Wednesday, March 22, 2017

மாணவி காதல் காட்சி என்றவுடன் சென்சார் சிக்கிகொண்டது

மயிலாடுதுறையில் மாணவி காதலுடன் உடன்போக்கு (அதுதான் ஓடி செல்லுதல்) சென்றிருக்கின்றோள், 8 மாத கர்பிணியாக மீட்கபட்டிருக்கின்றாள்


கோர்ட்டில் நிறுத்தபட்ட அவள், தான் காதலித்தது சென்றதற்கு சினிமா காட்சிகள்தான் காரணம் என சொல்லியிருக்கின்றாள், உடனே நீதிபதியும் சென்சார் போர்டுக்கு எப்படி காதல் காட்சிகளை அனுமதிக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்


அம்மாணவி கொஞ்சம் விபரமானவர், காதலுக்கு காரணம் சொன்னாரே ஒழிய, கர்ப்பமானதற்கு காரணம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் "நாங்கள் அதிலெல்லாம் கவனமாக காட்சிகளை வெட்டுவோம் மை லார்ட்" என சென்சார் தப்பித்திருக்கும்




மாணவி காதல் காட்சி என்றவுடன் சென்சார் சிக்கிகொண்டது


இந்த காதல் காட்சிகளால் ஒரு மாணவி வாழ்வு போயிற்று, இதற்கு சென்சார் என்ன சொல்ல போகின்றதோ தெரியாது


ஆனால் டாஸ்மாக் முதலான காட்சிகள் முதல் அந்நாளைய தனுஷ் இந்நாளைய ஜிவி பிரகாஷ், செல்வராகவன் படங்கள் வரை எப்படிபட்ட தத்துவங்களை வலியுறுத்தும் காட்சிகளை எல்லாம் சென்சார் அனுமதித்தது என சொல்லி தெரியவேண்டியதில்லை.. ..


இதிலெல்லாம் இந்த சென்சார் என்ன கிழித்தது? ஒன்றுமில்லை


பாய்ஸ் போன்ற படங்கள் வரும்பொழுது சென்சார் என்ன தடுத்தது?


எத்தனை ஆபாச பாடல்கள், அசைவுகள் இன்னபிற அழிச்சாட்டியங்கள் என பல இம்சைகளை இந்த போர்டு தடுத்ததா?


இக்காலத்தை விடுங்கள், அன்று ராமசந்திரன் இல்லாத பொய்களை சினிமாவினால் கட்சி நடத்தும்பொழுதே, "இங்கே பாருங்கள் ராமசந்திரன் உங்கள் கட்சி கொள்கைகளை சினிமாவில் சொல்ல அனுமதிக்க மாட்டோம்


அண்ணா என கத்துவது,அம்மா என அலறுவது.. ஆட்டுகுட்டி முதல் கிழவி வரை தூக்குவது இப்படி எல்லாம் அரசியல் செய்தால் வெட்டுவோம்" என சொல்லியிருந்தால் தமிழகம் இப்படி ஆகியிருக்குமா?


ஆக சென்சார் கமிட்டி பல இடங்களில் கண்ணை மூடி பல காட்சிகளை அனுமதித்து ராமசந்திரன் காலம் முதல் தமிழகத்தை கெடுத்திருக்கின்றது


அப்படியாக மயிலாடுதுறையில் ஒரு மாணவியின் வாழ்வினையும் கெடுத்ததாக நீதிமன்றம் சொல்லியிருக்கின்றது


இன்னும் எது எதனை எல்லாம் கெடுக்கும் என்பது தெரியவில்லை..



No comments:

Post a Comment