Thursday, June 23, 2016

பத்மநாபா... கலைஞர் நிலைப்பாடு

கலைஞரை பத்மநாபா படுகொலை சம்பவத்திற்கு விமர்சித்தால் சில திமுக சொம்புகள் பொங்குகின்றன.

அமைதிபடையினை இலங்கையிலிருந்து திரும்பசொல்லி விபிசிங் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது யார்? சென்னை வந்த அந்த அமைதிபடையினை, ராணுவத்திற்கு சொந்தமான கோட்டையின் முதல்வராக இருந்து வரவேற்காதது யார்?

பத்மநாபா சென்னைக்கு அகதியாக வந்தபொழுது ஒரிசாவிற்கு ஓடிப்போ என சொன்னது யார்? சரி அவருக்கு ஆயுதம் வைத்திருக்கும் உரிமையினை ஏன் கலைஞர் பறித்தார்.


புலிகள் ஆயுதமோடு தமிழகத்தில் நடமாடியபொழுது பத்மநாபா ஆயுதம் மட்டும் களையபட்டது ஏன்?

தமிழரை காப்பாற்ற அனுப்படபடை தமிழரை கொல்கிறது என சொல்லி திரும்ப சொன்ன கலைஞர், சட்டமன்றத்தில் மகாபாரத கதை சொல்லி நாடு அமையும் என சொன்னது ஏன்? யார் அமைத்து கொடுப்பார்கள் இந்தியா வந்த பின்பு? புலிகள் அமைத்துகொள்வார்கள் என்ற அர்த்தமன்றி வேறென்ன?

புலிகளை கலைஞர் தாங்கி பிடித்தது கொஞ்சமல்ல, அதற்காக பத்மநாபா உயிர்வரை அவருக்கு பொருட்டே அல்ல, ஆனால் ராஜிவ் கொலையும் அதன் பின் சிபிஐ விசாரணையில் பொறி கலங்கிய பின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது.

பிறந்ததல்லவா? அதனை வாய்விட்டு சொன்னால் என்ன? அதனைத்தான் கேட்டோமே தவிர வேறு ஒன்றுமில்லை.

வீரம் என்பது என்ன? ஆயுதம் தூக்குவது அல்ல, ஒரு கட்டத்தில் அதனை கீழே வைக்கவும் பெரும் தைரியம் வேண்டும் என்றார் சே, அவன் தான் மாவீரன்.

எப்பொழுது ஆயுதம் தூக்கவேண்டும் என தெரிந்த பத்மநாபாவிற்கு எப்போது கீழே வைக்கவேண்டும் என்பதும் சரியாக தெரிந்தது, அவன் வைக்க தயாரானான், அது தைரியம், அது வீரம்.

பத்மநாபா அன்று புலிகளின் மிரட்டலையும் மீறி தேர்தலில்  தைரியமாக நின்று வெற்றியும் பெற்றவர், அந்த இந்திய ஆதரவு பெற்றவரை சென்னையில் காப்பாற்றியிருக்க வேண்டியது தமிழக முதல்வரின் கடமையா இல்லையா?

ஆனால் அம்முதல்வர் செய்ததென்ன? பத்மநாபாவினை ஒரிசாவிற்கு நிராயுதபாணியாய் விரட்டிவிட்டு, புலிகளை அடக்கிகொண்டிருந்த இந்தியபடையினை வா என அழைத்தால் அத அர்த்தம் என்ன?

எவ்வளவு சொன்னார்கள் டெல்லி அதிகாரிகள்?. அங்கே தமிழருக்கு ஒரு உரிமையும் இல்லை, செயல்படுத்தவேண்டிய திட்டம் எவ்வளவோ உண்டு, நாமோ புலிகளுடன் சண்டையிட்டே 1.5 வருடம் வீணாகிவிட்டது, வரமுடியாது என சொன்னால் என்ன வரத்து வந்தார் கலைஞர்? அவரல் மறுக்கமுடியுமா?

இன்னும் அதிகமாக சொல்லவேண்டுமென்றால் அந்நாளில் கலைஞர் செய்தது புலிகளை ஆதரித்து இந்தியாவிற்கு எதிரான ................

1960ல் காமராஜரை எதிர்த்து அரசியல் செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் என பகிரங்க மன்னிப்பு கேட்ட கலைஞர், இந்த விஷயத்தில் மட்டும் கனத்த மவுனம் ஏன்?

ஈழபிரச்சினையில் கலைஞர் அமிர்தலிங்கம், டெசோ என சுற்றிகொண்டிருந்த பொழுது ஜெயலலிதா என்ன செய்துகொண்டிருந்தார் என தெரியாது, ஆனால் பின்னாளில் மிக தைரியமாக இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை இழுத்து வந்து தூக்கில் போடவேண்டும் என பகிரங்கமாக சொன்னவர் அவர்.

அந்த ஒன்றிற்காகவே அவரை பாராட்டலாம்.

அவர் என்ன அரசியலிருந்து விரட்டபட்டாரா? அல்லது தமிழக மக்கள் அவரை ஏற்றுகொள்ளவில்லையா? இன்றும் அவர்தானே முதல்வர்,

அவருக்குள்ள அந்த தைரியம் இவருக்கு இல்லாதது ஏன்?

அன்று புலிகளை ஆதரித்தற்காக மிகவும் வருதுகிறேன் என ஒரு வார்த்தை சொன்னால்தான் என்ன? டெல்லியிடம் சொல்லமலா இருப்பார்?

அங்கு மெல்லிய குரலில் ரகசியமாய் சொன்னதை இங்கு கரகரத்த குரலில் சொன்னால்தான் என்ன?

(பாருங்கள் இப்பொழுது வந்து கலைஞரே வாயடைத்து நிற்கும் அளவிற்கு சமாதானம் சொல்வார்கள் உடன் பிறப்புக்கள் )

No comments:

Post a Comment