அந்த அடிமைகளுக்கு நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான், அலெக்ஸாண்டரோ, ராஜராஜ சோழனோ, செங்கிஸ்கானோ இமயவரம்பனோ, திப்புவோ,கட்டபொம்மனோ,மருதுவோ அல்லது இரண்டாம் உலகப்போரின் ஹீரோவான மெக் ஆர்தரோ இவர்கள் எல்லாம் நேருக்கு நேர் மோதியவர்கள், முன்னின்று படை நடத்தியவர்கள் இவர்களை மாவீரர்கள் என சொல்வதில் அர்த்தமுண்டு
பிரபாகரன் கிழித்தது என்ன?
யாருமே இல்லாத இடத்தில் அனாதையாக நின்ற பேருந்தை எரித்தார், ஆயுதமே இல்லாமல் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்த ஆல்பர்ட் துரையப்பாவினை கோட்சே பாணியில் கொன்றார் (இந்த துரையப்பா யாழ்பாண நூலகத்திற்கு அரும்பாடு பட்டவர்), அதன் பின் 1983ல் 10 பேரோடு சேர்ந்து கன்னிவெடி வைத்து 13 ராணுவ வீரர்களை தாக்கினார், அதன் பின் அவ்வீரர்கள் குற்றுகுயிராய் கிடக்க குறிபார்த்து சுட்டு தன் வீரத்தை வெளிபடுத்தினார்.
நண்பர்களான பற்குணம். மைக்கேல் போன்றோரை அருகிலே உறங்க வைத்து நள்ளிரவு விழித்து உறங்கும்போது சுட்டுகொன்றார்.
இதன் பின் அவர் எந்த தாக்குதலில் முன் நின்றார்?
எங்காவது பங்கரில் பதுங்கிகொண்டு அதை செய் இதை செய் என சொல்லிகொண்டு,பெண்கள் உடலில் தற்கொலை குண்டை கட்டி அனுப்பிகொண்டு கோழைபோல பதுங்கி இருந்தார்.
இந்திய அமைதிபடையினரோடு மோதும்போதும் புலிகள் கூலிபடையே, நடத்தியது சிங்களனும் இன்னொரு பெரும் வல்லரசும்.
எந்த யுத்தத்தையும் முன்னின்று நடத்தியவர் அல்ல பிரபாகரன். தளபதி கிட்டு,மாத்தையா, பால்ராஜும், கருணாவுமே பிரதானம்.
கிட்டு பிரபாகரனி துரோகத்தால் கால் இழந்தார், இந்தியாவிடம் டபுள் கேம் ஆடி செத்தார், மாத்தையா பிரபாகரனாலே கொல்லபட்டார், பால்ராஜ் நோயால் 2006ல் இறந்தார், கருணா பிரிந்தார்
இப்படி யாரும் இல்லாமல், 2009ல் கடைசியுத்தத்தில் பங்கரில் இருந்து வெளிவந்தார் பிரபாகரன், சிங்களன் எளிதாக போட்டு தாக்கினான்
கவனியுங்கள் அந்த உருவத்தை பார்த்தாலே தெரியும், அது ஒரு வேலையும் ஏன் உடல்பயிற்சி கூட செய்ததில்லை என்று, அவரின் இன்னொரு வரலாற்றினை படியுங்கள், இப்படியும் ஒரு மனிதனால் துரோகம் செய்ய முடியுமா என்பது புரியும்
இப்படி ஒரு யுத்த களத்திற்கும் செல்லாமல் பங்கருக்குள் பதுங்கிய ஒருவரா மாவீரன்?
டக்ளஸ் தேவானந்தா அழகாக சொல்வார், "ஒரு மனிதன் துயரத்தில் இருக்கும்போது அழுவான், சந்தோஷத்தில் இருக்கும் போது சிரிப்பான், சில நேரம் சிந்திக்கும்போது முகம் அமைதியாக இருக்கும், ஆனால் 24 மணிநேரமும் சிரித்து கொண்டே இருந்தான் பிரபாகரன்
யார் செத்தாலும் சிரிப்புதான், எத்தனை மக்கள் அழிந்தாலும் சிரிப்புதான், யாரை பற்றியும் அறவே கவலைபடாத சிரிப்பு, இயக்கத்தை உலகமே தடை செய்தாலுமா சிரிக்கவேண்டும்? அறிவுள்ளவன் சிரிப்பானா
மனநோயாளிகள் தவிர யாரும் இப்படி இருக்கமுடியாது, அவர் ஆயுதங்களை மட்டுமே நேசித்த மனநோயாளி"
No comments:
Post a Comment