Friday, March 24, 2017

ஆர்கே நகர் அப்டேட்ஸ்.....







 ஆர்.கே நகரில் சரத்குமார் வேட்பாளர் மனு நிராகரிப்பு.

இப்போதைக்கு தமிழகத்தில் மிக மகிழ்ச்சியான நபர் சரத்குமார்தான், "அப்பாடா.." என கண்டம் தப்பிய மகிழ்வில் இருப்பார்


மனு ஏற்கபட்டிருந்தால் வென்றிருப்போம், இது திட்டமிட்ட சதி என அடுத்த தேர்தல் வரை ஓட்டிவிடமுடியாதா?




இப்போதைக்கு சரத்குமாரின் நன்றிகுரிய கடவுள் மனுவினை நிராகரித்த அந்த அதிகாரிதான்..




 






ர்.கே நகரில் தினகரனை விட கவனமாக இருக்கவேண்டியர் மு.க ஸ்டாலின்


அதிமுக சிதறுதேங்காயான இந்நிலையிலும் வெல்லமுடியவில்லை என்றால் அது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக அமையும்


நாடார் சங்கங்களை அழைத்தல், வராதவர்களை தனியாக போட்டியிட வைத்தல் என முழு கவனமாக நகர்கின்றது தினகரன் தரப்பு.


மிக கவனமாக அடியெடுக்கின்றது, ஒரு வோட்டையும் இழக்க அது தயாராக இல்லை..


ஸ்டாலினோ பெரும் ராஜதந்திர நகர்வு ஏதுமின்றி, அக்கால காமராஜரும், அமெரிக்க மருத்துவமனை எம்ஜிஆரும் சொன்னது போல "படுத்துகொண்டே ஜெயிப்பேன்.." என சொல்லாமல் சொல்கின்றார்.


சில தலைவர்களை வருந்தி அழைத்ததாகவோ, கூட்டணி தலைவர்களோடு மேடையேறி பிரச்சாரம் செய்ததாகவோ ஒன்றையும் காணவில்லை


சறுக்க தொடங்குகின்றாரோ எனும் சந்தேகம் வருகின்றது, இது திமுகவிற்கும் மகா முக்கியான தேர்தல்.


எம்மை போன்றவர்களுக்கு என்னமோ ஸ்டாலின் இன்னொரு ஜெயலலிதா ஆகி கொண்டிருக்கின்றார் போல தோன்றுகின்றது..




 






அதிமுகவில் தகுதியுடையவர்கள் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்


அந்த கட்சியில் என்று தகுதியுடையோர் இருந்தார்கள்?,


சரி, தமிழக‌ பாஜவில் மட்டும் யார் இருக்கின்றார்கள் தாயே?





அதனால் தமிழக பாஜக போலவே அதிமுகவில் தகுதியானவர்கள் இல்லை என திருத்திகொள்ளுங்கள்..



 





தீபாவின் நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது இப்படித்தான் தோன்றுகின்றது


"இவரே இப்படியிருந்தால், இவரின் அத்தை எப்படி இருந்திருப்பார்?"


நினைத்தாலே பகீரென்கின்றது..







 

No comments:

Post a Comment