Sunday, March 26, 2017

ஆர்கே நகர் தேர்தல் துளிகள் ...

ஒரு விளக்கு எம்ஜிஆர், ஒரு விளக்கு ஜெயலலிதா : மின் விளக்கு சிம்பத்திற்கு பன்னீர் செல்வம் விளக்கம்


என்ன இது? இப்படியாக மொட்டையாக விளக்கம் கொடுப்பார்கள்?


எம்ஜிஆரையும், ஜெயலலிதாவினையும் விளக்காக பிடிக்கின்றார் பன்னீர் என்பது பரவி மருவி, எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் விளக்கு பிடிக்கின்றார் பன்னீர் என்றால் என்னாகும் விஷயம்?




பெரும் சிக்கல் ஆகாதா?


அதனால் எம்ஜிஆர் ஒரு விளக்கு, ஜெயா ஒரு விளக்கு இருவரையும் சுமக்கும் கம்பம் நான் என சொன்னால் என்ன?..


என்ன விளக்குகளோ? இரண்டும் பியூஸ் போயிவிட்டது


பியூஸ் போன இரு விளக்குகளைத்தான் பன்னீர் சுமக்கின்றார், இதற்கு விளக்கம் வேறு


இதற்கு இதோ உங்களுக்கு முக்காடு போட வந்துள்ளோம் என நேரடியாக சொல்லும் தினகரன் கோஷ்டி பரவாயில்லை









தமிழக பாஜக தலைவர் தமிழிசை மாற்றபட வாய்ப்பு

என்னடா இது தமிழகத்திற்கு வந்த சோதனை?

தமிழிசையினை மாற்றிவிட்டால் அதிரடி காமெடி ஏது? சரவெடி சிரிப்புகள் ஏது?


அந்த கட்சியில் ஒன்றுமே உருப்படி இல்லை என்றுதானே தமிழிசையினை வைத்தார்கள், அவரையே மாற்றவேண்டும் என்றால்...

ஒருவேளை அவர் மாற்றபட்டால் அடுத்துவருவர் எப்படி இருப்பார் என நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்..






 

No comments:

Post a Comment