Tuesday, June 21, 2016

கட்சத்தீவும், கட்சி அரசியலும்....



கச்சதீவு பிரச்சினையில் திமுக அதிமுகவினையும், அவர்கள் இவர்களையும் மாற்றி மாற்றி சொல்லிகொள்கின்றனர், இன்னும் பல பிரச்சினைகளில் இதனையேத்தான் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிகொள்வார்கள்.

அதாவது இரு கட்சியுமே தோற்றிருக்கின்றன, அதாவது மாநில கட்சிகளாக இவை மண்ணை கவ்வி இருக்கின்றன, ஒரு மாநில கட்சியின் எல்லைக்குள் இவ்வளவுதான் செய்யமுடியும், அதற்கு மீறி செய்வது ஊழல், அதற்கு இருவரும் குறைந்தவர்கள் அல்ல.

இரு கட்சிகளாலுமே மது வியாபாரம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது, அவ்வளவு பகிரங்கமாக தோற்றிருக்கின்றார்கள்.

ராஜிவ் கொலை குற்றவாளி, அணுவுலை, கச்சதீவு என எல்லாவற்றிலும் இவர்கள் தோற்க காரணம், திராவிட கட்சி அரசியல், திராவிட கொள்கை அல்ல, மாறாக திராவிட அரசியல்.

Stanley Rajan's photo.

திராவிட கொள்கை சமூக விடுதலையினை கொண்டது, ஆனால் திராவிட வோட்டு அரசியல் வட இந்திய எதிர்ப்பினையே பிரதானமாக கொண்டது, அதன் 50 வருட கால ஆக்கிரமிப்பில் தமிழ்நாடு தனிநாடு என்பதுபோலவும், ஏதோ ஒரு ஒப்பந்தத்தில் இந்ந்தியாவோடு தனித்துவ அடையாளத்தோடு சுயாட்சி பிரதேசமாக அனுமதிக்கபட்டிருப்பது போலவும் ஒரு பிம்பம் கட்டபட்டிருக்கின்றது

இவர்களை தாண்டி எதுவும் இங்கு வரமுடியாது என மொழிப்போர் நடத்துவார்கள், ஆனால் அணுவுலைகளும் ராணுவ தளங்களும் கச்சதீவு போன்ற சர்வதேச விவகாரங்கள் வரும்போது ஓடிசென்று கதவடைத்துகொண்டு படுத்தே விடுவார்கள், காரணம் இவர்கள் அதிகாரம் அவ்வளவுதான்.

அதற்குமேல் அசிங்கபட அவர்கள் தயாரில்லை. அந்த பழியினை எதிர்கட்சி மீது வீசிவிட்டு நான் தமிழர் தொண்டன் அல்லது தொண்டச்சி என உருகுவார்கள்.

அதனால்தான் கலைஞர், ஜெயாவினை மீறி தமிழர்களால் எந்த பிரச்சினையினைய்ம் சிந்திக்கமுடியாது, இங்கு கட்டபட்டிருக்கும் பிம்பம் அப்படி

உண்மையில் கச்சதீவு பிரச்சினை எப்படி எதிரொலிக்கவேண்டும், கார்கிலில் இந்திய பகுதி ஆக்கிரமிக்கபட்டவுடன் மொத்த இந்தியா சிலிர்த்தது அல்லவா? அருணாசலபிரதேச பக்கம் சீனா நடந்தால் தேசம் தவிக்கும் அல்லவா?

அப்படி மொத்த இந்தியாவும் எங்கே கச்சதீவு என கேட்டால் அது விஷயம், அது நியாயமான முடிவினை நோக்கி நகரும்.

1983 கொழும்பு கலவரங்களை தொடர்ந்து, மொத்த இந்தியாவும் சிங்களனிடம் அங்கே என்ன சத்தம்? என கேட்டவுடன் பொத்திகொண்டு மண்டியிட்டான் சிங்களன், அதன் பின்புதான் திம்பு பேச்சுவார்த்தைக்கே வந்தான்.

