Saturday, March 25, 2017

விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்) ஏன் தோற்றது?

https://youtu.be/fH4EAHou2vM


பன்முக தன்மை கொண்ட எழுத்தாளன் எப்படி இருப்பான், எப்படி உலகினை நொடிநொடியாக கண்காணிப்பான், ஒவ்வொரு நொடியின் உலக நிலமைமையினையும் தன் மனதில் நிறுத்துவான் என்பதற்கு பெரும் உதாரணமான எழுத்தாளர் சுஜாதா


விக்ரம் என்றொரு கமலஹாசனின் படத்தில் அவரின் பங்கு 90% இருந்தது, அப்படி ஒரு அட்டகாசமான கதை அது


உலகம் ஏவுகனை யுத்தத்தை கண்டது வளைகுடா போரின்பொழுது மட்டுமெ, அதற்கு முன்பு வல்லரசுகளிடம் ஏவுகனை இருந்தாலும் அதனை பயன்படுத்தி யுத்தம் ஒன்றும் நடக்கவில்லை


வளைகுடா யுத்தத்தில் ஸ்கர்ட், பேட்ரியாட், டொமஹாக் என ஏவுகனைகள் பறக்கும்பொழுதுதான் அதன் முகம் உலகிற்கு தெரிந்தது.


ஆனால் விக்ரம் படம் அதற்கு பல வருடங்களுக்கு முன்பே வெளிவந்தது, அதில் ஏவுகனை என்றால் என்ன? அதனை கம்பியூட்டர் கொண்டு இயக்குவது எப்படி என அன்றே சொல்லியிருந்தார் சுஜாதா


அமெரிக்காவின் டொமஹாக் ஏவுகனை 1985களில் அப்படித்தான் இருந்தது, அன்று அதுதான் உச்சபச்ச நுட்பம். சுஜாதா அதனைத்தான் விக்ரம் படத்தில் காண்பித்தார்.


விஞ்ஞான ரவுடி எப்படி இருப்பான் என்பதற்கு சத்யராஜ் அழகான நடிப்பினை கொடுத்திருந்தார், இன்றுவரை சத்யராஜின் டாப் நடிப்பு அந்தபடமே


இந்திய, தமிழக‌ அமைச்சர்களின் அறிவு நிலமையினை வி.கே ராம்சாமி வேடத்தில் அன்றே காட்டியிருந்தார் , அட்டகாசமான கைதட்டவேண்டிய காட்சி அது


உளவுதுறை, அதிலுள்ள ஓட்டைகள், டிடெக்க்டிவ் ஆபிசர்கள், இந்திய ராக்கெட் ஆராய்ச்சி, பின்லேடன் பிடித்து வைத்த ஆப்கன் போல அன்றே கற்பனையில் ஒரு நாடு என அசத்தினார் சுஜாதா


மிக மிக குறிப்பிட்டு சொல்லவேண்டிய படம் அது


ஆனால் தமிழக மக்களுக்கு அப்படம் ரசிக்கவில்லை, இது விசித்திரமான தமிழகம் அல்லவா?, ரஜினிகாந்த்
"ஹெ..ஹா ஹா ஹாஹ் ஆஹ்" என முடியினை கோரிவிடும் அழகினை பார்த்து கைதட்டி கொண்டிருந்தது, பாக்யராஜ் தாய்மார்களை எல்லாம் சிந்திக்க வைத்துகொண்டிருந்தார்


விசு அழவைத்துகொண்டிருந்தார். அப்பொழுதுதான் விக்ரம் விஞ்ஞான அறிவியில ராணுவம் ராக்கெட் பேசிகொண்டு திரைக்கு வந்தது


1980களின் அத்தனை அறிவியல் நுட்பங்களையும் உணர்ந்த ஒருவானால் அன்றி விக்ரம் மாதிரி படங்கள் சாத்தியமில்லை


அதன் தோல்வியோ என்னமோ அதன்பின் சுஜாதா அம்மாதிரியான விஷயங்களுக்கு செல்லவில்லை, வேறு படங்களுக்கு சென்றுவிட்டார்


இன்று மணிரத்தினத்தின் "வான்" படம் டிரைலர் ஒடிகொண்டிருக்கின்றது


அதில் இந்திய விமானபடையின் பெரும் பலமான "சுகொய் 30" காட்டபடுகின்றது, 4ம் தலைமுறை ரஷ்ய தயாரிப்பு அது. அப்துல்கலாம் பறந்த அந்த விமானம்


படத்தின் கதைபடி நாயகன் ராணுவ பைலட் என்பது புரிகின்றது, கதை எப்படி இருக்கின்றது என இனிதான் தெரியும்


அந்த டிரைலரை பார்த்தபின் விக்ரம் படமும், சுஜாதாவும் கண்ணுக்குள் வந்து சென்றனர்


சுஜாதா இருந்திருந்தால் இந்த படத்தில் சுகோய் ரக விமானம், ஜாக்குவார் ரக விமானம் என இந்திய விமான படையின் பல விதமான நவீன விஷயங்கள், அதன் நுட்பங்கள், அதிலிருந்து வீசபடும் ஏவுகனைகள் என பின்னி எடுத்திருப்பார்


தமிழ்சினிமாவிற்கு தேவை அடுத்த எம்ஜிஆரோ, ரஜினியோ அல்ல, மாறாக இன்னொரு சுஜாதா


வான் படம் வந்த பின் நிச்சயம் அவரை பலரின் மனம் தேடலாம், டிரைலரில் சீறிகொண்டிருந்த சுகோய் விமானத்தை கண்டபொழுது அது உறுதியாயிற்று


படம் வரட்டும் பார்க்கலாம்


விக்ரம் படம் ஏன் தோற்றது? என சிந்திக்கின்றேன். அப்படம் காலத்தை முந்திகொண்டு வந்தபடம், பின்னாளில் வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும்


பின்னாளில் என்றால் 20 ஆண்டுகள் கழித்து அல்ல, ஒரு 3 வருடம் கழித்து வந்திருந்தாலும் போதும்


3 வருடத்தில் என்ன நடந்தது?


குஷ்பூ அப்பொழுதுதான் வந்திருந்தார். விக்ரம் படத்தில் அந்த லிசிக்கு பதிலாகவோ, டிம்பிளுக்கு பதிலாகவோ இல்லை இரட்டை வேடத்திலும் அவரே நடித்திருந்தால்


படம் பெருவெற்றி பெற்றிருக்கும்...





 


 

No comments:

Post a Comment