Thursday, March 23, 2017

எவனுக்கும் இல்லாத வரலாறு கலைஞருக்கு இருக்கின்றது



ka


பார்ப்பனர்கள் என்போர் இந்தியாவில் அவர்கள் மிக மிக சிறுபான்மை இனம்


ஆனால் பார்ப்னிய கட்சி எனப்பட்ட‌ காங்கிரசுக்கும், பின்பு பார்பானிய மதவாத கட்சி எனப்பட பாஜகவும் பெரும்பலத்துடன் இந்தியாவினை ஆளுவது எப்படி?


தாழ்த்தபட்டவருக்கு ஆதரவாத களமிறங்கும் எல்லா கட்சிகளும் ஒரு கட்டத்தில் காணாமலே போய்விடுகின்றன‌





விபி சிங் முதல் மாயாவதி வரை அதே நிலைதான், பெரும்பான்மையான வோட்டுவங்கி இருந்தும், மக்கள் தொகையில் அதிகமிருந்தும் அவை எப்படி அழிகின்றன?

தமிழகத்தின் நிலை வேறு, திராவிட கட்சிகள் இன்றளவும் ஆதிக்கம் செலுத்துகின்றன, ஆனால் தாழ்த்தபட்டோருக்கான 100% கட்சி நாங்கள்தான் என களமிறங்கிய கிருஷ்ணசாமி எங்கோ பல்குத்திகொண்டிருக்கின்றார்

திருமாவும் பெரும் திருப்பம் கொடுக்கமுடியவில்லை

மாயாவதி போன்றோரை வைத்த மக்களே அவர்களை திரும்பவும் எடுத்துவிட்டார்கள், தமிழகத்தில் அந்த தலைவர்களை ஏதும் பிரச்சினை நடந்தால்தான் பார்க்கவே முடிகின்றது, இல்லாவிட்டால் காணவே இல்லை

ஆக என்ன புரிகின்றது?

இதில் ஆரிய சூழ்ச்சி, பிராமண தந்திரம் என எதுவுமில்லை. தாழ்த்தப்ட்டாரின் தலைவர்கள் என சொல்லிகொள்பவர்களை தாழ்த்தபட்ட மக்களே நம்பவில்லை.

இவர்களுக்கு அந்த பிராமண கட்சிகளே பெஸ்ட் என சென்றுவிடுகின்றார்கள்..

தாழ்த்தபட்ட மக்கள் நம்ப கூடிய தலைவன் இந்திய அளவில் இன்னும் உருவாகவே இல்லை என்பது நிதர்சனம்...

தமிழ்நாட்டில் அப்படி அல்ல, மிக தாழ்த்தபட்டவரான கலைஞர் 60 வருடமாக கோலோச்சமுடிகின்றது என்றால், எப்படி ஒரு நம்பகதன்மை பெற்றிருக்கின்றார் என்பது புரிந்து கொள்ளமுடிகின்றது

அடக்கி வைத்த அவற்றை மீள எழவிடாமல் 60 வருடமாக பிடித்து வைப்பது சாதாரணம் அல்ல..

அம்மனிதருக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது..

எவனுக்கும் இல்லாத வரலாறு அவருக்கு இருக்கின்றது








உலகின் முதல் 150 கோடீஸ்வரர்களில் இடம்பெற்ற ஒரே தமிழர் ஹெச்சிஎல் சிவநாடார்.


இவர் கருணாநிதி குடும்பமும் அல்ல, கட்சியில் பதவி வகித்தவரும் அல்ல, திமுககாரரும் அல்ல...


கலைஞரால் உலகபணக்காரர் ஆக்கபட்டவரும் அல்ல..







No comments:

Post a Comment