Friday, June 24, 2016

பிரிட்டனில் வாக்கெடுப்பு



கொஞ்சநாளாகவே பிரிட்டன் இந்த விஷயத்தில் தடுமாறிற்று, என்ன குழப்பம், அந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கவேண்டுமா, இல்லை நடையினை கட்டலாமா என குழம்பி தவித்தது, 2008ல் உலக பொருளாதார மந்தத்தில் இருந்தே இந்த குரல் கேட்கின்றது

அதாகபட்டது 28 ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்த அமைப்பு ஐரோப்பிய யூனியன், 58 ஆண்டுகளாக நடந்துவரும் ஒற்றுமையான சங்கம் இது, இதில் பல ஒப்பந்தம் உண்டு அதாவது எந்த ஐரோப்பிய‌ நாட்டு குடிமகனும் இந்த 28 நாடுகளுக்குள் எங்கும் செல்லலாம், வேலை செய்யலாம் என ஏகபட்ட சலுகைகள்.

இந்த 28 நாடுகளின் பொது கரன்சிதான் யூரோ நாணயம், இந்த ஐரோப்பிய யூனியனின் பெரும் நாட்டாமை ஜெர்மன்.

இப்பொழுது பிரிட்டனில் சிக்கல் எங்கு தொடங்கிற்று என்றால், இந்த அடுத்தநாட்டுகாரர்கள் வரலாம் வேலை செய்யலாம் என ஒரு பாயிண்ட் வருகிறது அல்லவா?, அதில் தான் சிக்கல்

கிரீஸ் முதல் போர்சுக்கல் வரை சகலரும் பிரிட்டனில் புகுந்தார்கள், சில நாட்டு அகதிகள் புகுந்தார்கள் விளைவு பிரிட்டன் மக்களின் நலன் பாதிக்கபட்டதுStanley Rajan's photo.

அது பெரும் பிரச்சினையாக வெடித்தது, ஆனால் ஐரோப்பிய நாடுகளோ இது ஒப்பந்தம் அடிப்படையிலானது என மிரட்டின.

ஓஹோ சங்கத்தில் இருந்தால்தானே பிரச்சினை விலகுவோம் என குரல்கள் ஒலித்தன‌

ஆனால் பிரிட்டனின் பொருளாதாரம் பெரும் வலுவாக இல்லாத காரணத்தால் அரசால் விலக முடியவில்லை, அப்படி விலகினால் நாடு பாழாகும், பெரும் மதிப்பில் இருக்கும் பிரிட்டன் பவுண்டு, டாலருக்கு நிகராகும் என அவர்கள் அஞ்சுகின்றார்கள்

ஆனால் மக்கள் கேட்பதாக இல்லை, அது மக்களாட்சி நாடு அல்லவா? ஒரு வாக்கெடுப்பிற்கு ஏற்பாடாயிற்று

இதோ வாக்களித்து முடித்துவிட்டார்கள், இனி முடிவு தெரியும்

விலகுகிறோம் என முடிவு வந்தால் மக்களுக்கு வெற்றி, தொடர்வோம் என முடிவு வந்தால் அரசாங்கத்தின் வெற்றி.

ஆனால் பாருங்கள், வாக்களிப்பு வேண்டாம், போராடுபவர்களை தூக்கி உள்ளே போடு, நாலு வழக்கினை போடு என்றால் முடிந்தது விஷயம், ஆனால் செய்யவில்லை காரணம் அது உண்மையான மக்களாட்சி

மக்களும் டாஸ்மாக் தகறாறு, 7 பேரை விடுதலை செய், தொப்புள் கொடி உறவு தென்னாபிரிக்க கருப்பர்களிடம் அடி வாங்குகின்றது, என்றெல்லாம் கொடிபிடிக்கவில்லை மாறாக மிக அத்தியாவசியமான பிரச்சினையில் வாக்கெடுப்பு கோரினார்கள்.

நமது நாட்டில் இதெல்லாம் சாத்தியமில்லை, நமது மக்களும் கேட்கமாட்டார்கள், அரசும் செய்யாது

அணுவுலை போன்ற மகா முக்கிய பிரச்சினைகளில் செயல்படுத்தி பார்க்கவேண்டிய வாக்கெடுப்புதான், ஆனால் நமது மக்களின், அரசின் மனநிலை வேறு, அவர்கள் மனநிலை வேறு.

இப்படி ஒரு வாக்கெடுப்பு நடத்தபட்டாலும், நம் மக்கள் என்ன "எதிர் பார்ப்பார்கள்" என்பது உலகறிந்தது.

எப்படி ஆயினும் பிரிட்டன் மகா முக்கியமான ஐரோப்பிய யூனியன் நாடு, அது வெளியேறினால் அது பல விஷயங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது உண்மை

யூரோ பலம்பெற்று வருவதால், பிரிட்டனை வெளியேற்றினால் அது சரியும், அமெரிக்க டாலர் மதிப்பு கூடும் எனவே அமெரிக்க விளையாட்டும் இருக்கலாம் என்பது ஒரு தியரி,

உலகம் இந்த தேர்தலை உற்று கவனித்து கொண்டிருக்கின்றது, சில நொடிகளில் விடை தெரியலாம்.

இந்நொடியில் பெரும் பரபரப்பு இதுதான்

மக்கள் வென்றுவிட்டால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என கருதுகின்றீர்கள்?

வந்தேறிகளை விரட்டுவோம் என்பதை நாகரீகமாக செய்வார்கள், அதாவது நாட்டை சீரமைக்கின்றோம், கள்ள குடியேறிகளை தடுக்கின்றோம் என மறைமுகமாக விரட்டுவார்கள்.

உலகையே ஆண்டதாம் பிரிட்டன், வெறும் 4 கோடி கூட தேறாத மக்கள் தொகை, மிஞ்சிபோனால் 50 லட்சம் பேர் வெளிநாட்டுக்காரர்கள் இருக்கலாம், இதற்குதான் இத்தனை ஆர்ப்பாட்டம்.

120 கோடி மக்கள் இருந்தும் திபெத், வங்கதேச, பர்மா, ஈழ அகதிகள் என சோறுபோட்டு பாதுகாத்துகொண்டிருக்கின்றது நமது இந்தியா

ஒரு முணுமுணுப்பு வந்திருக்கும்? ஒரு இந்தியன் கத்தியிருப்பான்?

இதுதான் இந்திய பொதுநல ஞான மரபு, அயலானை தன்னில் ஒருவனாக காணும் மரபு, அழுபவனை காணும்பொழுதெல்லாம் அழும் குணம், அடுத்தவன் பசித்திருக்க காண சகிக்காத பெரும் குணம். வள்ளலார் மரபு

லண்டனில் தெரிந்துகொண்டிருப்பது அவர்களின் கொடும் சுயநல ஐரோப்பிய மரபு. தான்மட்டும் வசதியாக வாழவேண்டும் எனும் சுயநல குணம்

இந்தியா ஆல்வேய்ஸ் கிரேட்










No comments:

Post a Comment