Saturday, June 18, 2016

பத்மநாபா கொலைக்கு யார் பொருப்பு?



நாளை (19 சூன் ) பத்மநாபா கொல்லபட்ட நாள், அதன் முதல் குற்றவாளி புலிகள் எனினும் நிச்சயமாக சொல்லலாம் இரண்டாம் குற்றவாளி கலைஞரின் அன்றைய திமுக அரசு.

இன்று பச்சிளம் குழந்தைகள் அல்லது முளை விட்ட காளான்கள் எல்லாம் கலைஞர் படுகொலைக்கு துணைபோனவர், அவர் துரோகி என்றேல்லாம் பழிகளை வீசும்போது இன்னும் அவர் மவுனம் காப்பதேன். அன்றே புலிகளை அனுமதித்து பத்மநாபா படுகொலை எனும் தவறுக்கு உட்பட்டவன் நான் என சொன்னால் என்ன கவிழ்ந்துவிடும்?

சபாரத்தின படுகொலையோடு டெசோவினை கலைத்த கலைஞருக்கு, அமிர்தலிங்கம் கொலையோடே ஈழபிரச்சினையினை கை கழுவிய கலைஞருக்கு, கொஞ்சமாவது பத்மநாபாவின் உயிர்மீது அக்கறை இல்லாதது ஏன்?

எத்தனை முறை உங்களை சந்தித்து பாதுகாப்பு கேட்டவன் அவன், அமைதிபடையினை சந்திக்க மறுத்தது போல அவனையும் நீங்கள் விரட்டியடித்தது ஏன்?

இப்படி எல்லாம் கலைஞரை அடக்கி வைத்திருந்த புலி மர்மம் என்ன? வாக்கு வங்கியா? அது வைகோவின் நிர்வாண துறவறத்திற்கும் பின்ன்னும் அப்படி ஒன்று தமிழகத்தில் உண்டா? என கலைஞருக்கு தெரியாதா? இன்றும் அதனை பற்றி பேசாதது ஏன்?

[gallery ids="807,808" type="circle" columns="2"]

தனது ஆட்சியில் அந்நிய நாட்டவர் வந்து அப்படுகொலையினை புரிந்த போதும் குறைந்தபட்சம் சிபிசிஐடிக்கு கலைஞர் உத்தரவிடாத மர்மம் என்ன? அவ்வளவு ஏன்? தன்னை பிடித்த காவலர்களையும் தாக்கிவிட்டு சிவராசன் தப்பி செல்லுமளவிற்கு அவனுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? தமிழக காவல்துறை மறுபடியும் பிடித்த அவனை விடுதலை செய்து, தப்பவிட்டது யார்?

நிச்சயமாக கலைஞர் அரசு என்பதில் என்ன சந்தேகம்? அன்றே புலிகள் தமிழகத்தில் பெட்ரோல் பங்க், மருத்துவமனை, வெடி தொழிற்சாலை நடத்துகின்றனர் என்ற சு.சாமிக்கு கலைஞர் பதில் என்ன?

இப்படி பத்மநாபா கொலைக்கு இரண்டாம் குற்றவாளி கலைஞர்.

மூன்றாம் குற்றவாளி யார்? நிச்சயமாக இந்திய அரசு.

அவன் யார்? இந்தியாவின் நம்பிக்கைகுரிய போராளி, அவனுக்கு அடைக்கலம் கொடுத்த அரசு எப்படி பாதுக்காத்திருக்க வேண்டும்? இப்படியா அனாதையாக சாக விடுவார்கள்?

அப்படுகொலையோடே புலிகளை இந்தியாவிலிருந்து அகற்றினால், ராஜிவ் கொலை நடந்திருக்குமா? நிச்சயம் இல்லை

அதனை விட் பரிதாபமான விஷயம் என்னவென்றால் அவன் கொலைக்கு ஒரு விசாரணை கமிஷனோ அதன் முடிவொ இல்லை.

