Monday, June 20, 2016

அவர்கள் ஓய்வதில்லை ....

யாரோ மார்க்கிடம் சொல்லி ஐடி முடக்கி வைத்திருந்தாலும் "அவர்கள் ஓய்வதில்லை", வந்து கேள்வியினாய் அனுப்பியிருக்கின்றார்கள், அதாவது ராஜிவ் கொலையில் சு.சாமி எப்படி தப்பினார், ச.சாமி எப்படி தப்பினார் சொல் என கடும் தர்க்கம், ஆனால் இன்னொரு ஆசாமியான கோபால்சாமியினை மட்டும் மறக்கின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள் :)

அதாவது புலிகளின் அரசியல் படுகொலைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒன்று புரியும், அவர்கள் கொல்பவர்களின் வரிசை 1990களில் அமெரிக்க எதிர்ப்பார்ளர்களகவே இருந்தது, அல்லது இந்திய சார்பாக அமெரிக்க எதிர்ப்பாளர்களாக இருந்தது

ராஜிவ், பிரேமதாசா போன்ற பகிரங்க அமெரிக்க எதிர்ப்பாளர்கள் கொல்லபட்டனர், பத்மநாபா போல கம்யூனிச சிந்தாந்தம் பேசி, இலங்கையில் அமெரிக்கர் கால்பதிக்கவிடாமல் செய்த (ஆலன் தம்பதி கடத்தல்) போராளிகளும் கொல்லபட்டனர், சபா ரத்தினம், அமிர்தலிங்கம் போன்ற இந்திய சார்பாளர்களும் கொல்லபட்டனர்.

அதாவது எக்காரணம் கொண்டும் அந்நாளைய அமெரிக்க எதிர்முகாமின் நாடான இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் நுழைந்துவிட கூடாது என்பதனை மிக கருத்தாக கொண்டு நடத்தபட்ட கொலைகள் அவை.

அதே நேரம் அமெரிக்காவினை எதிர்க்கும் இலங்கை அரசியல்வாதிகளும் இருக்கவே கூடாது எனும் ஒருவித பயம்

இந்த அடிப்படையில்தான் சகோதர இயக்க படுகொலைகளும், அரசியல் கொலைகளும் நடந்தன‌

ஆனால் படுபயங்கர இனவாதியும் கொலைகாரணுமான ஜெயவர்த்தனே மீதும், இன்னும் மிகச்சில அமெரிக்க அடிவருடி சிங்கள அரசியல்வாதிகள் மீதும் ஒரு கீறல் கூட புலிகளால் விழவில்லை, மகிந்தவினை புலிகள் அதிபராக அனுமதித்ததே அவரின் அமெரிக்க சார்புதான் எனும் சர்ச்சையும் உண்டு

சுப்பிரமணியன் சாமி அடிக்கடி அமெரிக்கா செல்வதும், சந்திரா சாமியின் அமெரிக்க தொடர்பும், கூடவே நமது ஊர்
வை .கோபால்சாமியின் அமெரிக்க தொடர்பும் சாதரணமானது அல்ல‌

எப்படி வைகோ ராஜிவ்கொலையில் இருந்து பெரும் கரங்களால் காப்பாற்றபட்டாரோ அப்படித்தான் பெரும் சக்தியால் சு.சாமி இன்றுவரை சுற்றிகொண்டிருக்கின்றார்.

சரி மிக பலமான காலத்தில் சென்னை முதல் ஐரோப்பாவின் பாரீஸ் வரை யாரை வேண்டுமானாலும் நொடியில் கொல்லும் சக்திபடைத்த புலிகள், சு.சாமி மீது ஒரு ஓலைவெடி கூட வீசா மர்மம் என்ன? அவரை பற்றி ஒரு வார்த்தை புலிகள் சொல்லியிருப்பார்கள்?

ஆக புலிகள் இந்திய ஆதிக்கமோ அதன் தலையீடோ இலங்கையில் ஏற்படாதவாறு பார்த்துகொண்ட ஒரு அமைப்பு, பின்னாளில் அது அமெரிக்காவிற்கு தேவைபடாமலும், கூடவே அமெரிக்காவினை பகைக்கபோய் கலகலத்து இல்லாமலும் அது போயிற்று, அவ்வளவுதான் விஷயம்.

