Friday, March 31, 2017

சமூகம் திருந்தினாலே விவசாயி வாழ்வான்

தக்காளி விலை சரிந்தால், கிலோ 10 பைசா என சந்தோஷபடுவனும், காய்கறிகடையில் 50 பைசா கூட கொடுக்க ராம்ஜெத்மலானி போல வாதம் புரிபவனும்தான் இன்று விவசாயிக்கு ஆதரவாக பேசிகொண்டிருக்கின்றான்


வெங்காய விலை ஏறினால் சீறுபவன் தான் இன்று விவசாயிக்கு ஆதரவாம்


உணவகத்தில் வாழை இலை போட்டால் செலவு என பாலித்தீன் பேப்பர் போடுபவன் எல்லாம் இன்று விவசாயிக்கு கத்திகொண்டிருக்கின்றான்.




மோட்டார் முதல் பைப் வரை பாமர விவசாயிடம் கொள்ளை விலைக்கு விற்கும், விவசாயிக்கு செல்லவேண்டிய நீரினை கேன்வாட்டர், கோக் என விற்றுகொண்டிருக்கும் வியாபார சமூகமும் விவசாயிக்கு கண்ணீர் விடுகின்றதாம்


எல்லா வகையிலும் விவசாயினை வஞ்சிப்பது இந்த சமூகம், அரசு மட்டுமல்ல‌


இந்த சமூகம் திருந்தினாலே விவசாயி வாழ்வான்


காய்கறி கடையில் ஒவ்வொரு நகரத்துவாசியும் 50 பைசா உயர்த்தி கொடுத்தாலே, அது மிக சரியாக விவசாயி கையில் கிடைத்தாலே போதும்,,வாழை இலை, இளநீர் முதலான விவசாய பொருளுக்கு வரவேற்பு இருந்தாலே போதும்


மோட்டார் கடைகளில் விவசாயியினை வஞ்சிக்காமல் இருந்தால் போதும்.


உரக்கடைகளில் அவனுக்கு நியாயமான விலையில் பொருள் கிடைத்தால் போதும்


வியாபார இடைதரகர்கள் கொஞ்சம் நியாயமாக நடந்தால் போதும், லாரி போக்குவரத்துக்காரகள் கொஞ்சம் இரக்கபட்டால் போதும்


மொத்தத்தில் இந்த சமூகத்தின் எல்லா பிரிவும் கருணை காட்டினாலே போதும் விவசாயி வாழ்வாங்கு வாழ்வான்


அவனிடமிருந்து எல்லாவற்றையும் வாங்கும் சமூகம், அவன் தடுமாறும்பொழுது தாங்கிபிடிக்கவும் கடமைபட்டிருக்கின்றது


தன்னை காக்க இந்த சமூகம் உண்டு என்ற நம்பிக்கை வருமானால் அவன் ஏன் சாக போகின்றான்?


அவன் தடுமாறும்பொழுது தாங்கிபிடித்தால் போதும், அவன் தன்னை நிலை நிறுத்திகொள்வான்..


மாறவேண்டியது அரசு மட்டுமல்ல, மக்களும் தான்..



No comments:

Post a Comment