Thursday, June 23, 2016

கட்சத்தீவு ... சில உரிமைகள்.....

கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டாலும் அந்த ஒப்பந்தபடி இந்திய மீணவர்கள் அதனருகே மீன் பிடிக்கவும், அங்கு இளைப்பாறவும், வலை உலர்த்தவும் உரிமை உண்டு.

கச்சதீவு மீட்கபட்டாலும் நமது மீணவர்கள் செய்யபோவது இதுதானே தவிர, அங்கு குடியேறபோவது அல்ல, அங்கு குடிநீர் கூட கிடைக்காது.

ஒப்பந்தபபடி கச்சதீவு அவர்களிடமே இருந்தாலும், இந்த உரிமைகளை மீட்டுதாருங்கள் என மத்திய அரசினை வலியுறுத்தினாலே தீர்ந்தது விஷயம்.


இந்த உரிமைகளை மீட்டாலே பிரச்சினை தீர்ந்ததாகத்தான் பொருள், அங்கிருக்கும் அந்தோணியார் ஆலய சீரமைப்பினை மீணவர்களே பார்த்துகொள்வார்கள்

செய்யவேண்டிய காரியம் இதுதானே தவிர, அதனை விட்டுவிட்டு மீட்டே தீரவேண்டும் என்றால் எப்படி யாழ்பாண கரையோர தமிழ் மீணவன் விட்டுகொடுப்பான்? அவர்களும் அப்பக்கம் வரவேண்டுமா இல்லையா? அவர்கள் எங்கு செல்வார்கள்?

மீட்டு என்ன செய்யபோகின்றீர்கள் என்றால் மேற்சொன்ன காரியங்களை மட்டும்தான் செய்வார்கள், இதற்கு வலுகட்டாயமாக மீட்பது எளிதா? அல்லது ஒப்பந்தபடி உரிமைகளை பாதுகாப்பது எளிதா?

எளிதான காரியம்தான் ஆனால் செய்யமாட்டார்கள், அல்லது செய்யவிட மாட்டார்கள், காரணம் எல்லாம் அரசியல்

திண்ணையில் படுத்தாவது திராவிட நாடுகாண்போம் என்ற கழகத்தின் வம்சம் இது, இப்பொழுது திராவிடநாடு எங்கே? என கேளுங்கள், இப்போது வீடுகளில் திண்ணை இல்லை அதனால் கைவிட்டுவிட்டோம் என்பார்கள்

கச்சதீவு ஒப்பந்தபடி நமக்கு சில உரிமை உண்டு, அதனைத்தான் வலியுறுத்திபெறவேண்டுமே தவிர, மொத்தமாக எங்களுக்கு கிடைத்தால்தான் சரியாகும் என்பது பிரச்சினை வளர்க்கும் அரசியலே அன்றி வேறல்ல.

No comments:

Post a Comment