Wednesday, June 22, 2016

ஆப்கனுடன் உறுதியான உறவு

ஆப்கனுடன் உறுதியான உறவு: சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

# 1989க்கு முன்பு வரை இந்திய ஆப்கன் உறவு நன்றாகத்தான் இருந்தது, அதன் பின் குழப்பமான ஆப்கன் அரசியலும் ஆளாளுக்கு ஆண்ட தீவிரவாதிகளும் அந்த உறவினை குழப்பினர், உச்சகட்டமாக பின்லேடனின் மறைமுக ஆட்சியில் ஏர் இந்தியா விமானம் கடத்தபட்டு படுபயங்கரவாதி ஒருவனை "கைவீசய்யா கை வீசு, காந்தகார் போகலாம் கைவீசு.." என விடுவித்ததும் இந்திய‌ கருப்பு பக்கங்கள# ஆனால் அமெரிக்க கட்டங்களை பின்லேடன் இடித்துவிளையாட கிளம்பியபின்பு காட்சிகள் மாறின, ஆப்கன் நிலை மாறிற்று, இந்தியா அங்கே மறுபடி காலபதித்து சாலை பணிமுதல் அணை வரை கட்டிகொடுக்கின்றது


# இந்தியாவின் பொதுநலத்திலும் சுயநலம் இருக்கலாம், அங்கிருந்து பாகிஸ்தானை கண்காணிக்கலாம், பாகிஸ்தான் காஷ்மீருக்குள் எட்டிபார்ப்பது போல நாம் பலுசிஸ்தானில் உற்று பார்க்கலாம், தீவிரவாதம் கட்டுபடும் ஏர் இந்தியா கடத்தல் போன்றவை தடுக்கபடலாம், ஏராளமான விஷயம் உண்டு

# இதனை போலவே 1989வரை இலங்கையினை மிரட்டிய இந்தியா, அங்கு பயங்கரவாதம் ஒழிக்கபட்டவுடன் யாழ்பாண விளையாட்டரங்கு சீரமைப்பு, பலாலி விமான நிலைய சீரமைப்பு என புகுந்து அங்கும் தன்னை பலபடுத்திகொள்கின்றது

# இப்படியாக பயங்கரவாதத்தினை அண்டை நாடுகளில் முறியடித்து, நல்ல நட்புறவினை உருவாக்கி தீவிரவாத அச்சுறுத்தல் இல்ல்லாத இந்தியாவாக மாறிகொண்டிருக்கின்றது இந்தியா.

# ஒருகாலத்தில் இந்தியாவில் அடித்த கொள்ளையினை கொண்டுதான் ஆப்கனில் காஸ்னி அல்லது கஜினி நகர அணைகட்டினை கட்டினான் கஜினியின் முகமது என்பது வரலாறு, அவனது அரசுகுறிப்பு அதனைத்தான் சொல்கிறது, இலங்கை 1955 வரைக்கும் கிட்டதட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான பொருளாதார பலத்தினை கொண்டிருந்த பணக்கார நாடு.

# இன்றோ இந்தியா இவர்களுக்கு உதவிகொண்டிருக்கின்றது , ஒரே காரணம் அவர்கள் தீவிரவாதத்தால் கடுமையாக சீரழிந்தார்கள், நாமோ ஒற்றுமையிலும், சகோதரத்துவத்திலும் மிக அமைதியாக வளர்ந்து கொண்டிருக்கின்றோம்.

No comments:

Post a Comment