Tuesday, June 7, 2016

உண்மையினை இனியாவது உணர்ந்துகொள்

"பிரபாகரனாவது வீட்டுகொருவர் இயக்கத்தில் சேரவேண்டும் என்றார், கட்டாயபடுத்தினார், ஆனால் அவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனியோ குடும்பத்தில் அனைவரும் கட்டாயம் ஆயுதமேந்தவேண்டுமென்று கட்டாயபடுத்தியபொழுதே இயக்கம் வெலவெலத்து போயிற்று

யாரை பற்றியும் கவலைபடாத இந்த இயக்கத்தை எதிர்த்து எந்த போராளியும் கருத்துசொல்லமுடியாது, சொன்னால் போராட்ட பாதையினை குழப்பியதாக கொல்லபடுவார்கள்.

விருப்பமில்லாமல் கட்டாயமாக கதற கதற சேர்க்கபட்ட உறுப்பினர்களால் ஏற்படபோகும் ஆபத்தை கணிக்க தலமை தவறிவிட்டது, தலமைக்கு அதன் பிடிவாதமே முக்கியமன்றி மக்கள் அல்ல.


இந்த இறுதியுத்த காலத்தில் இயக்கத்திடம் வன்னியில் சிக்கி இருந்த அப்பாவி மக்களை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை

எந்தச் சமூகத்தை வாழவைக்க வேண்டுமென்பதற்காக நாம் போராடப் போனோமோ அதே சமூகத்தின் சீரழிவு நிலைக்கும் நாமே காரணமாக இருந்தோம்"

தமிழினி முன்னாள் போராளி

# எவண்டா அது? என்னை துரோகி, பொய்யான தகவலை பரப்புகிறான், காங்கிரஸ் அடிவருடி, புருட்டஸ், யூதாஸ் என சொல்லிகொண்டிருப்பது,

# ஏண்டா டேய், 30 வருடமாக இயக்கத்திலிருந்த தமிழினிக்கு தெரியாததா உண்மைகளா? அவர் அனுபவித்து பார்க்காத‌ கொடூர உண்மைகளா ? "பண"ங்காட்டிலிருந்த உனக்கு மட்டும் தெரிந்தது?

# லிங்க‌ "பிரசன்ன"மாக உன் கண்களுக்கு மட்டும் தெரிந்தது? உண்மையினை இனியாவது உணர்ந்துகொள்.

No comments:

Post a Comment