Monday, June 20, 2016

இதுதான் நெஞ்சுக்கு நீதியா?

அதே தான் கலைஞரே, அதாவது நடிகர் சூர்யா கிரிக்கெட்டில் டக் அவுட் ஆனால் அது ஆச்சரியமில்லை காரணம் அவரின் கிரிக்கெட் திறன் அவ்வளவுதான்

ஆனால் அதே நட்சத்திர கிரிக்கெட்டில் சச்சினோ லாராவோ இப்படி அவுட் ஆனால் உலகம் என்ன சொல்லும்? இது மேட்ச் பிக்ஸிங், இது ஏதோ ஒப்பந்தம் என சொல்லுமா சொல்லாதா?

அதே சந்தேகம்தான் எங்களுக்கும், அல்லக்கை சீமானோ திருட்டு முருகனோ கத்துவது வினோதம் அல்ல, அவர்கள் அறிவு அவ்வளவுதான், ஆனால் பத்மநாபா படுகொலை எனும் பெரும் அஸ்திரத்தை புலிகள் மீது வீசவேண்டிய நீங்கள், அதற்காக பெரும் வனவாசம் மீண்டு பெற்ற ஆட்சியினை இழந்த நீங்கள் மகா அமைதியாக இருப்பதன் அர்த்தம் என்ன?


ஏதும் சொல்லாமலே 89 சீட் வென்றாகிவிட்டது என்ற தைரியமா? கெத்தா?

இல்லை, வாக்கு வங்கியா? நிச்சயம் இல்லை, அது சீமான் பெற்ற வோட்டிலே தெரிகிறது

பின்னர் ஏன் அமைதி? மகா அமைதி?

அப்படி என்ன மேட்ச் பிக்சிங்க் மர்மம் 1990ல் இருந்தது? நீங்கள் சொல்லமாட்டீர்கள், ஆனால் நிச்சயம் ஏதோ இருந்திருக்கின்றது

ஒருவேளை நீங்கள் அந்த பெருமகன் பத்மநாபாவினை காத்திருந்தால், இன்று அவன் ஈழம் திரும்பி எப்படி எல்லாம் அம்மக்களை காத்துகொண்டிருப்பான், அந்த அழிவின் சுவடுகளிலிருந்து மீட்டுகொண்டிருப்பான் என்பது உங்களுக்கு தெரியாததல்ல‌

ஆக 2009 இனபடுகொலைக்கு நீங்கள் காரணம் இல்லை எனினும், அம்மக்களின் மறைமுக துயருக்கு நீங்கள் ஒரு காரணம் என்பது உங்கள் நெஞ்சுக்கு நீதி உண்மையானால் உங்களையே சுட்டுகொண்டிருக்கும்.


புலிகள் தொடங்கி வைத்த 1983 கொழும்பு கலவரத்தில் சிறையில் கொல்லபட்ட தங்கதுரை மனைவிக்கு சென்னையில் வீடு வழங்கி ஆதரித்தார் எம்ஜிஆர், அப்படியே அவரின் புலி ஆதரவும் பிரசித்திபெற்றது,

புலிகளால் கொல்லபட்ட பத்மநாபா கொலையாளி தப்பி செல்லவும், அப்படி ஒரு வழக்கு பதியபடாமலும் புலிகளை பாதுகாத்தவர் கலைஞர். இன்றுவரை பத்மநாபா கொலைவழக்கு என ஒன்று கிடையாது

இப்படியாக புலிகளை வளர்த்த எம்ஜிஆர் மட்டும் தியாகி, அதே வழியில் வளர்த்துவிட்ட கலைஞர் துரோகி


பத்மநாபாவின் மனைவி இன்னும் சென்னையில்தான் வசிக்கின்றார் அபலையாக, அவருக்கு அரசின் சார்பில் ஒரு உதவியும் கிடைத்ததாக தெரியவில்லை, அக்கொலையிலிம் ராஜிவ் கொலையிலும் பங்குபெற்ற சின்னசாந்தனை விடுவி என்றுதான் இங்கு ஊர்வலம்.

பத்மநாபா விஷயத்தில் கலைஞரின் கனத்த மவுனம் ஏன்? 1990க்கு பின் இருமுறை முதல்வராயிருந்தும் பத்மநாபா குடும்பத்திற்கு ஒரு பைசா உதவாமால், செத்துபோன தமிழ்செல்வனுக்கு கவிதையும், 2 மணி நேர உண்ணாவிரதமும் ஏன்?வைகோவினை இவர் சிறை சென்று சந்தித்தது ஏன்?

பத்மநாபா குடும்பத்திற்கு ஒரு நீதி, வோட்டுக்காக ஒரு நீதி? கூட்டணிக்காக வைகோவுடன் ஒரு நீதி

இதுதான் நெஞ்சுக்கு நீதியா?

No comments:

Post a Comment