Friday, March 24, 2017

வீடுகள் திறப்புவிழாவிற்காக யாழ்பாணம் செல்கின்றார் ரஜினி



Raji.jpg


லைக்கா நிறுவணம் தமிழர்களுக்காக கட்டியிருக்கும் வீடுகள் திறப்புவிழாவிற்காக யாழ்பாணம் செல்கின்றார் ரஜினி


"கத்தி" படம் வரும்பொழுது நடந்த களபேரம் நினைவிருக்கின்றதா? அதாவது இந்த லைக்கா உரிமையாளர் சுபாஷ்கரன் என்பவர் ராஜபகசே கூட்டாளி எனவும், ராஜபகசேயின் பினாமி எனவும் ராஜபக்சேயின் பணமே தமிழக சினிமாக்களில் வந்தது, இதனை அனுமதிக்க முடியாது எனவும் உணர்வாளர் அமைப்புகள் கொந்தளித்தன


விஜய் பட்டபாடு கொஞ்சமல்ல‌


ஆனால் பணம் பத்தும் செய்யும், சுபாஷ்கரனிடம் இருந்தால் 11ம் செய்யும், தமிழக நிலமைக்கு அது 12ம் செய்யும்


அப்படி இன்று ரஜினியின் எந்திரன் 2.0 படத்தினை லைக்கா தயாரிக்க, ரஜினிக்கும் அவர்களுக்கும் நட்பு உண்டாயிற்று


இந்நிலையில்தான் லைக்கா நிறுவணம் ஈழத்தில் கட்டியிருக்கும் வீடு திறப்புவிழாவிற்கு ரஜினி செல்கின்றார்


ஒரு 6 வருடம் முன்னால் செல்லுங்கள்


ராஜபகசே அதிபராக இருந்தார், இந்தியாவில் இருந்து காக்கா இலங்கை சென்றாலும் இங்கு கொதித்தார்கள்


சல்மான் கான் , அசின் முதல் இந்திய கிரிக்கெட் அணிவரை மிரட்டினார்கள், கடும் மிரட்டல் அழிச்சாட்டியம்


மிரட்டியவர்கள் யாரென்றால், முன்பு விசா பெற்றோ, கள்ள தோணியிலோ சென்று முன்பு பிரபாகரனை சந்தித்தவர்கள், அதாவது புலிகள் இருந்த இலங்கைக்கு இவர்கள் செல்வார்கள், புலிகள் இல்லாத இலங்கைக்கு யாரும் செல்ல கூடாது எனும் தத்துவம்


இலங்கை அரசு ரத்தகறை படிந்ததது, அதனை புறக்கணிக்க வேண்டும் என கோஷமிட்டார்கள்


இப்பொழுது மகிந்தா ராஜபக்சே இல்லை, ஆனால் அவர் அரசில் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்த மைத்திரிபாலாதான் இன்றைய அதிபர்


அந்த ரத்த்கறையில் அவருக்கும் பங்கு உண்டு, சமீபத்தில் கூட தமிழனை சுட்டுகொன்ற அதே சிங்கள அரசின் உச்சம் மைத்திரிபாலா..


ஆக இன்றும் ரத்தகறை கொண்ட ஒருவர்தான் அதிபராக இருக்கின்றார், அவருடன் தான் லைக்கா நிறுவணத்துடன் ரஜினிகாந்தும் சிரித்துகொண்டு நிற்க போகின்றார்.


தமிழகத்தில் ஏதும் ஒரு சத்தம் வரும் என நினைக்கின்றீர்கள்? வராது


ஏன்?


தமிழக ஈழ உணர்வுகள் 1990க்கு முன் வேறுமாதிரியானவை, ஆனால் 1990க்கு பின் மொத்தமும் தமிழக அரசிலனாவை


ஒரு கட்டத்தில் காங்கிரசுக்கும், திமுகவிற்கு எதிரானதாக அவை மாற்றபட்டுவிட்டன, அதன் நோக்கம் இப்படி சிலரால் நாசமாயிற்று. அதாவது காங்கிரசுக்கும், திமுகவிற்கு தொல்லை கொடுக்கவே தமிழுணர்வோடு பேசுவார்கள்..


டெல்லியில் காங்கிரஸ் அரசு இருக்கும் வரை கத்துவார்கள், ஆட்சி மாறிவிட்டால் எல்லாம் மவுனம்


முன்பு இலங்கைக்கு யாரும் போக கூடாது, ஏய்ய்ய்ய்ய் என பொங்கியவர்கள் இப்பொழுது ஏன் அமைதி?


ரஜினிக்கு என்றும் பாஜகவிடம் பெரும் செல்வாக்கு உண்டு, அது அவரின் அபிமான கட்சி, இந்நிலையில் ரஜினிக்கு எதிராக பொங்கினால்?


ஏற்கனவே தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு நிற்கும் நிலையில், இந்த உணர்வாளர்களின் ஜாதகமே மத்திய அரசின் கையில் உண்டு


"கவனிக்க வேண்டிய விதத்தில்" கவனிப்ப்பார்கள்


அதனால்தான் ரஜினிவிஷயத்தில் ஏதும் இவர்கள் வாய்திறக்கபோவதில்லை, அவ்வளவு ஏன்? மகிந்த ராஜபக்சே கூட ரஜினி படத்தில் பிராதான வில்லன் வேடத்தில் நடிக்க வந்தால் கூட இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்.


நிச்சயமாக ராஜபக்சே ஏராளமான சொத்துகுவித்தது நிஜம், லைக்காவுடன் அவருக்கு பணபரிவர்த்தனைகள் இருந்ததும் நிஜம்


இப்பொழுது கோடம்பாக்கத்தில் பாயும் பணங்களில் ராஜபக்சேவின் பணங்களும் உண்டு என்பது ரகசியமல்ல, அதே நேரம் புலிகளின் முன்னாளைய முதலீடும் உண்டு


ஆக ஒருபக்கம் ஈழம், போராட்டம், தீக்குளிப்பு என மக்களின் உணர்ச்சிகள் பொங்க வைத்துவிட்டு, இன்னொரு புறம் ராஜபக்சே புலிகள் என இருவரின் முதலீடும் தமிழகத்தில் செய்யபட்டு அது பெரும் லாபமும் இருவருக்கும் கொடுத்திருக்கின்றது.


மிக சோகமான உண்மை இது, அது இருக்கட்டும்


எப்படியோ இன்று நல்ல காரியம்நடக்கின்றது, அந்த மக்களில் 200 குடும்பங்களுக்கு லைக்கா வீடுகட்டி கொடுக்கின்றது


தமிழர்களின் வரிப்பணமும் கொண்ட இந்திய உதவி மூலம் ஏற்கனவே இந்திய அரசு 5000 வீடுகளை கட்டி கொடுத்திருக்கின்றது


நல்லவரோ கெட்டவரோ லைக்காவின் சுபாஷ்கரனும் தமிழக சினிமாவில் சம்பாதிப்பவராதலால் அவரும் வீடு கட்டி கொடுக்கின்றார், அதுவும் தமிழர் பணம்


நாம் கொடுக்கும் வரியும், நாம் சினிமாவிற்கு கொடுக்கும் பணமும் ஈழ மக்களுக்கு பயன்படுவது நல்ல விஷயம்


இந்த நல்ல விஷயத்திற்கு ரஜினி செல்கின்றார். இந்த வைகோ, நெடுமாறன், சீமான், வேல்முருகன், திருமா போன்றோர் எல்லாம் சென்றால் என்ன?


யார் இவர்கள் கழுத்தைபிடித்து நெறிப்பார்கள்?


அன்று பிரபாகரன் இருக்கும்பொழுது, பெரும் யுத்த களறியின் நடுவே ஓடி ஈழம் சென்ற இந்த கும்பல்கள், இன்று அந்த ஈழம் அமைதியாக இருக்கும்பொழுது, அம்மக்கள் அமைதியாக வீடுகட்டி வாழும்பொழுது செல்லாதது ஏன்?


செல்லமாட்டார்கள், ஏதும் தேறினால் அல்லவா செல்வார்கள்?


அமைதியாக சிந்தித்தால் இந்த பொய்யர்கள், விஷமக்காரர்கள் எவ்வளவு பெரும் மோசடிகள் என்பது விளங்கும்.


இப்படி சொல்லலாம் முன்பு ஆப்கனில் சோவியத்திற்கு எதிராக போராடிவிட்டு, சோவியத் வெளியேறியதும் தீவிரவாதிகள் வேலையின்றி இருந்தனர்


அவர்களை அழைத்த பாகிஸ்தான் சகலமும் கொடுத்து காஷ்மீருக்குள் அனுப்பியது,


"நீ போராளி, போராடு நான் சொன்ன இடத்தில் போராடு, உன் எதிரிக்காக அல்ல, என் எதிரிக்காக..."


அவர்கள் காஷ்மீரில் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல, இன்று ஓரளவு கட்டுபடுத்தியிருக்கின்றோம்


அப்படி முன்பொரு காலத்தில் ஈழ போராளிகள் ஆதரவு என இருந்த இவர்கள் , 1990க்கு பின் திமுக எதிரிகளாலும், காங்கிரஸ் எதிரிகளாலும் வளைக்கபட்டனர், அதாவது சிலருக்கான ஏவல்காரன் ஆனார்கள்


அதனால் இவர்களின் உச்சஸ்தானி சத்தம் திமுக, காங்கிரஸ் ஆட்சியிலேதான் இருக்கும். இப்பொழுது மட்டும் காங்கிரஸ் திமுக ஆட்சி இருந்தால் ரஜினி வீட்டின் முன் கரகாட்டம் நடத்துவார்கள்


ஆனால் மாறிவிட்ட காலங்கள் அல்லவா?


அதனால் எங்கோ ஹாயாக அமர்ந்து, ரஜினிக்கு டாட்டா சொல்லிவிட்டு "எந்திரன் 2.0 படம் எப்பொழுது வரும், டிக்கெட் கிடைக்குமா" என விசாரித்துகொண்டிருக்கின்றார்கள்












No comments:

Post a Comment