முற்றிலும் மூளை இல்லா கூட்டம் என்றால் அவர்கள்தான், அன்று இப்படித்தான் கலைஞர் டெசோ அமைப்பினை வைத்திருந்தார், அதாவது ஈழமக்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் மொத்த இந்தியாவும் களமிறங்கும் அமைப்பு அது, வாஜ்பாய், பருக் அப்துல்லா என பெரும் தலைவர்கள் இருந்தனர், இந்தியா முழுக்க ஈழ ஆதரவு பெருகிற்று, சிங்களமே திகைத்தது.
பொறுக்குமா புலிகளுக்கு? மாற்று இயக்க போராளிகளை கொல்ல தொடங்க வடநாட்டு தலைவர்கள் அமைதியானார்கள், ராஜிவ் கொலையோடு இந்தியா புலிகள் எதிரியாயிற்று, புலிகள் ஆசைபட்டது இதுதான் மொத்த தமிழகமும் கிளர்ந்தெழுந்து இந்தியாவினை எதிர்க்கவேண்டும், தன்னை மட்டும் ஆதரிக்கவேண்டும்.
ஆனால் அதெல்லாம் நிராசைகளாகி புலிகளும் சென்று சேர்ந்துவிட்டார்கள், ஆபத்து நீங்கியது.
அப்படிபட்ட புலிகளின் துரோகத்தினால் இன்று வாழ்வினை தொலைத்து மரண வாசலில் நிற்பவன் பேரரரிவாளன். இவருக்கு சம்பந்தமில்லை என புலிகள் ஒருவார்த்தை சொல்லி இருந்தால் இன்று பிரச்சினையே இல்லை.
அந்த புலிகளை கண்டிக்க மாட்டார்களாம், ஆனால் ஆதரவு சொன்ன சேதுபதியினை கண்டிப்பார்களாம், எவ்வளவு அறிவான அணுகுமுறை?
இந்தியாவில் தமிழகம் தாண்டி ஒரு குரல் அவனுக்கு ஆதரவாக ஒலிக்குமா என்றால் இல்லை, இதுதான் யதார்த்தம், அப்டி ஒலித்தாலும் 5 அந்நிய நாட்டவரையும், காதலுக்காக கொலை செய்த நளினியினையும் சேர்த்து 7 தமிழர் என ஒப்பாரி தொடங்குவார்கள்.
இப்படிபட்ட நிலையில் விஜய்சேதுபதி பேரரிவாளனுக்கு ஆதரவாக குரல் கொடுதிருப்பதை "தமிழர்கள்" கண்டிக்கின்றார்களாம், அவர் 7 தமிழர் என சொல்லி இருக்கவேண்டுமாம்.
அப்படி அவர் சொல்லமுடியுமா? 5 அந்நியநாட்டு தீவிரவாதிகளை தமிழர் எனும்பெயரில் விடுதலையாக நாமெல்லாம் விட்டுவிடுவோமா?
தெலுங்கர் பேசகூடாது என்பவர்கள் ஏன் சர்வதேச விசாரணை, போர்குற்றம் என அமெரிக்காவிற்கு புகார் தெரிவிக்கின்றீர்கள்? அமெரிக்கா என்ன தமிழன் அரசா?
மறுபடியும் அவர் தெலுங்கர், இவர் கன்னடர் என தமிழரை அந்நியபடுத்தும் செயலை, அதாவது புலிகளின் கனவினை இவர்கள் செய்துகொண்டிருக்கின்றார்கள், இதனால் ஆகப்போவது ஒன்றுமே இல்லை, நிச்சயம் இல்லை
இவர்கள் திருந்தும் காலம் புளூட்டோ கிரகம் தாண்டியும் தென்படவில்லை.
No comments:
Post a Comment