Wednesday, June 15, 2016

ஏழு பேர் விடுதலை , முதல்வருக்கு மனு...





7 தமிழர் விடுதலை என அர்த்தமில்லாமல் முழங்கும் அந்த மங்குணிகளின் மனுவினை கூட கையால் வாங்காத தமிழக முதல்வர், செல்லி சென்று பிரதமரை சந்தித்து 29 கோரிக்கை அடங்கிய மனுவினை கொடுத்திருக்கின்றார்.

அதில் ஒரு இடத்தில் கூட அவர்களின் விடுதலை பற்றி பேசவே இல்லை, குறிப்பிடவுமில்லை.

ஆனாலும் தமிழகத்தில் கலைஞர் துரோகி, காங்கிரஸ் துரோகி என்றுதான் குரல்வரும், இப்பொழுதும் பாருங்கள் கவனமாக "தமிழக அரசு" என்றுதான் முணங்குவார்கள்


மங்குனிகள் இனி என்ன செய்யலாம்? இவர்களை விடுவிக்கும் அதிகாரமுள்ள, உரிமையுள்ள பொறுப்புள்ள ஒருவருக்கு மனு அனுப்பி கோரிக்கை விடுக்கலாம், அவரால் நிச்சயம் முடியும்

அவர் இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா

சிரிசேனாவும் கிட்டதட்ட 5 ஆயிரம் புலிகளை நாங்கள் விடுவித்து பராமரித்து வருகின்றோம் இந்த 7 புலிகளையும் வாழவைப்பது பெரும் விஷயமல்ல என சொன்னால் ஒருவேளை விடுதலை நடக்கலாம், இவர்கள் கொழும்பும் செல்லலாம்

காரணம் இன்னொரு நாடென்றால் அப்படி பயங்கர அழிவுகளை ஏற்படுத்திய புலிகளில் ஒன்றை கூட விட்டிருக்காது, டக்ளஸ் கருணா என முன்னாள் புலிகள் ஏற்படுத்திய அழிவுகள் அப்படி, இப்பொழுதும் புணர்வாழ்வு பெற்ற புலிகளால் முன்பு அடைந்த அழிவும் கொஞ்சமல்ல,

ஆனால் குடிமக்கள் என்பதால் இலங்கை அரசு விடுவிக்கத்தான் செய்திருக்கின்றது, அப்படி ராஜிவ் கொலை 5 குற்றவாளிகளையும் அவர்கள் கேட்டாலும் கேட்கலாம்.

இந்த 7 பேருக்கும் ஒரு பாயிண்டும் இருக்கின்றது, அதாவது அமைதிபடை அனுப்பிய ராஜிவினை கொன்றோமே தவிர, அனுப்ப சொன்ன ஜெயவர்தனவேவினை கொன்றோமா? இல்லை அல்லவா? அப்படி ஒரு "இலங்கை அபிமானிகள்" நாங்கள் என்றால் உடனே சிங்களம் மகிழும். அரசு பணி கூட கிடைக்கலாம்.

எல்லா முன்னாள் புலிகளும் சிங்களனால்தான் விடுதலை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் , தமிழர்களால் இல்லை என்பது குறிப்பிடதக்கது

தமிழக தமிழர்களால் ஈழக்களுக்கு ஒன்றும் கிழித்துவிட முடியாது அந்த காலங்கள் எல்லாம் கடந்து 26 வருடம் ஆகின்றது என்பதனை உணர்ந்தால் இப்படிபட்ட முடிவிற்குதான் அந்த கைதிகள் வரமுடியும்.

# ஆனால் அப்படி சிங்களன் 7 தமிழர் விடுதலை கோரிக்கை விடுத்தால் நிச்சயம் தடுக்கப்போவது யார் தெரியுமா? சைமன், நெடுமாறன், வைகோ , திருமுருகன் காந்தி , சிங்களன் விடுவித்து வீரதமிழன் விடுதலை ஆவதா? முடியாது,

அதற்கு தமிழக சிறை பரவாயில்லை :)







No comments:

Post a Comment