மு.வரதராசன், பரிமேலழகர், கலைஞர் இவர்கள் மீது எனக்கொரு வருத்தமுண்டு, எத்தனையோ தமிழ் இலக்கியங்களுக்கு அருமையான உரை எழுதினார்கள், அது இன்றளவும் நிலைத்து நிற்கின்றது
ஆனால் அப்படியே இந்த பைபிளுக்கும், குறிப்பாக புதிய ஏற்பாட்டில் யோவான் நற்செய்தியிலிருந்து திருவெளிப்பாடு வரையிலான பகுதிகளுக்கு தமிழில் இவர்களை போன்றவர்கள் அல்லது பா.ராகவன் போன்றவர்கள் மொழிமாற்றம் செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்
தமிழ்தான், ஆனால் எவ்வளவு படித்தாலும் புரியவில்லை, எப்படி படித்தாலும் புரியவில்லை, தலைகீழாக, தொங்கி கொண்டு, அந்தரத்தில் பைபிளை பிடித்துகொண்டு என எப்படி படித்தாலும் அந்த தமிழ் புரியவில்லை,
புரிந்த தமிழும் மறந்துபோகும் அளவிற்கு மகா கொடுமையான தமிழினை அக்கால பிரமணாள் கையாண்டிருக்கின்றார்கள்,
பின்னர் வந்த சீர்திருத்தவாதிகளும் தன் பங்கிற்கு குழப்பி இருக்கின்றார்கள்.
ஒரு நல்ல தமிழனை கண்டுபிடித்து இன்னொரு முறை இதனை மொழிமாற்றவேண்டும், இல்லாவிட்டால் அந்நிய பாஷைதான் வழி, கடவுளுடன் நேரடியாகவே பேசிவிடலாம்.
கிறிஸ்தவம் தமிழகத்தில் பரவுவதை தடுக்க அன்றே செய்யபட்ட பாதுகாப்பு ஏற்பாடுதான் இந்த தமிழ்பைபிளாக கூட இருக்கலாம்,
No comments:
Post a Comment