Monday, March 27, 2017

ஆர்.கே நகரில் தொப்பிகளாய் தெரியும்பொழுது..




17498749_10208763653383804_2572887972364257744_n.jpg

அந்த ராமசந்திரன் யாருடனாவது புகைபடம் எடுக்கும்பொழுது மகா கவனமாக இருப்பார் என்பார்கள், அதுவும் யாராவது மாலையிட்டாலோ, சால்வையிட்டாலோ அவர்களின் கைகளை பிடித்துகொள்வார்


காரணம் எங்கே அவர்கள் தலையிலிருக்கும் தொப்பியினை தட்டிவிட்டு அது புகைபடத்தில் வந்துவிடுமோ எனும் அச்சம்


நன்கு கவனித்தால் இது புலபடும், மாலையிட வந்தவர்கள் கையினை பிடித்து லாவகமாக வாங்கிகொண்ட ஒரே தலைவர் அந்த ராமசந்திரனே..




இதனை அறிந்த சில குறும்பர்கள், கூட்டத்தில் அவர் தொப்பியினை தட்டிவிட முயன்றதும், அதனால் ஒரு பாதுகாப்புபடை அமைத்து எதிரிகளின் சூழ்ச்சியினை இறுதிவரை ராமசந்திரன் முறியடித்ததும் வேறு விஷயம்


இறக்கும்பொழுதும் அவரை தொப்பியுடனே அடக்கம் செய்தார்கள், இன்று காட்சியகத்தில் இருப்பது அவரின் இன்னொரு தொப்பி


அவர் தொப்பி மட்டுமா நிறைய வைத்திருந்தார்?


ஆ.கே நகர் தொப்பிகாட்சிகளை பார்க்கும்பொழுது ராமசந்திரனின் தொப்பி சாகசமும் நினைவுக்கு வருகின்றது


திரைப்படங்களில் தொப்பியோடு அவர் செய்த அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல‌


அதுவும் குடியிருந்த கோயில் படத்தில் ஒரு பாடல்காட்சியில் வருவார்


துள்ளுவதோ இளமை எனும் பாடல், 80 வயதில் அந்த இளமை துள்ளினால் என்ன? துள்ளாவிட்டால் என்ன?, விஷயம் இளமை அல்ல‌


மாறாக தொப்பி


அப்பாடலில் ஊஊஊஊஊ ப்பாப்பபாஆஅ என வரும் எம்ஜிஆரை பார்த்து சிரிக்காவிட்டால் நீங்கள் மானிடர் அல்ல‌...


ஆர்.கே நகரில் தொப்பிகளாய் தெரியும்பொழுது, இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன...






 

No comments:

Post a Comment