Monday, June 13, 2016

எப்படி ஏழு தமிழர் விடுதலையினை ஆதரிக்காமல் இருக்கலாம்?

எப்படி நீ ஏழு தமிழர் விடுதலையினை ஆதரிக்காமல் இருக்கலாம், சஞ்சய் தத் வெளிவரவில்லையா? ஏய் சல்மான் கான் கார் ஏற்றிய வழக்கு என்ன ஆனது? டெல்லி ரேப் என்ன ஆனது அவர்கள் எல்லாம் வெளிவரும்போது, மான தமிழர் வருவது உனக்கு பொறுக்கவில்லையா? என ஒன்று ஓலமிட்டுகொண்டிருக்கின்றது

அன்னார் பிறக்கும்போழுதே மூளை இல்லையா? அல்லது வளர மறுத்ததா அல்லது சீமானிடம் அடகு வைத்துவிட்டாரா என்பது தெரியவில்ல்லை, இல்லாவிட்டால் இப்படி அபத்தமாக ஒப்பீடுகளை தரமாட்டார.

சஞ்சய் தத்மீது கொலை வழக்கா? அவர் யாரை கொன்றார், ஆயுதம் பதுக்கினார். சல்மான் திட்டமிட்டா அபலைகள் மீது கார் ஏற்றினார்? வேண்டுமானால் மறு வழக்கு தொடு போ. டெல்லி ரேப் பற்றி பேசும் உனக்கு நாவரசு கொலையும், சரிகா ஷா ஈவ் டீசிங் சாவு எல்லாம் மறந்துவிட்டதா?


நீர் சொன்னெதெல்லாம் உள்நாட்டு குற்றங்கள், ஆனால் அடுத்த நாட்டுக்காரன் திட்டமிட்டு வருவான் திருப்பெரும்புதூரில் தீவிரவாத தாக்குதல் நடத்துவான், ஒரு தலைவனோடு மக்களையும் கொல்வான், அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையா? கவுரவ கொலையாளி எத்தனை பேர் உலாவுகின்றனர்.

அட அவ்வளவு ஏன்? நாம் தமிழர் முத்துகுமாரின் கொலையாளிகள் கைதுசெய்யபட்டனரா? சீமானே அதைபற்றி கேட்கவில்லையே ஏன்?

கவனி சென்னையில் பத்மநாபா கொலையாளிகளை இந்த நாடு தண்டித்ததா? அது அவர்கள் கோஷ்டி சண்டை என ஒதுங்கிய நாடு இது. ஆனால் அதற்காக அடுத்த 11 மாதத்தில் பெரும் படுகொலையினை இந்தியர்கள் மீது நிகழ்த்தும்போது சும்மா இருக்குமா?

ராஜிவ் கொலை ,இந்திரா கொலையாளி, காந்தி கொலையாளி, கசாப், அப்சல் குரு, மேமன் என்ற வரிசையில்தான் இந்த 7 பேரும் வருவார்கள் அப்பனே

கசாப்பினையும், குருவினையும் வெளியே விட்டுருந்தால் நீர் சொல்வதில் அர்த்தமுண்டு. ஆனால் கொடும் தீவிரவாத அந்நிய தாக்குதலுக்கும், உள்நாட்டு குற்றங்களுக்கும் வித்தியாசம் தெரியாத ஆளா நீர்?

அந்தோ பரிதாபம், உம்மை போன்ற குடிமகனை கொண்டிருக்கும் தேசத்தை பற்றி பரிதாபபடாமல் என்ன செய்ய?

ஆனாலும் நீர் வழக்கறிஞராக இருந்தால் ராம்ஜெத்மலானி எல்லாம் என்றோ அமேசான் காட்டுக்கு ஓடியிருப்பார், உங்கள் வாத திறமை அப்படி.

# உன்னை பெற்றதில் அவமானம் அடைகிறது நாடு

No comments:

Post a Comment