Tuesday, March 21, 2017

இளையராஜா காப்புரிமை கேட்பது வரவேற்கதக்கது : விஷால்

https://youtu.be/cReIk0PTSL8?list=PLjity7Lwv-zoOe-_y4yVwS1cKNMerdj8W



இளையராஜா காப்புரிமை கேட்பது வரவேற்கதக்கது : விஷால்


அப்படியானால் பாடல் எழுதியனுக்கு ஒன்றுமே இல்லையா?


இளையரஜாவிடம் வாத்தியங்கள் வாசித்தவனுக்கு ஒன்றுமே இல்லையா?





அதாவது இளையராஜா மட்டும்தான் 100 வாத்தியங்களை வாசித்து, அவரே பாட்டு எழுதி, அவரே பலகுரலில் பாடி, அவரின் சொந்த தியேட்டரில் ரெக்கார்டிங் செய்தார், சவுண்ட் இஞ்ஜினியராகவும் அவரே இருந்தார்.

இப்படித்தான் விஷால் சொல்ல வருகின்றார்...

விஷாலுக்கு என்ன சந்தோஷம்? என்றோ ஓடிய இவரின் ஒரே ஒரு படத்திற்கு திரும்ப திரும்ப ராயல்டி கேட்கலாம் எனும் திட்டமாக இருக்குமோ?

தீராத விளையாட்டு பிள்ளை போன்ற மொக்கை படங்களுக்கு எல்லாம் டிக்கெட் எடுத்த ரசிகன் நஷ்ட ஈடு கேட்டால் இவர் தாங்குவாரா?

திருப்தியில்லா படத்தின் டிக்கெட்டில் பாதி திருப்பி தரப்படும் என சொல்லிவிட்டு இதனை விஷால் வரவேற்றிருந்தால் நன்றாக இருக்கும்

மிஸ்டர் விஷால் அப்படி சொல்ல முடியுமா?

போகிற போக்கில் ராமராஜனை கூட ராயல்டி கேட்க வைத்துவிடுவார்கள் போல..

இளையராஜாவின் பாடலுக்கு மாங்குயிலே.. பூங்குயிலே என ஆடி ஹிட் ஆக்கிய‌ அவருக்கு ராயல்டி இல்லை என்றால் எப்படி?

ராமராஜனை விடுங்கள்

"நிலா அது வானத்து மேலே.." குயிலி, "ராத்திரி நேரத்து பூஜையில்." டிஸ்கோ சாந்தி எல்லாம் ராயல்டி கேட்டால் நாடு தாங்குமா?





 


 

No comments:

Post a Comment