ராஜிவ் கொலைக்கு பின்னேதான் பத்மநாபா கொலை மர்மமே தெரிந்தது, ஒரு தலைவனை பாதுக்காக்க ஒருவன் செத்திருக்கின்றான், ஆனால அதன் மர்மம் அத்தலைவன் செத்த பின்புதான் விலகிற்று என்றால் இந்தியாவின் பரிதாபத்தை என்ன சொல்ல‌

வெறும் கடத்தல் கும்பலாக, மாபியா அதிகாரத்தில் பத்மநாபா எனும் சிந்தனையாளனை கொன்ற புலிகள் முதல் குற்றவாளி, அவர்களுக்கு துணை சென்ற கலைஞர் இரண்டாம் குற்றவாளி

அப்படுகொலையினை கண்டும் காணாமல் இருந்து பின் ராஜிவ் கொலையில் அலறி துடித்த இந்தியா மூன்றாம் குற்றவாளி.

நான் திமுக அனுதாபி இல்லை, ஆனால் ஒருமுறையேனும் அக்கட்சியில் சேர்ந்து, "இதற்கு ஏன் நீங்கள் பதில் சொல்லவில்லை, அப்படி ஒரு முறை இந்த கதைகளை, உங்களை நம்ப வைத்து பத்மநாபாவினை கொன்ற கொடூரத்தை, அதன் பின்னும் வந்து ராஜிவினை கொன்ற அந்த சைக்கோ மாபியா கும்பலை கண்டிக்க உங்களுக்கு என்ன பயம்?

உயிர் பயமா? அப்படியானால் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தது எல்லாம் சும்மவா? ஏன் இன்னும் மவுனம், அதுவும் கனத்த மவுனம். மன்னிக்கவேண்டும், ஒருவேளை புலிகளிடம் பணம் வாங்கிவிட்டுத்தான் மவுனமாக இருக்கின்றீர்கள் என ஒரு கட்டுகதை கட்டிவிட்டாலவது பதில் தருவீர்களா?

அதற்காகவாவது வாய் திறப்பீர்களா?

எதற்கு உங்களுக்கு தயக்கம்? ஏன் இன்னும் ஒரு மயக்கம்" என உலுக்கி கேட்க வேண்டும், அதோடு நான் கட்சியினை விட்டு நீக்கபட்டாலும் போதும்.

பாஷா ரஜினியிடம் கேட்பது போல கேட்கிறேன், "சொல்லுங்க..சொல்லுங்க..சொல்லுங்க.."" ஏன் இன்னும் அமைதியாக இருக்கீங்க, சொல்லுங்க.. சொல்லுங்க..சொல்லுங்க..

அவர் சொல்வாரா இல்லையா தெரியாது, ஆனால் ஓவ்வொரு முறையும் கலைஞர் இனபடுகொலையாளி, கலைஞர் துரோகி என அவர் மீது சேறு வீசப்படும்பொழுதெல்லாம் அவர் மனம் பத்மநாபாவிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்டுகொண்டே இருப்ப்பார்.

காரணம் அப்படுகொலை அவ்வளவு ரணமானது, தன் அரசியல் வாழ்வில் கலைஞர் செய்த பெரும் தவறு அது.

ஆனாலும் நன்றிகடன் என்றால் என்ன என்பதை மகாபாரத கர்ணனாக காட்டியவன் பத்மநாபா.

இந்தியா வந்து கொடூர புலிகள் இப்படித்தான் கொல்வார்கள், இந்திய தலைவர்களே உங்களை பாதுகாத்துகொள்ளுங்கள் என சொல்லி செத்தவன் அவன்.

தன் உயிர்கொடுத்து ராஜிவ் உயிர்காக்க துணிந்த ஒப்பற்ற தியாகம் அவனது.

( இனி பாருங்கள், பத்மநாபாவிற்கு ஒரு குரல் கேட்கிறது என்றால், நிச்சயம் வாய்திறக்க நினைப்பார் கலைஞர், அதில் 4 வோட்டு விழுமென்றால், பெரும் கவிதை பத்மநாபா பற்றி முரசொலியில் வரும்)


No comments:

Post a Comment