Monday, June 27, 2016

கலைஞர் வேதனை

அமைதி பூங்காவான தமிழகம் இப்படி ஆகவேண்டுமா : கலைஞர் வேதனை

# எது தலைவரே? உங்கள் ஆட்சியில் பகிரங்கமாக அந்நிய நாட்டு தீவிரவாதிகள் பகிரங்கமாக வந்து இங்கு அடைக்கலமான அகதிகள் பத்மநாபா உட்பட 14 பேரை கொன்று அமைதி பூங்காவின் அமைதியினை கெடுக்கும்போது என்ன செய்தீர்கள்? அந்த புலிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

# அதுவும் சிவராசன் பிடிபட்டும் தப்ப செய்தது யார்? அவனால் காயபட்ட போலிசாரின் குரலை அமுக்கியது யார்? கொலை வழக்குத்தான் வேண்டாம்? பாஸ்போர்ட் விசா எல்லாம் சிவராசன் வைத்திருந்தானா?

# பெட்ரோல் பங்க், வெடிமருந்து தொழிற்சாலை, மருந்து கம்பெனி என புலிகளுக்கு தமிழகத்தை திறந்துவிட்டு அமைதி பூங்காவினை உருவாக்கியது யார்? கிட்டதட்ட காயம்பட்ட புலிகள் 700 பேர் தமிழகத்தில் இருந்திருக்கின்றார்கள். மேலும் ரகசியமாக இயங்கிய புலிகள் 500ஐ தாண்டுகின்றது,

ராஜிவ் கொலை விசாரணைக்கு பயந்து செத்த புலிகள் மட்டும் 24, பிடிபட்டது 100க்கும் மேல்.

இவை எல்லாம் உங்கள் ஆட்சியில் தமிழகம் அமைதிபூங்காவாக விளங்கிய அடையாளமா? காஷ்மீரில் கூட இப்படிபட்ட அமைதிபூங்கா உருவாகவில்லையே?

ராஜிவ் கொலை நடக்காவிட்டால், அறிவாலயம் அல்லவா புலிகளின் ஆயுத களஞ்சியமாக மாறி இருக்கும்? அதுவும் உங்கள் பாஷையில் அமைதி ஆலயமா?

# 1990ல் மாய்ந்து மாய்ந்து புலிகளை வளர்த்து, அமைதி பூங்காவான தமிழகத்தில் எனக்கு ஆபத்து இல்லை என கழுத்தை நீட்டி மாலைவாங்கிய ராஜிவ் சிதற காரணம் யார்?

# அந்நிய நாட்டு தீவிரவாதிகளை வளர்த்தகாலம் அமைதி பூங்கா காலமா? சொந்த தகறாறில் கொலைகள் விழுவது அமைதி பூங்கா கலையும் சோகமா?

# சீமானிடம் புலிகள் பற்றி பேசுவதை நிறுத்துங்கள் என கண்டிக்கவேண்டியுள்ளது, உங்களிடமோ 1990ல் உங்கள் புலி ஆதரவினை பற்றி பேசுங்கள் என கெஞ்சவேண்டி உள்ளது. அவன் பேசியே கொல்கிறான், நீங்களோ பேசாமலே ஆத்திரபட வைக்கின்றீர்கள்

சென்னையில 3 வாரத்தில் தொடர் கொலைகள் நடக்கின்றன, எண்ணிக்கை 10க்கு மேல் செல்கிறது, கொல்லபட்ட எல்லோருமே தமிழர்கள், கொல்ல சொன்னவர்கள் அல்லது கொன்றவர்களும் தமிழர்களாகவே இருக்கின்றனர் என்கிறது முதல்கட்ட ஆய்வு

# கொன்றவன் மட்டும் சிங்களனாக, தெலுங்கனாக இருந்தால் இந்நேரம் "நாதியற்ற இனமா என் மானதமிழினம்????, இப்படி இலங்கையில் நடந்தபொழுதுதான் என் குலசாமி பிரபாகரன் எழும்பினான், ஏய் இந்திய ஏகாதிபத்தியமே..ஏ வந்தேறி கலைஞரே.. இதற்குதான் தமிழனை தமிழன் ஆளவேண்டும்" என கிளம்பி இருப்பார்கள்

# ஆனால் தமிழனை தமிழன் கொல்லலாம், தமிழகத்தை தமிழன் சுரண்டலாம் எனும் தமிழ் தேசிய கொள்கைபடி, செத்தவனும் கொன்றவனும் தமிழன் என்றால் அது பிரச்சினை இல்லை, அதனை போல கலைஞர் முதல்வராக இல்லை என்றாலும் அறவே பிரச்சினை இல்லை.

# இதுதான் தமிழ்தேசியம் என்ற தறுதலை தேசியம்.

No comments:

Post a Comment