அமெரிக்காவிற்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொல்ல அவர்கள் தயாராக இருந்தார்கள், அப்படித்தான் கொல்லவும் செய்தார்கள்,

ஆனால் ஒரு கட்டத்தில் தங்களை மிக தந்திரமாக நினைத்துகொண்டு அமெரிக்காவிற்கு பெப்பே காட்டநினைத்து வாங்கி கட்டிகொண்டார்கள், தமிழ்செல்வனின் படுகொலை சர்வநிச்சயமாக அமெரிக்கபாணி, அதாவது பங்கருக்குள் இருப்பவர் கொல்லபடுவார், ஆனால் உடலில் காயமே இருக்காது, ஆள் செத்திருப்பார்.

அது ஆப்கனில் பின்லேடனை முயற்சித்த அதே செல்போன் அடையாள தாக்குதல் பாணி, லண்டனுக்கு பேசிய 3ம் நிமிடம் கொல்லபட்டார் தமிழ்செல்வன், அது பிரபாகரனுக்கு விடுத்த கடைசி வாய்ப்பு, ஆயுதங்களை கீழே போடாவிட்டால் விடமாட்டோம் என பிரபாகரனுக்கு கொடுக்கபட்ட கடைசி வாய்ப்பு.

இறுதியாக இந்தபோராட்டத்தில் யார் வென்றிருக்கின்றார்கள் என்றால் நிச்சயம் இந்தியாதான், நேற்றைய யாழ்பாண நிகழ்வில் வீடியோவில் தோன்றிய மோடிக்கு யாழ்பாண மக்கள் எழுப்பிய உற்சாக கரகோஷமும், அவர்கள் முகத்தில் தென்பட்ட அதீத நம்பிக்கையும் அதனைத்தான் சொல்கின்றன‌

அன்று விமானங்களில் இருந்து உணவு வீசபட்டபொழுதும், அமைதிபடை சென்றபொழுதும் ஈழமக்கள் முகத்தில் இருந்த அதே நம்பிகையும் மகிழ்ச்சியும் மீள பார்க்கமுடிகின்றது.

ஒரு இடத்திலாவது இந்திய எதிர்ப்போ, கருப்புகொடியோ, இனபடுகொலை எனும் வார்த்தையோ யாழ்பாணத்தில் கேட்கவே இல்லை, யாவரும் நலம்.

இந்தியா பெரும் சக்தி என தன்னை நிரூபித்துவிட்டது. அந்நிய சக்திகளின் மிரட்டலை மீறி அது இலங்கையில் தன்னை பதித்துகொண்டது, இந்திரா போனால் ராஜிவ், ராஜிவினை கொன்றால், மன்மோகன்சிங், அவர் போனால் மோடி என இதோ இத்தேசம் சிலிர்த்து எழுந்து நிற்கின்றது. எங்கே பகைவர்? எமது ராண்வத்தை இதே யாழ்பாணத்தில் கொன்றொழித்த அந்த பகைவர் எங்கே?

ஜெயவர்த்தனே எப்படி உயிர் தப்பினார் ,கோபால் சாமி எப்படி வழக்கிலிருந்து தப்பினார் என சிந்திக்கமாட்டார்களாம், சு.சாமியினை மட்டும் கேட்பார்களாம்.

இது உலக அரசியல் என்றால், ஏய் வந்தேறி திராவிட அரசியலே தெரியாத உனக்கு உலக அரசியல் தெரியுமா? என்கின்றார்கள்

கட்டைவண்டியின் அமைப்பினை படிக்க என்ன இருக்கின்றது? ஆனால் விமான பொறியியல் அமைப்பினை படிப்பதில் இருக்கின்றது சுவாரஸ்யம்,

ஆனால் இவர்கள் கட்டைவண்டியினை தாண்டி வர மாட்டார்கள், அது கட்டைவண்டியாக இருந்தாலாவது கொஞ்சதூரம் நகரும், ஆனால் இது செக்கு

எத்தனை நூற்றாண்டு ஆனாலும் இப்படித்தான் சுற்றிகொண்டே இருப்பார்கள்.

அகப்பட்டுகொண்டால் நாமும் அப்படித்தான் சுற்றவேண்டும், வேண்டாம்

ரசிக்கவும் சிந்திக்கவும் இவ்வுலகில் ஏராளமான விஷயம் உண்டு

No comments:

Post a Comment