Saturday, March 25, 2017

டிரம்ப் கொஞ்சநாளைக்காவது தாங்குவாரா?






17426271_10208748588127182_3309795388806791858_n.jpg


உலகில் ஒருமனிதரின் மூக்கு இருமாதமாக‌ உடைந்துகொண்டே இருக்கின்றது என்றால் அது டிரம்பின் மூக்குதான்


பதவிக்கு வந்து 3 மாதம் கூட ஆகாதநிலையில் அவருக்கு நடக்கும் அவமானங்கள் கொஞ்சம் அல்ல,உள்நாட்டில் மட்டுமல்ல, உலகமெல்லாம் பெரும் எதிர்ப்பு


வடகொரிய அதிபர், சீன அதிபர் உட்பட யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை , கத்திகொண்டே இரு என விட்டுவிட்டார்கள்.





சிரியாவிலும் ஒன்றும் புட்டீனை மீறி அவரால் செய்யமுடியவில்லை, அங்கும் தோல்விதான்.

உள்நாட்டிலாவது மதிக்கின்றார்களா என்றால்? சுத்தமாக இல்லை

ஒபாமா கொண்டுவந்த இன்சுரன்ஸ் திட்டத்தை "ஒபாமா கேர்" எனும் திட்டத்தை அவர் ரத்து செய்வதாக அறிவித்தார், அமெரிக்க அமைப்புபடி அதற்கு செனட் சபை அங்கீகாரம் வேண்டும்

ஆனால் அது "சோலியினை பார் , அப்படி எல்லாம் ரத்து செய்ய முடியாது.." என அறிவித்துவிட்டது , பொதுவாக இப்படி செய்யமாட்டார்கள்

டிரம்பிற்கு பெரும் அவமானம், நிச்சயமாக பெரும் அவமானம்

உச்சகட்டமாக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூட தன் பங்கிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார், அதாவது டிரம்ப் இப்படி இனவெறி பேசுவது அறிவியல் மற்றும் விஞ்ஞான உலகில் பெரும் சிக்கல் வரும்

விஞ்ஞான உலகில் ஆதிக்கம் செலுத்தும்நாடு இப்படியான விவகாரங்களை கையாண்டால் அது பெரும் சிக்கலாகும் என எச்சரித்திருக்கின்றார்

டிரம்ப் கொஞ்சநாளைக்காவது தாங்குவாரா? எனும் ரீதியில் பிரச்சினை சென்றுகொண்டிருக்கின்றது

இடையில் புட்டீனின் பார்வை வேறுமாதிரி திரும்புகின்றது

அதாவது இலங்கை அதிபர் மைத்ரிபாலாவினை அழைத்து, ஒரு பரிசினை அளித்திருக்கின்றார், என்ன பரிசு அது?

200 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தபட்ட, கண்டி மன்னரின் வாள் ஒன்று இங்கிலாந்தில் ஏலம் விடபட்டது, அதனை எடுத்தார்
புட்டீன்

அதனை மைத்திரிபாலாவிடம் அன்பளிப்பாக கொடுத்திருக்கின்றார்.

இலங்கையினை பொறுத்தவரை கண்டி அரசனின் வாள் பெரும் பாரம்பரியமிக்க பெருமை மிக்க பொக்கிஷம்

இது சுயநலமான உலகம், ஒரு பைசா சும்மா கொடுக்கமாட்டாரகள், பின் புட்டீன் ஏன் வாள்
கொடுத்தார், கூடவே ஒரு போர்கப்பலும் கொடுப்பதாக சொல்லியிருக்கின்றார்.

இந்தியா கச்சதீவினை கொடுத்தது நமக்கு தெரியும், ஆனால் கொடுத்துவிட்டு திரிகோணமலையில் 300 ஏக்கர் நிலத்தினை இந்தியா வளைத்திருப்பது நமக்கு தெரியாது

இன்றும் அங்கு சிங்கள அரசு நுழையமுடியாது, பல வகையாக இந்திய ஆதிக்கம் செலுத்தும் இடம் அது.

இதில் புட்டீன் ஏன் கொடுத்தார்?

இலங்கை அருகில் டிகோ கார்சியா தீவு உண்டு, அமெரிக்க ராணுவமுகாம் உள்ளது. தீவு இங்கிலாந்திற்கு சொந்தமானது

இப்பொழுது சீனாவினை தடுக்க‌ இலங்கையில் தளம் அமைக்கும் யோசனையில் உள்ளது அமெரிக்கா, இது புட்டீனுக்கு பிடிக்குமா?

மனிதர் இப்படி களமிறங்குகின்றார். இலங்கையின் ஆட்டமே இதுதான் எல்லா நாடுகளுக்கும் அது ஒரு "சொப்பன சுந்தரி".

கூவத்தூரில் இருந்த எம் எல் ஏ போல கொடுத்து வைத்த நாடு அது, அப்படி ஆளாளுக்கு பொன்போல கொண்டாடுவார்கள்..

இந்தியா கச்சதீவினை கொடுத்து, திரிகோணமலையினை வளைத்தது

புட்டீன் வாளும் கப்பலும் கொடுத்து எதை வளைப்பாரோ தெரியாது...

என்ன இருந்தாலும் புட்டின் முன்னாளைய கேஜிபி பயிற்சிபெற்ற உளவாளி, அவருக்கு எல்லா வித்தையும் அத்துபடி

ரஷ்யா இனி அவ்வளவுதான் என சொன்ன காலங்களில் பதவிக்கு வந்த அவர், அதனை தூக்கி நிறுத்திவிட்டு இப்பொழுது சிரியா, ஈரான், இலங்கை என அடித்துவிளையாடுகின்றார்

"கத்துகிட்ட வித்தையெல்லாம் மறக்கலடா..." எனும் வரிகள் அவருக்கும் பொருந்தும்...




 



No comments:

Post a Comment