Tuesday, March 28, 2017

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் ...

https://youtu.be/IdzBUETV1Ho

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்க, அதற்கு ஆதரவாக மாணவர்களும் மெரீனாவில் கூடுவதாக செய்திகள் வருகின்றன‌


உண்மை நிலவரம் தெரியவில்லை


விவசாயி 24 மணிநேரமும் வேலையிலிருப்பவன், சொந்த வீட்டு விஷேஷத்தில் அவன் கலந்துகொள்வது மிக பெரிய விஷயம்,




அப்படிபட்ட விவசாயி டெல்லிக்கு சென்று பல நாட்களாக போராடுகின்றான் என்றால் சில விமர்சனங்கள் வரத்தான் செய்யும்


ராமேஸ்வரம் மீணவனுக்கு டெல்லி செல்ல இல்லாத வசதி, தமிழக ஏழை விவசாயிக்கு மட்டும் எப்படி சாத்தியம்?


மாநில அரசினை கண்டித்து சென்னையில் ஒரு எதிர்ப்பும் இல்லாமல், கண்டித்தால் மத்திய அரசினைத்தான் கண்டிப்போம் என கிளம்புவது பல சந்தேகங்களை கொண்டுவருகின்றது..


இவர்கள் டெல்லியில் குரலெழுப்புவதும் நாளொரு தலைவர்கள் அவர்களை பார்க்க செல்வதும், அப்பல்லோவில் ஜெயாவினை எல்லோரும் ஒவ்வொருவராக பார்க்க வந்த அதே காட்சிகள்


எங்கோ யாரோ விளையாடுகின்றார்கள், ஆடட்டும், அது இருக்கட்டும்


ஜல்லிகட்டு போராட்டம் என்பது வேறுமாதிரியானது


விவசாயிகள் பிரச்சினை தமிழக பிரச்சினை மட்டுமல்ல, அது இந்தியாவெங்கும் உள்ள பிரச்சினை, அதன் தன்மை வேறுமாதிரியானது.


"எடப்பாடி பழனிச்சாமி.." அரசினை கண்டிக்கின்றோம் என பெரும் போராட்டத்தை சென்னையில் நடத்திவிட்டு, நியாயம் கிடைக்கவில்லை டெல்லி செல்கின்றோம் என்றால் அது வரவேற்கதக்கது, நியாயமான போராட்டம்..


தமிழக அரசினை கண்டித்து ஒன்றும் சொல்லாத விவசாயிகள் டெல்லியில் சென்று தளைபிடிக்கும் மர்மம் புரியவே இல்லை..


டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு என மெரீனாவிலும் மாணவர்கள் கூடினால் அது முன்பு திரண்ட பெரும் கூட்டத்தை சில சந்தேகங்களோடே பார்க்க தோன்றும்...



No comments:

Post a Comment