Monday, March 20, 2017

சிம்புவின் புதிய படம் AAA ...

https://youtu.be/htg-y7FoGvw

வழக்கமான தன் அல்ட்ராசிட்டி டைட்டிலுடன் டிரைலர் வெளியிட்டிருக்கின்றார் சிம்பு, படம் AAA என்னமோ என அவரே வைத்துவிட்டார்


அது சென்சாரில் A வாங்கவேண்டிய படம் என அவரே ஒரு வசனமும் பேசுகின்றார் "இது பொண்ணுங்களே தொடாத டி.ஆர் படம் இல்லடா, பொண்ணுங்க உதட்ட பிச்சி எறியிற எஸ்.டி.ஆர் படம்"


முகம் நிறைய தாடியும், வாய் நிறைய பஞ்ச் டயலாக்கும், 1000 டெசிபலில் சத்தமான டண்டனக்காவும், வைத்திருந்தால் எந்த நடிகையாப்பா டி.ஆர் பக்கம் வருவாள்??




இதில் டி.ஆர் பெண்களை தொடவே இல்லை என பெருமை வேறு, ஒரு கரடி குட்டியினை அருகில் விட்டால் கூடத்தான் பயந்து ஓடியே விடும்.


பெண்ணின் உதட்டை கடிப்பது ஏதோ செவ்வாய்க்கு சென்று ஆப்பிள் கடிப்பது போல மிக கஷ்டமான காரியம் என சிம்பு டிரைலரில் சீறிகொண்டிருக்கின்றார்


உருப்படுமா?


தயாரிப்பாளர் ராயப்பனை இனி வாடிகனின் ராயப்பர்தான் காப்பாற்றவேண்டும்...


சிம்பு பிறந்தவுடன்" இவன் ஒருகாலமும் திருந்திவிடவே கூடாதுப்பா சாமி.." என ஏதோ ஒரு கோயிலில் நேர்ந்து விட்டிருக்கின்றார்கள்


அது மிக சக்தியான தெய்வம் போலிருக்கின்றது, சிம்புவினை திருந்தவே விடாது, சிம்புவும் திருந்தவே மாட்டார்..



No comments:

Post a Comment