொடுமை உலகில் எந்த மூலையிலாவது நடக்குமா? ஆனானபட்ட அமெரிக்கா பட்ஜெட் என்றாவது ஜார்ஜ் வாஷிங்டன் சமாதியிலோ, சீன பட்ஜெட் மாசேதுங் மசோலியத்திலோ வைக்கபட்ட வரலாறு உண்டா?





சிங்கப்பூரின் பட்ஜெட் லி குவான் யூ சமாதியில் வைக்கபட்ட செய்தி உண்டா?

இனியும் நாம் தமிழ்நாட்டு தமிழர்கள் என சொல்வது எவ்வளவு அவமானம்?

இப்படி ஒரு கோமாளித்தனத்தோடு தொடங்குவது 8 கோடி தமிழர்களை ஆளும் மாநில அரசின் வரவுசெலவு கணக்கு என்பதுதான் தமிழக சோகம்...

இம்மாநிலம் உருப்படும்??..

இன்றுமுதல் யார் கேட்டாலும் நான் தமிழ்பேசும் கென்யாகாரனோ அல்லது ஏதும் ஆப்ரிக்க குழுவினரோ என சொல்லிவிட போகின்றேன், என் உருவ‌ அமைப்பும் அதற்கு துணைவரும்











 


 

No comments:

Post a Comment