Tuesday, June 14, 2016

முகநூல் கடவுளிடம் புகார்

தாங்கமுடியாத துயரில் ஏதோ ஒரு சோம்பி உள்ளம் உடைந்து கதறியிருக்கின்றது, கடவுள் அவர்களை திரும்பியோ, குனிந்தோ, நிமிர்ந்தோ பார்க்கமாட்டார் அல்லவா, அதனால் முகநூலை படைத்தாளும் யூத கடவுள் மார்க்கரிடம் கதறியிருகின்றார்கள், அவர் என்ன பிரச்சினை என கேட்டிருக்கின்றார்

உலகின் கடவுள் பெருமாள், முகநூல் கடவுள் நீர், எமது கடவுள் பிரபாகரன் அவரை இந்த இந்தியன் விமர்சித்துவிட்டான், எங்கள் தற்கொலைபடை கலைஞரால் கலைக்கபட்டது, இல்லை என்றால் அவனை முடித்திருப்போம், ஒரு குப்பி சயனைடு இருந்தால் கடித்திருப்போம், ஆனால் ஒன்றும் இல்லை உங்களிடம் வந்தோம், அவனை விரட்டுங்கள்.

மார்க் கடவுள் என்னிடம் வந்தார், அவர் போராளியாமே, அவரை ஏன் விமர்சித்தாய் என்றார்

போராளிகள் என்ன கடவுளா? விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அதுவும் எல்லோரும் எழுதிய பின், அதுவும் 7 வருடம் கழிந்தபின் தான் நான் எழுதினேன் என்றேன்

இல்லை இல்லை விளக்கம்போதாது, அவர் அராபத், மாவோ, சே வரிசையாமே, என்றார்

அய்யன்மீர் உங்கள் ஊர் மர்லன் பிராண்டோவும், எங்கள் ஊர் சிவாஜியும் நடிகர்தான், எங்கள் ஊர் சாவித்திரியும் நடிகைதான், ஆனால் அவர்களை விட மிக சிறந்த நடிப்பினை வெளிபடுத்தும் நடிகை சன்னி லியோனையும், அபெல்லா டேஞ்சரையும் நீங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்வீர்களா?

சன்னி லியோனின் நடிப்பிற்காக இந்த வருடம் ஆஸ்கர் கொடுக்கபடுகின்றது என அறிவிக்க முடியுமா? இவ்வளவிற்கும் சர்வதேச நடிகை என்றேன்

மார்க் யோசித்தார், பொறு விசாரித்துவிட்டு வருகிறேன் என சென்றிருக்கின்றார்.

மொத்தத்தில் அவர்கள் புலனாய்வு குழுவின் சாதனை இதுதான், இதனை செய்ய கோயம்பேடு கோவிந்த்சாமி போதும்.

இதில் பெரும் காமெடி என்னவென்றால், இஸ்ரேலை கண்டித்து, படுபயங்கர மொசாத்தினை கண்டித்து, அமெரிக்காவினை விமர்சித்தெல்லாம் எவ்வளவோ எழுதியிருக்கின்றோம்

ஆனால் யூதரான மார்க் ஒரு வார்த்தை கூட தடை செய்யவில்லை

ஆனால் அழிந்துவிட்ட ஒரு இயக்கத்தின் எச்சங்கள் அட்டகாசம் தாங்கமுடியவில்லை.

 

1 comment: