Tuesday, June 7, 2016

ந‌மக்கு மட்டுமா நாடில்லை?

தமிழ் உணர்வாளர் என தன்னை நம்ப சொல்லும் ஒருவர், ஒரே அழிச்சாட்டியம், பார் "தமிழன் இல்லா நாடில்லை தமிழனுக்கோர் நாடில்லை, இந்த இழிநிலை நீக்கத்தான் நாங்கள் எல்லாம் போராடுகின்றோம், நீ மானமுள்ள தமிழன் என்றால் எம்மோடு இணைந்துகொள், நமக்கொரு நாடு வேண்டாமா?, இன விடுதலை வேண்டாமா? நாம் கல்தோன்றி, கள் தோன்றி....." என கடும் முழக்கம்

# நான் சொன்னேன், ந‌மக்கு மட்டுமா நாடில்லை? சீக்கியன், கன்னடன், மலையாளி, ஆந்திரன், ஒரியன், மராட்டியன், காஷ்மீரி, பீகாரி,ராஜஸ்தானி என பல இந்திய இனங்களுக்கும் நாடில்லை,


# உலகளாவிய நிலையில் பாஸ்க் , கெண்டனிஸ், ஹாக்கியன், அரமாயிக், போன்ற தனித்துவ மொழி பேசும் ஏராளமான‌ மக்களுக்கும் தனி நாடு இல்லை என்றேன்

# அவர்கள் எல்லாம் அடிமை, நீயும் அடிமை என சொல்லிவிட்டு ஓடிவிட்டது சோம்பி, அதற்கு தெரிந்த உலகம் இவ்வளவுதான், அதன் கண்களுக்கு தெரிவது சிங்களம், தமிழ், இந்தியா இந்த மூன்று இனமும்தான், அதாவது தமிழன் தனி இனம், மற்ற இந்திய இனங்கள் எல்லாம் ஓரினம், அது படித்த பள்ளி அப்படி, சீமானிய தோஷம்.

# இன்று பஞ்சாபில் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்த நாள், ஒவ்வொரு சீக்கியன் நெஞ்சிலும் ரத்தம் வழிந்த நாள், ஆனால் பின் தங்கள் தவறுகளை உணர்ந்துகொண்டார்கள், இத்தேசத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினை உள்ளது, அவர்கள் மனதிலும் வடுக்கள் உள்ளது, ஆனால் தேசாபிமானம் என்ற ஒற்றை புள்ளியில் இந்த தேசம் இயங்கி கொண்டிருக்கின்றது

# பொற்கோவில் போல எத்தனையோ சோதனைகளை கடந்ததுதான் இத்தேசம், இம்மாபெரும் தேசத்தை சிங்கள தீவின் சில துரும்புகளா அசைத்துவிட முடியும்? இந்த தேசத்தை தனக்கு சரிக்கு சமமாக கருதி சவால் விட்ட அந்த பிரபாகரனுக்கு ஆறாம் அறிவு என ஒன்று இருந்ததாகவே தெரியவில்லை, இன்று கிளம்பி இருக்கும் சீமானுக்கு 5ம் அறிவு மட்டுமே இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment