Friday, June 3, 2016

மகா குழப்பம் பிடித்த ஒரு ஆசாமி ரிச்சர்ட் ஆர்மிடேஜ்





இந்தியாவில் சுப்பிரமணியன் சாமி போல அமெரிக்காவில் மகா குழப்பம் பிடித்த ஒரு ஆசாமி உண்டு, அவர் பெயர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்.

அன்னாருக்கு எங்கெல்லாம் உலகில் சண்டை நடக்கின்றதோ அங்கெல்லாம் வேலை கொடுக்கபடும், அவரும் சகலத்தையும் குழப்பி அடித்து பெரும் அழிவினை உண்டாக்கி திரும்புவார்

Stanley Rajan's photo.

வியட்னாமிய யுத்தகாலங்களில் அமெரிக்க உளவாளியாக இருந்தார், பின் நிகரகுவா கலவர காலத்தில் அங்கிருந்து போராட்டத்தை ஒழித்தார், ஈராக்கிற்கு சென்றால் அங்கும் சண்டை, அன்னார் இறுதியாக கால்வைத்த இடம் கொழும்பு சந்தித்த நபர் ராஜபக்சே, அதன் பின் புலிகளுக்கான எச்சரிக்கை அமெரிக்க தூதரிடம் இருந்தே பகிரங்கமாக கிளம்பி யுத்தம் தொடங்கிற்று





அப்பொழுதும் பாலசிங்கத்தின் ஒரு உதவியாளர் மூலம் வணங்கா மண் கப்பலை அனுப்புவதாக நாடகமாடினார், பின் 2010ல் வெற்றி வீரராக ராஜபக்சே அமெரிக்கா செல்லும் போதும் வரவேற்ற நபர் இவர்தான்.

ஏதும் பெரும் திட்டமில்லாமல் அன்னார் கிளம்பமாட்டார், யாரையும் சந்திக்கமாட்டார் என்பது சர்வதேச அரசியல் பாலபாடம், நிச்சயம் அது ஈழஆதரவு அல்ல, மாறாக இது சுத்தமாக துடைக்கும் முயற்சி.

அன்னார் இப்பொழுது புலம்பெயர் தமிழருடன் கருத்தரங்கு, ஆய்வு என ஏதோ செய்திகொண்டிருக்கின்றார், அதாவது புலிகளின் எச்சங்களையும், இன்னும் சில விஷயங்களையும் இல்லாமல் செய்யும் பணியினை செய்கின்றார், அப்படியே மைத்ரிபாலாவினையும் சந்திக்க போகின்றாராம்

சீமான் போன்ற கோமாளிகளை சீற வைத்து, அதன் பின் அவரை ஓரங்கட்டி மொத்த புலிசத்தத்தையும் அடக்கும் திட்டமாக இருக்கலாம்

மொத்தத்தில் புலிகளின் மிச்ச மீதி முணுகலை அடக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கின்றது.

இந்த ஆர்மிடேஜ், அமெரிக்க தூதுவர், இஸ்ரேலிய உதவி, ஈரான் இலங்கைக்கு கொடுத்த சில ஆயுதம், சீனா, பாகிஸ்தானின் பங்களிப்பு எல்லாம் அங்கிளின் மங்கிகளுக்கு தெரியாது

தெரிந்தது ஒன்றுதான், அது கலைஞர் ஈழத்தை அழித்தார், என்ன செய்ய பழக்கம் அப்படி,

கிளிப்பிள்ளைகள் எல்லாம் தமிழ்பிள்ளைகளாம்.






























No comments:

Post a Comment