Wednesday, March 29, 2017

சத்யமூர்த்தி ...


17629655_10208777179281943_3930794238174832582_n.jpg


அந்த காந்தி காலத்து காங்கிரஸ் சுதந்திரத்திற்கா உழைத்து கொண்டிருந்த காலங்களில் தமிழகத்தில் அதன் தூணாக நின்றவர் அந்த சத்யமூர்த்தி,


புதுகோட்டை திருமயத்தில் பிறந்தவர் நன்கு படித்தவர், ஆங்கிலத்தில் பின்னி எடுத்தவர் என்பதால் பெரும் இடம் பெற்றிருந்தார், பெரிய இடமென்றால் எப்படி?


ரவுலட் சட்டம், மாண்டேகு செம்ஸ்போர்டு போன்ற விவாதங்களில் இங்கிலாந்தில் வெள்ளையனோடு அமர்ந்து வாதிட்டவர், அந்த அளவிற்கு இந்திய அளவில் அவருக்கு மதிப்பு இருந்தது


வெள்ளையன் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த தொடங்கியபொழுது தேர்தலிலும் வெற்றிபெற்றார், ஆனால் சுதந்திர போரட்டத்திலும் கலந்துகொண்டே இருந்தார்


பாரதியாரின் பாடல்களை பிரிட்டிசார் தடை செய்தபொழுது, பொங்கி எழுந்து கண்டித்தவர், அந்நேரம் அவருக்கு துணை நின்றவர் வல்லபாய் பட்டேல்


திலருடன் அவர் நாடெல்லாம் சென்று சுதந்திர உணர்வினை ஊட்டியது பெரும் உழைப்பு.


பெரும் தொண்டும், விடாபிடியான அவரின் சுதந்திர உணர்வும் அவருக்கு பெரும் பதவிகளை கொடுத்தன, அப்படி சென்னை நகராட்சியின் மேயரும் ஆனார்


அப்பொழுது அவர் செய்த பெரும் சாதனை தான் பூண்டி நீர்தேக்கம், அது அவரின் சாதனை, காங்கிரசின் சாதனை.


அன்றைய பெரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அவர் எடுத்த நடவடிக்கை அது, இன்றுவரை சென்னையின் தாகம் தீர்க்கின்றது
அது அன்று பெரும் சாதனை, அதனை சாதித்ததால் தீரர் சத்யமூர்த்தி ஆனார்.


தன் சொத்துக்கள், பணம் எல்லாவற்றையும் சுதேசி இயக்கத்திற்காக கொடுத்து , நாட்டிற்காக கொடுத்தார்


எல்லாவற்றிற்கும் மேல் தமிழகத்திற்கு ஒரு உண்மை தொண்டனை வளர்த்து கொடுத்தார், அவர்தான் காமராஜர்


சத்தியமூர்த்தி என் அரசியல் குரு என சொல்லும் அளவிற்கு சத்யமூர்த்தி மீது காமராஜருக்கு மதிப்பும், பக்தியும் இருந்தது.


தமிழக காங்கிரஸ் வரலாற்றில் பெருஇடம் பெற்றிருந்தார் சத்யமூர்த்தி, மறக்கமுடியாத மாமனிதர்


ராஜாஜி, சத்யமூர்த்தி என தமிழர்கள் பெரும் அகில இந்திய அளவில் கொண்டாடபட்ட காலங்கள் அவை, காமராஜர் அதற்கு அடுத்தால் வந்தார்.


பசும்பொன் தேவருக்கும் இந்திய அளவில் ஒரு அபிப்ராயம் இருந்தது.


அதன் பின் அகில இந்திய அளவில் தமிழர்கள் பெரிய தலைவர்களாக வரமுடியாத அளவு தங்களை சுருக்கிகொண்டனர்,


விளைவு பல பிரச்சினைகளில் தமிழகமும் சுருக்கிட்டு கொண்டது.


இனி அப்படிபட்ட பெரும் தலைவர்கள் தமிழகத்தில் சாத்தியமில்லை, ஆனால் வராமல் தமிழகத்தை முன்னேற்ற முடியாது.


சத்யமூர்த்தியின் உருவசிலை பாராளுமன்றத்தில் திறக்கபட்ட நிகழ்வில், அதனை திறந்து வைத்தவர் அப்துல் கலாம்


நாட்டிற்காய் வாழ்ந்த ஒரு தியாகியின் சிலையினை, இன்னொரு தியாகி அப்துல்கலாம் திறந்த காட்சி மனதை விட்டு நீங்காதது, இருவரும் வாழ்ந்த வாழ்க்கை நிச்சயம் நாட்டிற்கானது


இருவருமே தமிழர்கள்..