அதன்பின் புலி அட்டகாசமும், சக இயக்க படுகொலை, அமைதிபடை, ராஜிவ் கொலை என இந்தியா ஒதுங்கிய பின்புதான் முள்ளிவாய்க்காலில் தனிகாட்டு ராஜவாக கேட்க ஆளில்லாமல் சந்தோஷமாக கொள்ளிவைத்தான் சிங்களன்.

1986 நிலை இருந்திருந்தால், அதாவது மொத்த இந்தியாவும் குரல் எழுப்பினால் முள்ளிவாய்க்கால் நடந்திருக்கும்?

அப்படி தேசிய ஆதரவினை இவர்களால் ஏன் திரட்ட முடியவில்லை, அப்படி திரட்டினால் தமிழகத்தில் சீ..நீங்கள் இவ்வளவுதானா? காங்கிரசும், பாஜகவும்தான் இதனை தீர்க்கமுடியுமென்றால் நீங்கள் ஏன்? என மக்கள் கேட்டால் திராவிட கட்சிகள் நிலை கோணலாகிவிடும்

இதற்கு அஞ்சிதான் செய்யவேண்டிய அந்த காரியத்தினை இவர்கள் செய்யமாட்டார்கள், ஆனால் அதனைத்தான் செய்ய வேண்டும்

மற்றபடி இந்தியாவின் ஒரு மூலையில் இவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் துப்பிகொண்டிருந்தால் திராவிட அரசியலின் தோல்விதான், மாநில கட்சியின் அப்பட்டமாக தெரியுமே அன்றி வேறு ஒன்றுமில்லை.

திராவிட அரசியலே இந்தபாடென்றால், தமிழ்தேசியம் ம்ஹூம் கேட்கவே வேண்டாம் படுதோல்வி நிச்சயம், குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் நிச்சயம் குழிதான்.

இந்த இடத்தில் அப்படியானால் மாநில உரிமை காக்காத மத்திய அரசு எதற்கு? பிய்த்துகொண்டு போய்விடுவோம் என சொல்ல சிலபேர் கிளம்புவார்கள், வாய்விட்டு சொல்லமாட்டார்களே தவிர பேக் ஐடியில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு முதுமலை காட்டில் தலைமறைவாகிவிடுவார்கள்.

காரணம் வாய்விட்டு சொன்னால் தெரியும் நிலமை.

இனி கச்சதீவினை மீட்க முடியுமா? சாத்தியமா என்றால் அது வேறு விஷயம், ஆனால் அதனை மீட்கும் சக்தி ஒரு காலமும் தமிழக தலமைக்கு இல்லை என்பது மட்டும் நிச்சயம், இது யதார்த்தம்.

அது தேசிய தலமையின் கையில் வரும் விஷயம்,

கடந்த முறை காங்கிரஸ் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா கச்சதீவு முடிந்துபோன விஷயம் என்றவுடன் தமிழகத்தில் பெரும் ஒப்பாரி கேட்டது, சீமான் குட்டிகரணம் எல்லாம் அடித்து அழுதார்.

ஆனால் ஒருநாட்களுக்கு முன்புதான் மோடி யாழ்பாணத்தில் ஷோ காட்டினார், வெளியுறவு துறை அமைச்சர் நட்புநாடு இலங்கை என அழுத்தமாக சொல்லி புத்த பூர்னிமா வாழ்த்துக்கள் எல்லாம் தெரிவித்தார். கோவாவில் வந்து சிங்களன் கப்பல் வாங்கினான்

ஏதும் ஒரு எதிர்ப்பு முணகல் வந்திருக்கும்? குறட்டை சத்தம் மட்டும் கேட்டுகொண்டிருந்தது

தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வரை தமிழகத்தில் ஒரு மாற்றமும் வரப்போவதில்லை, இம்மாதிரியான சர்ச்சைகள் தீரப்போவதுமில்லை

இந்த தமிழக சர்ச்சைகள், குற்றசாட்டுகள் என எல்லாம் மாயை.










No comments:

Post a Comment