Wednesday, March 22, 2017

முத்து என்றொரு படம்...

https://youtu.be/ooQcFZIGJCw




அது ரஜினிகாந்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த காலம், ஜெயலலிதாவுடன் அவருக்கு பிரச்சினை இருந்த காலம்


அப்பொழுதுதான் முத்து என்றொரு படம் வந்தது, தன் படத்தில் அரசியல் பொடி தூவும் ரஜினி அதிலும் தூவியிருந்தார்


அதாவது மீனாவும், காந்திமதியும் , வடிவேலுவும்(ஜெயா சசிகலா தினகரன்) எல்லாம் நாடக கம்பெனி நடத்துவார்கள், நாடகம் பார்க்கும் ரஜினிக்கும் மீனாவிற்கும் மோதும்





நான் நடிக்கும் பொழுது நீ எப்படி தும்மலாம் என மீனா கேட்க, தும்மினால் கூட தப்பா? என காட்சிகள் தொடங்கும்

பின் அரசியல் வசனங்கள் தூள்பறக்கும், ரமேஷ் கிருஷ்ணா ஜால்ரா வசனங்களில் ரஜினியினை மேடை ஏற்றுவார்கள், ரஜினி என்னவெல்லாமோ பேசுவார்

இது தியேட்டருக்குள் நடந்தாலும், தமிழகமெங்கும் ரஜினி அரசியலுக்கு வருவது போலவும், ஜெயாவினை அவர் பகிரங்கமாக எதிர்த்து பேசிவிட்டது போலவும் பரவசபட்டுகொண்டார்கள்

கிட்டதட்ட 20 வருடங்கள் ஆகின்றன‌

இன்று அந்த நாடகம் வேறுமாதிரி நடக்கின்றது, மீனா இல்லை, ஆனால் காந்திமதியும் , வடிவேலுவும் இருக்கின்றனர் அதுவும் வடிவேலு மன்னராகிவிட்டார்

ரஜினி நாடகம் பார்த்துகொண்டிருக்கின்றார்

எங்கே தும்மல் சத்தம் வரும்? இத்தனைக்கும் பல சரத்பாபு எஜமான்கள் "தும்மு முத்து தும்மு" என்றாலும் ம்ஹூம்..

மீனாவிற்கு எதிராக பொங்கிய ரஜினி, காந்திமதிக்கும் வடிவேலுக்கும் கனத்த மவுனம் காட்டுவதுதான் ஆச்சரியம்




 

 



 

No comments:

Post a Comment