அப்படி இன்னும் பல தமிழர்கள் அகில இந்திய அளவில் உருவாக வேண்டும், அப்படி வந்தால் தமிழகம் இன்னும் செழிக்கும்..


என்ன ராசியோ தெரியவில்லை, ராஜாஜிக்கும் சத்யமூர்த்திக்கும் ஒத்துவரவில்லை, அது சத்யமூர்த்தி காலத்திற்கு பின்னும் தொடர்ந்தது, அந்த கோஷ்டி பூசல் தீரவே இல்லை


ராஜாஜியினை தொடர்ந்து காமராஜர் வந்ததை ராஜாஜியால் சகிக்க முடியவில்லை, அதாவது தீரர் சத்யமூர்த்தியின் இடம் காமராஜருக்கு வந்தது எனும் ஒரு வன்மம் ராஜாஜிக்கு இருந்தது


நிச்சயமாக ராஜாஜி பெரும் அறிவாளி, பெரும் தந்திரி, அபார மூளைக்காரர், ஆனால் இந்த இடத்தில் அவர் சறுக்கினார்


அதன் பின் காட்சிகள் மாறின, தமிழக காங்கிரஸ் தலமை செயலகம் அவர் பெயராலே அமைந்திருக்கின்றது, அதன் ஒரு பக்கத்தில் ராஜாஜி பெயரும் இருந்திருக்கவேண்டும், விதி அது அல்ல‌


மறக்க முடியாத சுதந்திரபோராட்ட தியாகி சத்யமூர்த்தி , பூண்டி நீர்தேக்கம் எந்நாளும் அவர் பெயரை சொல்லிகொண்டே இருக்கும்.


அந்த ராஜாஜி சத்யமூர்த்தி வழிவந்தவர்களாலோ என்னமோ இன்னும் கோஷ்டி சண்டை தீரவில்லை


நேற்று அவருக்கு நினைவுநாள் அனுசரித்திருக்கின்றார்கள், அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அனுசரித்திருக்கின்றார்கள்


பல கோஷ்டிகளை காணவே இல்லை, வெகு சிலர் மட்டும் வந்திருக்கின்றனர்,ஒவ்வொருவரும் ஒரு கோஷ்டி என்பதால் பல கோஷ்டிகள் வந்ததாகவே அர்த்தம்


ஏன் எல்லா கோஷ்டிகளும் வரவில்லை?


வந்திருந்தால் அஹிம்சை போதித்த சத்யமூர்த்தி படத்தின் முன்பு புரண்டு அடித்திருப்பார்கள், அவர்கள் அப்படியானவர்கள்


ராஜாஜி, சத்யமூர்த்தி, காமராஜர் என பெரும் தமிழர்களின் ஆளுமை ஒரு காலத்தில் இந்தியா எங்கும் இருந்திருக்கின்றது


அப்படிபட்ட தலைவர்களை தொடர்ந்து உருவாக்காமல் ராமசந்திரன், அம்மா, சின்னம்மா என உருவாக்கி தமிழகம் நாசமாயிற்று


இனியாவது தமிழகம் தன் இழந்த பொற்காலத்தை மீட்டெடுக்கட்டும்


அதற்கு அகில இந்திய அளவில் நல்ல தலைவர்கள் தமிழகத்திலிருந்து உருவாகட்டும்.


சத்திய மூர்த்திபோல நாட்டிற்கு உழைத்த ஏராளமான நல்லவர்கள் தமிழகத்திலும் உண்டு, திராவிட காட்சிகளில் அவர்கள் பின்னுக்கு தள்ளபட்டிருக்கலாம் , மறைக்கபட்டிருக்கலாம்


ஆனால் அவற்றை எல்லாம் மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு சொல்லி, அவர்களை போல சிலரையாவது இந்திய அளவில் உருவாக்கும் கடப்பாடு இந்தியர்களாகிய தமிழர்களாகிய நமக்கு உண்டு.


இல்லாவிட்டால் ரிப்பன் பில்டிங்கினை எம்ஜிஆர் தன் சொந்த செலவில் கட்டினார் சென்னைக்காக கொடுத்தார், பூண்டி நீர்தேக்கத்தை கலைஞர் கட்டினார் எனும் அளவிற்கு வரலாற்றை மாற்றிவிடுவார்கள்..


சத்யமூர்த்தியின் நினைவுநாளில் அப்படித்தான் சிந்திக்க தோன்றுகின்றது.










No comments:

Post a Comment