Tuesday, March 21, 2017

ரஞ்சித் இயக்கும் ரஜினி படத்தில் குஷ்பூ ...

https://youtu.be/65GFok5WWKw




ரஞ்சித் இயக்கும் ரஜினி படத்தில் முக்கிய வேடத்தில் குஷ்பூ நடிக்கின்றார் : செய்தி


அது என்ன முக்கிய வேடம்? கதாநாயகி என சொன்னால்தான் என்ன?


கபாலி படம் வருமுன்னும், வந்தபின்னும் சொன்னோம், ரஜினிக்கு மிக பொருத்தமான ஜோடி குஷ்பூ என்று. அவரை அந்த படத்தில் நடிக்கை வைத்திருந்தால் படம் மிக பெரும் ஹிட் ஆகியிருக்கும்.





அந்த படத்தின் அமைப்புக்கு குஷ்பூ மிக அழகாக பொருந்தியிருப்பார்.

ஆனால் அவர்கள் செய்யவில்லை, படம் அப்படியே புதைந்தே விட்டது.

இப்பொழுதாவது அவர்களுக்கு புத்தி வந்திருக்கின்றது, உண்மையினை உணர்ந்திருக்கின்றார்கள், நாம் இதனை அன்றே சொன்னோம்.

இயக்குநர் ரஞ்சிதிற்கு வாழ்த்துக்கள்..

குஷ்பூவினை நடிக்க வைத்துவிட்டு ரஞ்சித் எப்படி கதையினை குழப்பி அடித்தாலும் படம் பெரும் வெற்றி பெறும் என்பது வேறு விஷயம்.

நம்மை போல கோடான கோடி ரசிகர்களின் விருப்பத்தின் பேரில் குஷ்பூ தனது மூன்றாம் இன்னிங்ஸை தொடர்கின்றார்.

தமிழகத்தில் அவரை தவிர‌ எந்த நடிகைக்கும் இது சாத்தியமே இல்லை

அவர் இன்னும் 30 இன்னிங்க்ஸ் வலம் வர வாழ்த்துவோம், நிச்சயம் வருவார்

இதனை விட பெரும் மகிழ்ச்சி என்ன இருக்கின்றது???

நண்பர்கள் Sadhu Sadhath , Venkatesh Mothilal போன்ற கட்டப்பாக்களுடன் படம் வரும் நாளை எதிர்பார்க்கின்றோம், அதற்குள் இந்த பாகுபலி போன்றவைகள் வந்து போகட்டும்,

அவை இனி வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?





 



 

No comments:

Post a Comment