Monday, June 13, 2016

அமெரிக்கா ப்ளோரிடாவில் துப்பாக்கி சூடு




பிரிட்டனுக்கு எதிரான குடும்பசண்டையில் வாஷிங்டன் தலமையில் ஆயுதம் ஏந்தி விடுதலை பெற்றது அமெரிக்கா. போராட்ட காலத்தில்  எல்லோர் கையிலும் ஆயுதம் இருந்தது, ஆனால் நாடு விடுதலை அடைந்தாலும் அது நீடித்தது ஏன்?

ஒருவேளை பிரிட்டன் அரசுபோல அமெரிக்க அரசு மக்கள் விரோத கொடுமையான அரசாக மாறினால் அதனை அகற்ற மக்கள் உடனே ஆயுதம் தூக்கவேண்டுமாம்.  அதனால் அந்த ஆயுத உரிமை கொடுக்கபட்டே இருந்தது. உள்நாட்டுபோர் எனும் பெரும் குழப்பம் முடிந்தபின்னும் அந்ந உரிமை இன்னும் தொடர்கின்றது.

Stanley Rajan's photo.

மக்கள் அரசினை எதிர்க்கத்ததான் ஆயுதம் தூக்குவார்கள் மற்றபடி அமைதியாகத்தான் இருப்பார்கள் எனும் வாஷிங்டனின் நம்பிக்கை இன்று பொய்த்து கொண்டிருக்கின்றது.  அமெரிக்கா ப்ளோரிடா மாகாணம் ஓர்லாண்டோவில் வழக்கம் போல இன்று துப்பாக்கி சூடு. ஆனால் இம்முறை 50ஐ தாண்டுகிறது பலி.


அமெரிக்காவில் பஸ் டயர் கழண்டாலும் நாங்கள் தான் செய்தோம் என சொல்லும் ஐஎஸ் இயக்கம் இதனை விடுமா? உரிமை கொண்டாடுகின்றது.

இந்த சட்டத்தை எப்படி மாற்றுவது என அமெரிக்கா கடும் தலைவலியில் இருக்கின்றது, ஆயுதம் என்பது நமது சமைலறை கத்திபோலவே பழகிவிட்ட சமூகம் அது விடுமா? விடாது, அமெரிக்கா கையினை பிசைந்து நிற்கும் தருணமிது.

அமெரிக்காவில் எல்லோரும் ஆயுதம் வைத்திருந்தும் இம்மாதிரியான நிகழ்வுகள் எப்பொழுதாவதுதான் நடக்கும். எவனாவது மனநிலை பாதிக்கபட்டவன் சுடுவானே அன்றி, கும்பலாக சுட்டு சண்டையிட மாட்டார்கள். ஒரு வேளை இந்தியாவில் மட்டும் இப்படி வசதி இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அங்கிள் கோஷ்டி எல்லாம் எவ்வளவு அட்டகாசத்தில் இறங்கி இருக்கும்? நினைத்தாலே பகீரென்கிறது.













No comments:

Post a Comment