Wednesday, March 22, 2017

அப்பாவியான மனைவி எவ்வளவு பெரும் வரம் ...

திருமணத்திற்கு என்னவெல்லாம் கேட்கின்றார்கள் இக்கால பெண்கள்? கோபிநாத் முன் வைக்கும் கோரிக்கைகளை கண்டால் அம்பானி குடும்பங்களை போன்றோரை தவிர யாருக்கும் திருமணம் ஆக வாய்ப்பில்லை


எனக்கென்னமோ அந்த ஜட்டிசாமியார் தன் மகளுக்கு செய்த அந்த ஹெலிகாப்டர் சகித திருமணம் இந்த பெண்களை பாதித்திருக்கலாம், அவருக்கென்ன "அத்தனைக்கும் ஆசைபடு" என மகளுக்கும் சொல்லியிருக்கின்றார்


அந்த பெண்கள் சொல்லவரும் விஷயம் "அம்மா அப்பாவினை கொன்றாவது சொத்துக்களை கொண்டு செல்வேன், புருஷனிடம் சொத்து இல்லை என்றால் அவனையும் கொல்வேன்"


உடன்பிறந்தவர்களை கொஞ்சமும் நினைத்துபார்க்க தோன்றவில்லை, அவர்களை பங்குபோட வந்த பகையாளியாகவே நினைக்கின்றனர்


விட்டால் கொலையே செய்வார்கள் போலிருக்கின்றது..


கொலையும் செய்வாள் பத்தினி அல்ல, புதுபெண்ணும் கூட என மாற்றவேண்டியதுதான்


அதில் பேசிகொண்டிருந்த பெண்களில் யாருக்கும் தான் சம்பாதித்துகொள்ளலாம், ஏன் அப்பா சொத்துக்கும் , மாமனார் சொத்துக்கும் ஆசைபடவேண்டும் என்று தோன்றவே இல்லை


சம்பாதிக்கும் தன்னபிக்கையினை அறவே இழந்துவிட்டு, அப்பன் சொத்து, ஆத்துக்காரன் சொத்து என அடுக்கிகொண்டே இருக்கின்றார்கள்.


அவர்கள் சம்பாதித்தது அவர்களுக்கு, நமக்கு தேவையானதை நாம் சம்பாதித்துகொள்ளலாம் எனும் சிந்தனை கொஞ்சம் இல்லை. அப்படி ஒரு சிந்தனையே இல்லை


வீட்டின் சேர், கட்டிலை கூட விட்டுகொடுக்க மனமில்லை


மிக மிக சுயநலமான சமூகமாக மாறிகொண்டிருக்கின்றோமோ எனும் அச்சம் வருகின்றது, இது காமெடி நிகழ்ச்சியாகவே இருக்கட்டும் என மனம் சிந்திக்கின்றது


எல்லாம் அப்பாவும், அம்மாவும் , கணவனும் கொடுத்தால் இவர்கள் வாழ்வில் சம்பாதிக்கபோவது என்ன?


ஒரு குருவி கூட தன் தாய் தந்தையரின் கூட்டிற்கு சண்டையிடாது, அதுவாக தனியாக கட்டிகொள்ளும்..


அந்த 3 அறிவு பறவைகளை விடவா நம் சமூகம் அறிவுகெட்டு போயிற்று?


பெற்றோரிடம் இவ்வளவு கேட்கும் இவர்கள், நாளை தங்கள் பிள்ளைகளுக்கு என்ன கொடுப்பார்கள் என சிந்திப்பதே இல்லை


நொடிபொழுதில் மாறும் வாழ்க்கை எனும் தத்துவத்தை மறந்து, ஏதோ 5 ஆயிரம் வருடம் வாழபோவதை போல பேசி கொண்டிருக்கின்றார்கள்.


திட்டமிடுவது மனிதன் , திருமணம் எனும் பயிர் காலத்திற்கும் நிலைக்க ஆண்டவன் ஆசியே வேண்டும், அவன் அல்லவா நினைக்கவேண்டும்..


இவர்கள் செய்யபோகும் திருமணத்திற்கு, இவர்கள் வாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கு உலகம் என்ன நினைத்தால் இவர்களுக்கென்ன? ஆனால் உலகத்திற்காகவே திருமணம் செய்வது போல பேசிகொண்டிருக்கின்றார்கள்.


உலகம் தங்களை பற்றியே நினைத்துகொண்டிருப்பதாக நினைப்பு இருந்தாலன்றி இந்த ஆசை எல்லாம் வராது..


நாளை இவர்களுக்கு வாழ்வில் சரிவு என்றால் உலகம் ஓடி வந்து உதவுமா? நிச்சயம் இல்லை..


சிரியாவிலும், லிபியாவிலும், ஈராக்கிலும் அடுத்தவேளை உயிரோடு இருப்போமா என அந்த பெண்கள் அஞ்சிகொண்டிருக்க, சில ஆப்ரிக்க நாடுகளில் அடுத்தவேளை உணவிற்கு வழியின்றி பெண்கள் கதறிகொண்டிருக்க இவர்கள் ஆசை எங்கிருக்கின்றது?


நாளையே இலங்கை வழியாக சீனா படையெடுத்தால், நாமும் அந்த நிலையினை அடைய அரை நாழிகை ஆகாது..


80 சவரன் என்ன? எத்தனை கிலோ நகைகள் அணிந்து, தங்க கட்டிலில் படுத்து, தங்க தட்டில் உண்ட பெரும் மகாராணிகளின் எலும்பு கூடு கூட எங்கிருக்கின்றது என தெரியவில்லை


அலெக்ஸாண்டரின் கல்லறையினை கூட உலகம் தேடுகின்றது...


வாழ்வு என்பது விசித்திரமான ஒன்று, நொடியில் கடந்து போகும் மின்னலை போன்றது, இதில் இவ்வளவு ஆசைகளா?


இவர்கள் வெளிசொல்லும் ஆசையே இவ்வளவு இருந்தால், சொல்லாத ஆசைகள் எவ்வளவு இருக்கும்? பெண்ணின் மனம் ஆழமானது என வேறு சொல்லி தொலைக்கின்றார்கள்.


பெற்று வளர்த்து, படிக்க வைத்தபின் தனக்கான வாழ்வினை தானே அமைத்துகொள்ள முடியாமல் பெற்றவர்களை எதிர்நோக்கும் இவர்கள் என்ன சம்பாதித்து கிழிக்க போகின்றார்கள்?


அந்த பழத்தினை தின்றால் நீ கடவுளாவாய் என பாம்பு சொன்னவுடன், கடவுளின் கட்டளையினை மீறி செத்தாலும் கணவனோடு சாவோம் என பழம் கொடுத்த வம்சம்,


ஒரு பிள்ளையினை உலகம் சுற்ற அனுப்பிவிட்டு இன்னொரு பிள்ளைக்கு ரகசியமாய் பழம் கொடுத்த வம்சம் இப்படித்தான் இருக்கும்...


இந்த கொலைவெறி சூழலில் எனக்கெல்லாம் திருமணம் முடிந்தது எவ்வளவு பெரும் விஷயம்?, தாமதமாகத்தான் புரிகின்றது.


இவர்கள் கட்டளைகளை கண்டால், பாகம்பிரியாளை வணங்கிவிட்டு வானத்தை நோக்கி கத்த தோன்றுகின்றது


அப்பாவியான மனைவி எவ்வளவு பெரும் வரம்.


"இயேசப்பா..கோட்டான கோடி நன்றி இயேசப்பா.. கோட்டான கோடி நன்றி"

No comments:

Post a Comment