Friday, March 17, 2017

வருங்கால டாக்டர்கள் எல்லாம் போராட்டம் நடத்துகின்றார்களாம்

வருங்கால டாக்டர்கள் எல்லாம் போராட்டம் நடத்துகின்றார்களாம்


இவர்களுக்கு செலவழிக்கும் அரசாங்கம் கையினை பிசைந்துகொண்டிருக்கின்றது,


அதாவது இந்நாட்டு மக்களை காக்கவேண்டிய மருத்துவர்களின் இந்த மருத்துவர்களின் போராட்டம் அர்த்தமற்றது, பொறுப்பில்லாதது




ஓவ்வொரு நொடியும் தேவைபடுவது அவர்களின் சேவை, இப்படி மறுதலித்து நின்றால் ஏழைமக்களின் அவஸ்தை சொல்லமுடியாதது.


மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்திருப்பவர்கள், உயிரை காக்கும் உன்னத பணி அவர்களுடையது.


ராணுவமும், காவல்துறையும், மருத்துவதுறையும் ஓய்வெடுக்க முடியாதவை, அவை நின்றால் தேசம் இயங்காது


யாரேனும் மருத்துவரின் அருமை தெரியாமல் அவமதித்திருந்தால் அவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்கள், அதனை செய்யட்டும்


எவ்வளவோ பணம் செலவழித்து அரசாங்கம் கொடுக்கும் அந்த பயிற்சியினை , சில ஈனர்களுக்காக வீணாக்காதீர்கள்


அப்பல்லோ போன்ற மருத்துவர்கள்தான் மனசாட்சியினை கழற்றிவிட்டார்கள் என்றால், ஏழை மக்களின் மருத்துவர்களும் அப்படி செய்ய முடியுமா?


இந்த நாட்டின் ஏழை மக்களுக்காகவாது அந்த மருத்துவர்கள் பணிக்கு திரும்பட்டும்..


அந்த 2 சமூக விரோதிகளுக்காக மொத்த நோயாளிகளையும் வதைப்பது மருத்துவத்தின் மேன்மைக்கு அழகல்ல‌






மாணவியை தாயாக்கிய பாதிரியார்: உடந்தையாக இருந்த பாதிரியார், கன்னியாஸ்திரிகள் போலீசில் சரண்


திருச்சபையினை வளர்க்க வந்தவர்கள், கும்பலாக என்ன வளர்த்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா?


கிறிஸ்தவனாக ஒருவனை மாற்றுவது கடினம், அதனால் கிறிஸ்தவனாக பிறக்க வைக்கலாம் என முடிவு செய்திருப்பார்கள் போலிருக்கின்றது




"சின்னஞ்சிறியோருக்கு இடைஞ்சலாய் இருப்பவன் கழுத்தில் கல்லை கட்டி கடலில் தள்ளலாம்" என்கின்றது பைபிள், ஆனால் இங்கே உள்ளே தள்ளியிருக்கின்றார்கள் பரவாயில்லை


இப்பொழுது சிறையில் பாதிரியார்கள் ஒருவருக்கொருவர் பாவசங்கீர்த்தனம் செய்துகொண்டிருப்பார்கள்....







 


No comments:

Post a Comment