Wednesday, June 15, 2016

எல்லா புலிகளின் புகலிடமாக தமிழகம் அன்று இருந்தது

ராஜிவ் கொலைக்கு பின் தமிழகம் பெரும் சுடுகாடாக மாற இருந்தது, அத்தனை நூற்றுகணக்கான புலிகள் தமிழகத்தில் குழுமியிருந்தனர்

காயம்பட்டவர்கள், உளவு, தாக்குதல், அரசியல் என எல்லா புலிகளின் புகலிடமாக தமிழகம் அன்று இருந்தது

அச்சமயம் பல காவலதுறையினர் உயிரை பணயம் வைத்து தமிழகத்தை மீட்டனர், அவர்களில் ஒருவர்தான் அய்யா Jebamani Mohanraj


சிறந்த தேசபக்தர், ராஜிவ்கொலையாளிகளை துரத்தி துரத்தி வேட்டையாடிவர். சுருக்கமாக சொன்னால் இவரின் சில கோரிக்கைகளால்தான் இன்றும் 7 பேர் உயிராவது இருக்கின்றது,

நிச்சயம் தவிர்க்கமுடியாத தேசபக்தர், நெல்லையின் வீரம் அவரிடம் தெரிகின்றது

சீமானையும், வேலுச்சாமியினையும் இவர் கேட்கும் கேள்விக்கு இருவரும் சயனைடை கடிக்கலாம், அவ்வளவு அருமையான கேள்வி

அகதியாக வந்து பத்மநாபாவின் உணவினை உண்டு, அவரால் படிக்கவைக்கபட்டு பின் அவரை புலிகளிடம் காட்டி கொடுத்து சென்னையில் கொன்றது சின்ன சாந்தன்.

திருப்பெரும்புதூரில் மரகதம் சந்திரசேகரை ஏமாற்றி நடித்து ராஜிவினை புலிகள் நெருங்க வழி ஏற்படுத்தியவனும் அவனே.

அவனை நல்லவன் என சொல்லும் வேலுச்சாமியினை என்ன செய்ய?

சின்ன சாந்தன் அப்பாவி எனும் வேலுச்சாமியின் கேள்விக்கு அவனை பிடித்த இவரையன்றி யார் பதில் சொல்லமுடியும்? வேலுச்சாமியின் முகத்தில் கரிபூசமுடியும்

சொன்னார் பாருங்கள் "பெரிய சாந்தனை திருச்சியில் சுட்டுகொன்றது நான், இன்னொருவன் மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தான் அவன், அவளை சந்திக்க வந்த நள்ளிரவில் சுட்டு கொன்றேன்"

இதுதான் புலிகள் காத்த கண்ணியம், கோட்பாடு

வாழ்த்துக்கள் அய்யா உங்களால் நாடு பெருமை அடைகிறது Jebamani Mohanraj

(சு.சாமி வைகோ எல்லாம் எப்படி ராஜிவ் வழக்கில் இருந்து தப்பித்தார்கள் என சிலர் கேட்கலாம், அதற்கு ஜெயவர்த்தனே எப்படி புலிகள் பட்டியலில் இருந்து தப்பினார்? என எதிர்கேள்வி வரும் )

வந்தே மாதரம்

No comments:

Post a Comment