Tuesday, June 21, 2016

1947க்கு முன் பாகிஸ்தான் என்றொரு நாடு எங்கே இருந்தது?




முழு நேரமும் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு, கொஞ்சம் கஞ்சாவினை மேய்ந்துவிட்டு, அப்படியே 4 மாத்திரை உள்ளே தள்ளி, அதன் மேல் ஒரு போதை ஊசியும் போட்டு, கொஞ்சம் அபினோ பிரவுண் சுகரோ உறிஞ்சிவிட்டு, கொஞ்சநேரம் சில்க் ஸ்மிதாவின் கண்களை உற்றுபார்த்துவிட்டு

அதோடு ஒரு கலயம் கள்ளினை குடித்துகொண்டே அங்கிள் சைமனின் முழக்கத்தை கேட்டு விட்டு எழுத வந்தால் இப்படித்தான் எழுதுவார், அதுதான் சாத்தியம்

1947க்கு முன் பாகிஸ்தான் என்றொரு நாடு எங்கே இருந்தது? மீதி தேட அதிலும் இவரின் அறிவு புல்லரிக்க வைக்கின்றது, காஷ்மீரை எப்படி மறந்தார் என தெரியவில்லை, கள் எபெக்ட் அப்படி இருக்கலாம். சில்க் ஸ்மிதா கண்ணிற்கும் அப்படியான சக்தி உண்டு


Stanley Rajan's photo.

இந்த உளரலுக்கு இரண்டே வாய்ப்புதான் இருக்கமுடியும், ஒன்று மேற்சொன்ன போதை வஸ்துக்களை மொத்தமாக குடித்திருக்கலாம், அதோடு அங்கிள் சைமனின் பேச்சினை கொஞ்சநேரம் கேட்டிருக்கலாம்

அல்லது யாராவது குழப்பவாதி பேக் ஐடியில் இருந்துகொண்டு இப்படி எழுதி இஸ்லாமியர் கோபத்தை தூண்டலாம், வாய்ப்பு இருக்கின்றது.

அக்காலத்தில் தேர்தல் நேரத்தில் சில திமுகவினர் நள்ளிரவில் நன்றாக குடித்துவிட்டு, ஆதிதமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி கொண்டு அக்ரகாரங்களில் தங்கள் தலைவர் எம்ஜிஆர் எனவும், அவருக்கு வாக்களிக்கவில்லை என்றால் அக்ரஹாரம் எரிந்துவிடும் என்றெல்லாம் மிரட்டுவார்களாம்,

சில கற்களும் வந்து வீட்டின் மீது விழுமாம் (யுவர் அட்டன்சன் பிளீஸ்..என சொல்லவேறு செய்வார்களாம் )

அதாவது அப்படி எம்ஜிஆர் மேல் வெறுப்பு வந்து கலைஞருக்கு வாக்கு விழும் என கணிப்பாம்

துண்டு போஸ்டர் காலத்திலே அப்படி யோசித்த தமிழன், முகநூல் காலத்தில் விடுவானா?

ஒரு பயலையும் நம்பமுடியாது.













No comments:

Post a Comment